அப்போதே சொன்ன சுகர்: #நங்கநல்லூர்_J_K_SIVAN
கலிகாலம் 44 இது தான் நம் கலியுகம்.
लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥ ४ ॥SRI MAD BAGAVATHAM 12.2.4
liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ SB 12.2.,4
கலிகாலத்தில் மனிதனின் மனம் குரங்கு என்பதை நிரூபிக்கும். பக்தி ஊசலாடும். ஒருவனின் பக்தி அவன் மனநிலையை, நம்பிக்கையைப் பொறுத்தது. அது ஒருநாள் சிவன் உலகிலேயே உயர்ந்த தெய்வமாக வழிபட வேண்டியவர் என்று நினைக்கும். பத்து நாள் கழித்து வேறே ஒருவர் விஷ்ணு மஹாத்ம்யம் சொன்னதை கேட்டு இனிமேல் நமக்கு ஒரே தெய்வம் மஹா விஷ்ணுவே என்று சிவன்இல்லை என்று சிவ வழிபாட்டை நிறுத்த வைக்கும். ரெண்டு நாள் தான் இது. யாரோ ஒரு சிலர் பேசுவதைக் கேட்டு அம்பாள் சக்தி தான் சிறந்த தெய்வம் என்று பேசும். அப்புறம் கிருஷ்ணன் தான் பெஸ்ட் BEST என்று சொல்லும். அவ்வளவு தான் ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. யாரோ சொல்வார் கிருஷ்ணன் புல்லாங்குழல் படம் வீட்டில் இருக்கக்கூடாது. நரசிம்மர் வேண்டாம் என்றெல்லாம். இதெல்லாம் மனதில் தோன்றும் சாதக பாதக சமாச்சாரங்கள். இதற்கு முக்கியம் வேண்டாம்.
உனக்கு எந்த உருவத்தில் நம்பிக்கையோ அதில் நான் இருப்பேன் என்கிறான் கிருஷ்ணன். சரியாக நமது மகோன்னதமான கோட்பாடுகளை புரிந்து கொள்ளா ததால் வேறு மதங்களில் ஈர்ப்பு உண்டாகிறது. அவன் சரியாக நமது சனாதன தர்மத்தை அறியாமலும் யாரிடமும் கேட்டு ஞானம் பெறாததாலும் இந்த சங்கடம். அடிக்கடி நமது மேன்மையான கோட் பாடுகளை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக தான் திரும்ப திரும்ப சொன்னதையே நானும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்பது. பலபேர் பலமுறை படிக்கட்டும், சிலர் ஒருமுறையாவது படிக்கட்டும்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்தவர்கள் மறக்காமலிருக்கட்டும் என்பதற்காக.
சுக ப்ரம்ம ரிஷி தீர்க்க தரிசி. கலியுகத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள், வாழ்க்கை எவ்வாறு நடக்கும் என்று நன்றாக அறிந்தவர. இன்னும் எழுநாளில் சாகப்போகும் பரிக்ஷித்துக்கு கலிகாலம் எப்படி இருக்கும் என்று எதற்கு தேவை? இருந்தாலும் அவர் அவனுக்கு சொல்வது நமக்காக சொல்லப்பட்ட சமாச்சாரம்.
கலியுகத்தில் வார்த்தை ஜாலங்கள், பொய்யில் கோட்டை கட்டுபவன், சிறந்த கல்விமானாக அறிஞனாக, கலைஞனாக, கவிஞனாக கெட்டிக் காரனாக மதிக்கப்பட்டு, மரியாதை பெற்று, கை தட்டப்படுவான். வெறும் வேஷதாரி, ஞானியாக, பக்திமானாக காட்சி அளிப்பான். காசு பண்ணுவான்.
எவ்வளவு யோக்கியனாக, நாணயமாக, நேர்மையாக இருந்தாலும் பரம ஏழை நிராகரிக்கப்படுவான்.
அவனுக்கு சமூகத்தில் அந்தஸ்து பெருமை இருக்காது. இதனால் தான் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழி உருவானதோ? என்ரூ தோன்றுகிறது மேலே உள்ள சுகப்ரம்மரின் ஸ்லோகம் படிக்கும்போது.
No comments:
Post a Comment