Monday, July 25, 2022

BAGERATH


 ஐந்தாம் வேதம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 




கங்கை வந்தாள் 



மஹாபாரதம் முழுவதையும்  ''ஐந்தாம் வேதம்''  என்ற தலைப்பில் புத்தகமாக்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது அந்த கண்ணன் அருளால் தான்.  அதில் ஒரு சிறிய பகுதி: 


இக்ஷ்வாகு வம்சம்  ராமர் அவதரித்த  குலம்அதில்  பிறந்த  ராஜா  ஒருவன் தான் பகீரதன். ரொம்ப  நல்லவன் . அவன் தான் ஆகாசத்திலிருந்து கங்கையை கங்கையை  பூமிக்கு கொண்டு  வந்தவன். கங்கைக்கு  அதனால் அவன் பெயரால்  பாகீரதி என்று கூட ஒரு பெயர்.

பகீரதன் முன்னோர்கள்  சகரர்கள்.   கபில ரிஷி சாபத்தால்  அவர்கள்  சாம்பலாகி   தேவலோகம், பித்ருலோகம் செல்ல முடியாத  பாபிகளாகி விட்டனர். ஆகவே  சாபமிட்ட  கபிலர்  ஆஸ்ரமம்  அருகிலேயே பெரிய  சாம்பல் மலையாக கிடந்தனர்.   அவர்களை பித்ருலோகம் சேர்க்கத்தான்  பகீரதன் கங்கை நீரைக் கொண்டு வந்து    பல்லாயிரக்கணக்கான சகரர்களின் (அறுபதினாயிரம் பேர்)  சாம்பலில் (அஸ்தியைகரைத்தால் தான் சாப விமோசனம் கிடைத்து அவர்கள்  தேவலோகம் போக முடியும்இதனால் தான் கங்கையை பூமிக்கு வரவழைக்க  கடும்  தவம் இருக்கிறான்ஹிந்துக்கள் நாம்  ஒருவர் இறந்தவுடன் அவர் சாம்பலை கடலில் கரைப்பது கூட  இந்த   வழக்கத்தால் தான்.


ராஜா பகீரதன் ராஜ்யபாரத்தை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு கங்கையை கொண்டுவர இமயமலை

காட்டுக்கு சென்று ஆயிரம் வருஷங்கள்   கடும் தவம் இருந்தான்.

ஒருநாள்  கங்கை அவன் முன் தோன்றுகிறாள்.  


''
பகீரதா,  என்னை எதற்காக பூமிக்கு அழைக்கிறாய்?


''கங்காமாதா,  
என் முன்னோர்கள்   அறுபதினாயிரம் பேர் கபில முனிவர் சாபத்தால் சாம்பலாகி ஒரு மலை போல் குவிந்து கிடக்கிறார்கள்கங்கை நீர் அவற்றின் மேல் பட்டால் தான்  அவர்கள்  உயிர்ப் பிக்கப்பட்டு, தேவலோகம் செல்லமுடியும் என்பது  கபிலர் சொன்ன  சாபவிமோசனம் . ஆகவே  ''தாயே உன்னை நோக்கி தவமிருந்தேன். ''

''பகீரதா, நீ என்னை வரவழைப்பது சரி. நான் கீழே இறங்கி வந்தால் என் வேகத்தை சக்தியை பூமி தாங்க முடியாதே''

''கங்கா மாதா,  நீ தானம்மா அருள் புரிய  வேண்டும்அதற்கு என்னசெய்வது என்று எனக்குத்  தெரிய வில்லையே''

 

''பகீரதாநீலகண்டன், பரமேஸ்வரன், ஒருவர் தான் என் சக்தியைத்   தாங்கக்  கூடியவர். அவரிடம்  போய்  வேண்டிக்கொள். அவர் உனக்கு வரமளித்தால் நான்  ஆகாசத்திலிருந்து  உனக்காக இறங்குகிறேன்.

பகீரதன்  இப்போது  பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்து அவர் அருள் பெற்று கங்கை பூமியில் இறங்குகிறாள் .


 ''பரமேஸ்வரா,  என் வேண்டுகோளுக்கிணங்கி  கங்காதேவி ஆகாசத்திலிருந்து பூமியில் இறங்கும்போது  அந்த வேகத்தை நீங்கள் ஒருவர் தான்  தாங்கி மெதுவாக அவளை தரையில் இறங்கச் செய்யவேண்டும்.'' என்று  வேண்டுகிறான் பகீரதன்.


''
சரியப்பா  நான்  பார்த்துக் கொள்கிறேன், கங்கை இறங்கட்டும்''  என்கிறார்  பரமசிவன்.

 

கங்கை பாகீரதியாக  பூமிக்கு இறங்கி  பரமேஸ்வரனின்  விரிந்த கூந்தலில் இறங்குகிறாள் . ஹரனின் கேசத்தை  தான் பூமியில் இறங்கும் இடமாக கொண்டதால் அவள் இறங்கிய இடம்  ஹர் த்வார்ஹ்ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.  கங்கை பாகீரதியாக ஓடி  அலக்நந்தா  நதியோடு  தேவப்ரயாகையில்  சேர்கிறாள்.

கங்கை நதி சகரர்களின் சாம்பலை கரைத்து அறுபதினாயிரம் முன்னோர்களும்  பகீரதனை 

வாழ்த்தி ஆசிர்வதித்து  மேலுலகம் செல்கிறார்கள்.

ஐந்தாம் வேதம் புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம்:  வாட்ஸாப்ப் 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...