கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --தாகூர்
82. காலம் முடிவதற்குள்....
82. Time is endless in thy hands, my lord.
There is none to count thy minutes.
Days and nights pass and ages bloom and fade like flowers. Thou knowest how to wait.
Thy centuries follow each other perfecting a small wild flower.
We have no time to lose, and having no time we must scramble for a chance .
We are too poor to be late.
And thus it is that time goes by while I give it to every querulous man who claims it,
and thine altar is empty of all offerings to the last.
At the end of the day I hasten in fear lest thy gate to be shut;
but I find that yet there is time.
கிருஷ்ணா, காலம் என்பது மனிதரை வரையறைக்குள் கட்டுப்படுத்தி முடிப்பது. ஆனால் அது எல்லையில்லாதது உன்னைப் பொறுத்தவரை. ஆரம்பமோ, முடிவோ இல்லாத உன் விஷயத்தில் காலம் ஏது, நேரம் ஏது, மணியேது, வினாடியேது? . நீ காலம் நேரம், இடம், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன். உன்னால் படைக்கப்பட்டவர்களுக்கு தானே இரவு பகல், நாள், வருஷம் முதுமை முடிவு எல்லாமே. யுகங்கள் கூட பூத்து மலர்ந்து உதிர்பவை தான் . ஆகவே காலத்தை கடந்த உனக்கு தான் காத்திருப்பது என்றால் என்னவென்றே நன்றாக தெரிந்த விஷயம் தான்.
எங்களுக்கு காலம் வீணாகிவிடக்கூடாது. இருப்பதற்குள் எல்லாம் அனுபவித்து விடவேண்டும். எல்லாம் சீக்கிரம் சீக்கிரமே. காலம் தாழ்த்துவது கூடாதே. எப்போதும் எதையாவது குறை சொல்லுபவனுக்கு கூட என்னால் ஆனதை கொடுத்து அவன் நேரத்தை அனுபவிக்க செய்வேன். பகவானே உன் பூஜை மேடை காலியாகிவிட்டதடா.. இருக்கும் ப்ரசாதத்தையெல்லாம் வாரிக் கொடுத்து விட்டாகிவிட்டது. எங்கோ யாருக்கோ அது திருப்தி அளிக்கட்டும்.
பொழுது சாய்கிறது. இருள் சூழ்கிறது. இதோ உன் சந்நிதி கதவு மூடியாகிவிடுமோ ? அதற்குள்.....ஓடுகிறேன்..... நல்லவேளை இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறதப்பா.... அதற்குள் உன்னை தரிசித்து என்னாலானதை சமர்ப்பிக்கிறேன்...எங்கோ யாருக்கோ அது திருப்தி அளிக்கட்டும்...
No comments:
Post a Comment