கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --தாகூர்
85. ஆயுதங்கள் எங்கே?
85. When the warriors came out first from their master's hall, where had they hid their power? Where were their armour and their arms?
They looked poor and helpless, and the arrows were showered upon them on the day they came out from their master's hall.
When the warriors marched back again to their master's hall where did they hide their power?
They had dropped the sword and dropped the bow and the arrow; peace was on their foreheads, and they had left the fruits of their life behind them on the day they marched back again to their master's hall.
அடேயப்பா இத்தனை போர் வீரர்களா? தலைவனின் பாசறையிலிருந்து வெளியே வருகிறார்களே. உள்ளே ஏதோ ரஹஸ்ய கூட்டம். கலந்தாலோசனை திட்டம் தீட்டினார்களா . வெளியே வந்தபோது ஒருவரும் ஒன்றும் பேசவில்லையே. என்ன நடந்தது உள்ளே? எங்கே அவர்கள் வீரம், சக்தி எல்லாம்? ஒருவரிடத்திலும் எந்த ஆயுதமும் காணோமே. என்ன செய்தார்கள் அதையெல்லாம்? உள்ளேயே ஒளித்து வைத்துவிட்டார்களா?பரிதாபமாக காட்சியளிக்கிறார்களே. அவர்கள் மேல் எதற்காக இத்தனை அம்புமழை பொழிகிறது?
இதோ மறுபடியும் அத்தனை வீரர்களும் தலைவனின் ஆலோசனை மண்டபத்துக்குள் செல்கிறார்கள்.எங்கே அவர்கள் சக்தி ஒளித்து வைக்கப்பட்டுள்ளது? விளைக்காணோம், அம்பைக்காணோம், கத்தி கபடா , கேடயம் ஏதுவாகும் தென்படவில்லையே. அமைதி சாத்வீகம் அவர்கள் நெற்றியில் பெரிதாக எழுதி ஒட்டப்பட்டுள்ளதோ?
இத்தனை வருஷம் உழைத்த பலனை, எல்லாம் உதறிவிட்டா உள்ளே தலைவனைப் பார்க்க செல்கிறார்கள்.ஆயுதம் ஏந்தாமை தான் உயர்ந்த சக்தியோ, பலமோ,இதைத்தான் அந்த தலைவன் போதித்தானோ?நமக்கு அப்படி ஒரு அஹிம்சாமூர்த்தி கிடைத்ததை தாகூர் ஜாடையாக சொல்கிறாரோ? கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது இதுதானோ?
No comments:
Post a Comment