உனைக் காணாத கண் வேண்டாம் கண்ணா - நங்கநல்லூர் J K SIVAN கோபிகளின் துயரம் - 12- 15 ஸ்லோகங்கள்
दिनपरिक्षये नीलकुन्तलै- र्वनरुहाननं बिभ्रदावृतम् ।
घनरजस्वलं दर्शयन् मुहु- र्मनसि न: स्मरं वीर यच्छसि ॥ १२ ॥
dina-parikṣaye nīla-kuntalair vanaruhānanaṁ bibhrad āvṛtam
ghana-rajasvalaṁ darśayan muhur manasi naḥ smaraṁ vīra yacchasi
கிருஷ்ணன் தன்னை அழகு படுத்திக் காட்டிக்கொள்ள நினைத்ததே இல்லை, அதற்கு அவனுக்கு நேரமே கிடைக்கவில்லை. அவன் எப்படி இருந்தானோ அப்படியே காட்சி அளித்தான். கோபியர்கள் அவனைப் பிருந்தாவனத்தில் எப்படி கண்டார்கள்?
கருநீல வண்ணன், சுருண்ட கருத்த திரண்ட கேசம், சுருள் சுருளாக குழல்கள், அவை காற்றிலாடி அவன் முகத்தை அவ்வப்போது மறைக்கும்என்பதால் அன்னை யசோதை அவற்றை மொத்தமாக வாரி சேர்த்து, இறுக்கமாக தலையில் கொண்டையாக கட்டி, அதைச் சுற்றி மணிமாலைகளை rubber band மாதிரி இறுக்க கட்டிவிடுவாள். ஒரு அழகிய மயிலிறகை அதில் செருகி வைத்துவிடுவாள். நெற்றியில் கோபி சந்தனம் இல்லாத நாளே கிடையாது. முகம் உடல் முழுதும் புழுதி. இடுப்பில் மஞ்சள் வஸ்திரம். அதன் மேல் ஒரு மணிமாலை பெல்ட் belt மாதிரி கட்டி இருப்பாள். கழுத்தில் மணி, மலர் மாலைகள். கண்ணா, உனது இந்த திவ்ய சுந்தர மன்மத ஸ்வரூபம் போதாதா? எங்கள் தலைவா! என்கிறார்கள் கோபியர்கள்.
प्रणतकामदं पद्मजार्चितं धरणिमण्डनं ध्येयमापदि ।
चरणपङ्कजं शन्तमं च ते रमण न: स्तनेष्वर्पयाधिहन् ॥ १३ ॥
praṇata-kāma-daṁ padmajārcitaṁdharaṇi-maṇḍanaṁ dhyeyam āpadi
caraṇa-paṅkajaṁ śantamaṁ ca te ramaṇa naḥ staneṣv arpayādhi-han
चरणपङ्कजं शन्तमं च ते रमण न: स्तनेष्वर्पयाधिहन् ॥ १३ ॥
praṇata-kāma-daṁ padmajārcitaṁdharaṇi-maṇḍanaṁ dhyeyam āpadi
caraṇa-paṅkajaṁ śantamaṁ ca te ramaṇa naḥ staneṣv arpayādhi-han
கிருஷ்ணன் கடவுள் அவதாரம் என்று தெரியாமலேயே அவனை நேசத்தோடு பாசத்தோடு வணங்கி யவர்கள் பிருந்தாவன கோபியர்கள். ஒரு கணமும் அவனை விட்டு பிரியாதவர்கள். கண்ணன் திருப்பாதங்களை வணங்கினார்கள். ப்ரம்மதேவனே வணங்கும் திருவடிகள் அவை என்று தெரியாத வர்கள். கண்ணன் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு என்ன குறை? கேட்டதெல்லாம் கொடுப்பதல்லவா அந்த தாமரைத் திருவடிகள். கண்ணுக் கினியவை. ஸர்வ திருப்தி அளிப்பவை. துன்பத்திலும் துயரத்திலும் இருக்கும்போது அவற்றை த்யானம் செய்தால் போதுமே. கண்ணா, உன் திருவடிகள் எங்கள் இதயத்திலும் நெஞ்சிலும் என்றும் நிறைந்து பதியவேண்டுமப்பா.
सुरतवर्धनं शोकनाशनं स्वरितवेणुना सुष्ठु चुम्बितम् ।
इतररागविस्मारणं नृणां वितर वीर नस्तेऽधरामृतम् ॥ १४ ॥
इतररागविस्मारणं नृणां वितर वीर नस्तेऽधरामृतम् ॥ १४ ॥
surata-vardhanaṁ śoka-nāśanaṁ svarita-veṇunā suṣṭhu cumbitam
itara-rāga-vismāraṇaṁ nṛṇāṁ vitara vīra nas te ’dharāmṛtam
itara-rāga-vismāraṇaṁ nṛṇāṁ vitara vīra nas te ’dharāmṛtam
கிருஷ்ணா, நீ மாயாஜாலக்காரனடா. என்னென்னவோ வித்தை காட்டுகிறாய். எல்லோரும் கட்டுண்டு மெய்ம்மறந்து போகிறோம். எங்கள் துக்கம், கஷ்டம், துயரம் எல்லாம் காணாமல் போகிறது. உன் குரல் தேனோடு கலந்த தெள்ளமுது. உன் இதழ்களைத் தொட்டதினால் அந்த சிறிய மூங்கில் குழாய், வெளியே காற்றில் பரவ விடும் வேய்ங்குழல் நாதம் இருக்கிறதே அது சர்வ சக்தி படைத்தது. ஆஹா சகல உயிர்களையும் சிலையாக்குகிறதே.
अटति यद् भवानह्नि काननं त्रुटि युगायते त्वामपश्यताम् ।
कुटिलकुन्तलं श्रीमुखं च ते जड उदीक्षतां पक्ष्मकृद् दृशाम् ॥ १५ ॥
कुटिलकुन्तलं श्रीमुखं च ते जड उदीक्षतां पक्ष्मकृद् दृशाम् ॥ १५ ॥
aṭati yad bhavān ahni kānanaṁ truṭi yugāyate tvām apaśyatām
kuṭila-kuntalaṁ śrī-mukhaṁ cate jaḍa udīkṣatāṁ pakṣma-kṛd dṛām
கிருஷ்ணா, நீ எவ்வளவு எங்களுக்கு இன்றியமையாதவன் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கி றோம் கேள்.
தினமும் காலையில் நீ பசுக்களோடும் கன்றுகளோடும் நண்பர்களோடும் காட்டுக்கு மேய்ச்சலுக்கு போகிறாயே . எங்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் தெரியுமா?
அடாடா கிருஷ்ணன் திரும்பி வர சாயந்திரம் ஆகிவிடுமே. எப்போது சாயந்திரம் வரும்? என்று ஒவ்வொரு த்ருடி யும் (த்ருடி என்பது ஒரு வினாடியில் 1700ல் ஒரு பங்கு!!) 1/1700 th Part of a second ) ஒரு யுகமாக எங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.
எங்களுக்கு ஒரே ஒரு வருத்தம் என்ன தெரியுமா? வருத்தம் மட்டும் அல்ல கோபமும் கூட? யார் மீது தெரியுமா? எல்லாம் அந்த ப்ரம்மா மேல் தான். பின்னே என்ன? எதற்கு இந்த கண்களை சிமிட்ட பண்ணினான்? கண்ணை சிமிட்டும் நேரத்தில் உன் அழகை பார்க்காமல் வீணாகிறதல்லவா? கண் இமைகள் எதற்காக மூடி,மூடி திறக்கவேண்டும்?
தொடரும்
No comments:
Post a Comment