Wednesday, July 6, 2022

THIRUVANNAMALAI

 திருவண்ணாமலை யாத்திரை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


திருவண்ணாமலையை  ஒருநாளில்  பார்க்கவேண்டுமானால்  இதை மட்டும்  முடிந்தவரை  தரிசிக்க முயலவேண்டும்.  சென்னையிலிருந்து 165 கிமீ  தூரம் என்பதால்  எப்படியும் 6-7 மணி நேரம்  குறைந்தது  பிரயாணத்தில் சென்று விடும்.  விடிகாலையில் புறப்பட்டால். போகும் வழி எது என்று தீர்மானித்து அங்குள்ள கோவில்களை சீக்கிரம் தரிசிக்க இயலும். 

சென்னை தாம்பரம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் வழியாக  செஞ்சி திருவண்ணாமலை சாலையில் செல்வது சீக்கிரமாகும்.  வழியில் பிரயாண தாமதம் அதிகம் இல்லாதது எனலாம். 

காஞ்சிபுரம் வழியாக  வந்தவாசி போளூர் வழியாக திருவண்ணாமலை போனால் வழியில் பல க்ஷேத்ரங்களை தரிசிக்கலாம்.  ஆனால்  திருவண்ணாமலையில் நேரம் குறைந்து விடும்.  ஆகவே  திருவண்ணாமலைக்கு முதலில் சென்று அங்கே  அதிக நேரம் செலவழிக்கலாம். பார்க்க  வேண்டியவை நிறைய இருக்கிறது ஆலய வளாகத்திற்குள்ளேயே, மலையை சுற்றியே.

கோவிலுக்குள் ஐந்து பிரகாரங்கள். கோவில் கடைவீதி ஆறாவது பிரகாரம்.  மலையை சுற்றி வலம்  வரும் பாதை 7வது பிரகாரம்.

ரெண்டாம் பிரகாரத்தில் உண்ணாமலை அம்மன் சந்நிதி. 
இங்குள்ள   சுப்ரமணிய ஸ்வாமி சந்நிதி  விசேஷமானது  அருணகிரியார், சேஷாத்திரி ஸ்வாமிகள் அடிக்கடி  இங்கே அமர்ந்து தியானம் செய்தவர்கள்.  வெட்டவெளியில் ஒரு  கல் திரிசூலம் ஆகாயத்தை நோக்கி நிற்பதை தரிசிக்கலாம். 

மூன்றாம் பிரகாரத்தில்  வசந்த மண்டபம்.  காஹஸ்தீஸ்வரர் சந்நிதி தரிசிக்கலாம். 

ஐந்தாவது பிரகாரத்தில் தான் நுழைவாயில், த்வஜஸ்வாதம்பம். ஆயிரங் கால் மண்டபம். 
அருணகிரி நாதர் மண்டபம், கல்யாண லிங்கேஸ்வரர் சந்நிதி அருகே உள்ளது.  கம்பத்திளையனார் கோவில் தான் முருகன் தரிசனம் பெற உன்னதமானது. 

கிழக்கு  வாயில் கோபுரம் தான் ரொம்ப உயரமானது 217 அடி . வல்லாள ராஜா கோபுரம் என்று சொல்வதுண்டு. மற்ற கோபுரங்களின் பெயர்கள் தெற்கே, திருமஞ்சன கோபுரம், மேற்கே பேய் கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம்  வடக்கே. மூலவர் சந்நிதியை இணைப்பது கிளி கோபுரம். அருணகிரிநாதர் கிளியாகி இங்கே  தரிசனம் செயது இன்னமும் தினமும் அருணாச்சலேஸ்வரரை முருகனை தரிசிக்கிறார் என்பது ஐதீகம். 

கோவிலைச்  சுற்றி   கிட்டத்தட்ட 14 கி.மீ.  தூரம்  கிரிவல பாதை.  அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இந்திரலிங்கம்,அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம்.கிரிவலம்  நடக்க முடியாதவர்கள்  வண்டியிலேயே சென்று
 அங்கங்கே  லிங்கங்களை தரிசிக்க இயலும். 

ராஜகோபுரம் அருகே  சிவகங்கை தீர்த்தம் எனும் குளம்.   தெற்கு கோபுரத்தின் அருகே இருக்கும் தீர்த்தம் ப்ரம்ம தீர்த்த குளம்.

கிரிவல பாதையில் தரிசிக்க வேண்டிய  ஸ்தலங்கள்:  ரமணாஸ்ரமம். ஸ்கந்தாஸ்ரமம். யோகி ராம் சூரத் குமார்  ஆஸ்ரமம்,   கட்டாயம் சேஷாத்திரி ஸ்வாமிகள்  ஆஸ்ரமம்.  மற்றவை நிறைய இருக்கிறது நேரம் இருப்பவர்கள்  அருகே விசாரித்துக்கொண்டு செல்லலாம்.  சற்று தள்ளி  விருபாக்ஷ குகை இருக்கிறது. அங்கே ரமணர் தங்கியிருந்த குகைக்கோயிலை தரிசிக்கலாம்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...