Wednesday, July 6, 2022

ARUPATHTHU MOOVAR


 அறுபத்து மூவர் -  நங்கநல்லூர்  J K SIVAN 

 எறிபத்த நாயனார்
                                           
7.  பூக்கூடையும்  யானையும்
                                                 
தமிழ் நாட்டில் ஒரு அருமையான ஊர்  கருவூர். இப் போது கரூர். கோயம்பத்தூரிலிருந்து 127 கி.மீ தூரம். ஈரோடி லிருந்து 70 கி.மீ.   திருச்சியிலிருந்து  75 கி.மீ. தூரம்.   மிகச் சிறப்பு வாய்ந்த சம்பவங்களுக்கு  ஆதாரமாக இருந்த ஊர். கொங்கு நாட்டின் சிறந்த  ஏழு சிவஸ்தலங்களில் ஒன்று. ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம் தான்  கல்யாண பசுபதீஸ்வரர் இருக்கும்  சிவன் கோவில். 127அடி உயர கோபுரம்.  காமதேனு இங்கே சிவனை வழிபட்டதால் ஆநிலை என்றும் ஒரு பெயர். சிவன் பெயர்  பசுபதீஸ்வரர், 
ஆநிலையப்பர். அம்பாள் சுந்தரவல்லி,அலங்காரவல்லி என பெயர் கொண்டவள்.சுந்தரர் சம்பந்தர் ஆகியோர் தரிசனம் செய்து தேவாரம்  பாடியதால்  பாடல் பெற்ற ஸ்தலம்.

வருஷாவருஷம் பங்குனியில் மூன்று நாள் சூரிய ஒளி நேராக பசுபதீஸ்வரர் மேல் படுகிற அற்புதம்.  கரூர் சித்தர் வாழ்ந்த இடம். இவரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்.  நான் சொல்ல வந்தது  இங்கே நடந்த ஒரு அற்புதம் பற்றி.  

திருத்தொண்ட  தொகையில் ஒரு வரி சுந்தரர் அழகாக எழுதியது :  'இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க் கடியேன்''  என்று.  நான் எறிபத்த நாயனாரின் அடிமை என்கிறாரே யார் அந்த  எறிபத்தர்?

கருவூரில் பரமசிவனை வழிபடும் சிவ பக்தர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் எறிபத்தர். சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்தவர்.  சிவனடியார்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால்  தனது கையில் வைத்திருக்கும் மழுவினால் எதிரிகளைத்  தாக்கி  சிவனடி யார்களைக் காப்பாற்றியவர்.  மழுவுக்கு பரசு என்று ஒரு பெயர். இதை கையில் வைத்திருந்த தனால் தான் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில்  பரசுராமன் ஒரு அவதாரம்.

எறிபத்தர் கருவூரில் வாழ்ந்த காலத்தில்  சிவகாமியாண்டார் என்ற ஒரு  முதிர்ந்த சிவபக்தரும்  இருந்தார். தினமும் மலர் பறித்து மாலையாக்கி பசுபதீஸ்வரருக்கு சாத்துவது அவர் கைங் கர்யம்.  எறிபத்தருக்கு  அவரிடம் மிக்க பக்தி, விஸ்வாசம்.

ஒவ்வொருநாளும் விடியற்காலையில்  சிவகாமியாண்டார்  ஸ்னானம் முடித்து சிவநாமம் சொல்லியவாறு நந்தவனத்திற்கு சென்று புஷ்பங்களை பறித்து  எடுத்து வந்து மாலை கட்டுவார். ஒரு பெரிய கூடை நிறைய தொடுப்பதற்கு பூ கொண்டு வருவார். 
ஒருநாள் அவ்வாறு  விடியற்காலை எழுந்து, ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, நந்தவனத் துக்குள் சென்று, புஷ்பங்களை  பறித்து  தான் சுமந்து வந்த கூடை நிரம்ப , தூக்கிக்கொண்டு பசுபதீஸ்வர ருக்கு மாலை கட்டி சாற்ற ஆலயம் நோக்கி நடந்தார்
.அன்று  மஹா நவமி உற்சவத்திற்கு முதலாவது நாள்.

அந்த நேரம் பார்த்து, அந்த ஊர் ராஜா புகழ் சோழனின் பட்டத்து யானையை  அவிழ்த்து விட்டிருந்தார்கள், அது காவேரியிலே சந்தோஷமாக  முழுகிவிட்டு பெருமிதத் தோடு உலாவிக் கொண்டிருந்தது. அதன் பாகன், காவ லர்கள் நிறைய  பேர் அதோடு நடந்தார்கள். யானை வேகமாக நடந்தது.      

எது எப்போது நடக்கவேண்டுமோ அது அப்படியே நடந்து தானே தீரும்.

யானைப்பாகனோடும், காவலர்களோடும்  வந்த  பட்டத்து யானை  ஒரு வீதியிலே விரைவாக திரும்பியது.  அந்த தெருவில்  தனக்கு முன்னே ஓரமாக மெதுவாக நடந்து சென்ற  சிவகாமியாண்டாரைப் பார்த்து விட்டது. அவர் முதுகில் சுமந்த பெரிய  பூக்கூடை அதற்கு  பிடித்தது. ஒரு கண நேரத்தில்  கூடை  யானையின் தும்பிக்கையில்  சிக்கியது.  யானை  பூக்களை வாரி வீசியது. சிவகாமியாண்டார்  மிரண்டுவிட்டார். இப்படி ஒரு ஆபத்தா?

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...