பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
51. இரு ஆத்மாக்களின் சங்கமம்.
1927 முடிவில் நமது தேசமெங்கும் ஒரு புத்துணர்ச்சி. இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். எப்பாடு பட்டாவது அதை அடைந்தே தீருவோம். அமைதி வழி, அஹிம்சா வழியில் மட்டுமே என்ற காந்திஜியின் பின்னால் நாடு முழுதும் தொண்டர்கள். டிவி, போட்டோ கவரேஜ், வீடியோ, மீடியா, பேனர், கட் அவுட் என்று எதுவுமே தெரியாத காலம். காந்தி நாடு முழுதும் ரயிலில் மூணாம் கிளாஸில் தான் பிரயாணித்தார்.
''இங்கே காஞ்சி பரமாச்சார்யர் எங்கே தங்கியிருக்கிறார்?''
பசுமாட்டுத் தொழுவத்தில் வாசலில் பெரிய கும்பல் சேர்ந்துவிட்டது.
வாசலில் மஹாத்மா காந்தி வந்திருக்கிறார் என்ற விஷயம் உள்ளே இருந்த பெரியவாளுக்கு சென்றதும் வாசல் வந்து நின்ற மகாத்மாவை பரமாச்சாரியார் வெளியே வந்து வரவேற்றார். காந்திக்கு இது ஒரு புது அனுபவம்.
மஹா பெரியவாளுக்கு இந்த மஹா புருஷன், நமது பாரத தேசம் செய்த புண்யத்தால் தோன்றிய , வெகு எளிமையின் சின்னமாக, சத்ய ஸ்வரூ பமாக நாட்டின் சுதந்திர விழிப்பின் தலைவன், இந்த மாபெரும் தேசத்தில் ஒரு ஏழை விவசாயியின் கோலத்தைக் கொண்டவ
மகாத்மாவுக்கோ தெய்வீகத்தின், தெய்வத்தின், வேதகால உருவாக காட்சியளிக்கும் ஒரு பரமாச் சார்யரை சந்தித்ததில் ஆனந்தம்.
''தாங்கள் அமர வேண்டும்'' என்றார் மஹா பெரியவா ஆங்கிலத்தில்.
தனது மதிப்பையும் மரியாதையும் வணக்கத்தையும் காந்திஜி ஆச்சர்யருக்கு தலை குனிந்து மனப்பூர்வமாக அளித்தார். அவரும் பெற்றுக்கொண்டார். அவர் அருகிலேயே காந்திஜி தரையில் அமர்ந்தார். சுற்றியிருந்தோர் அமைதியாக தூரத்தில் வெளியில் நின்றுகொண்டு இந்த அற்புதத்தை கண்ணாரக் கண்டு ஆனந்தித்தனர்.
நிசப்தத்தில் பரிபூர்ண அமைதியில் இரு உயர்ந்த உள்ளங்கள் கலந்தன. ஒன்றின. சில நிமிஷ ஆன்ம விசாரத்திற்குப் பிறகு, சம்பாஷணை துவங்கியது.
''ஸம்ஸ்க்ரிதத்திலேயே பேசுவோமா?'' என்றார் மஹா பெரியவா .
''நீங்கள் ஸம்ஸ்க்ரிதத்திலேயே பேசுங்கள். நான் புரிந்துகொள்ள முடியும். நான் ஹிந்தியில் பதில் சொல்கிறேனே.'' என்றார் தேச பிதா.
''ஆஹா, அப்படியே பேசுவோமே. எனக்கும் அந்த பாஷையில் நீங்கள் பேசுவது புரிந்து கொள்ள முடியும்.''
மூன்றாம் மனிதர் ஒருவர் இல்லாமல் இரு மனித ரூப தெய்வங்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சம்பாஷித்தனர். இன்று வரை என்ன பேசினார்கள் இருவரும் என்று ஒருவருக்கும் தெரியாது.
காந்திஜியோடு உடன் வந்திருந்த ராஜாஜி வெளியே மற்றவர்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தார். மாலை நேரம் 6 மணியாகப் போகிறது. காந்திஜி இரவு உணவு அருந்தும் நேரம் அது. 6 மணிக்குப் பின் அவர் எந்த உணவும் அருந்த மாட்டாரே. ராஜாஜிக்கு கவலை.மாலை ஆறு மணிக்கு சில நிமிஷங்கள் முன்பு மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார். இருவரையும் வணங்கிவிட்டு
''பாபுஜி, நீங்கள் உணவு அருந்தும் நேரம்'' என்று நினைவூட்டினார்.
கைகளை உயர்த்தி, ''நிறுத்து'' என்ற சைகையில் காந்திஜி ராஜாஜியிடம் காட்டி விட்டு,
''சுவாமிஜி நான் விடைபெறுகிறேன் நன்றி''
''எனக்கும் ரொம்ப சந்தோஷம். இந்தாருங்கள்'' . ஒரு பொன்னிற ஆரஞ்சு பழத்தை நீட்டினார் மஹா பெரியவா..
''எனக்கு ஆரஞ்சு ரொம்ப பிடிக்கும். மீண்டும் நன்றி'' என்று புன்னகையோடு பெற்றுக் கொண்டு சென்றார் காந்திஜி.
அன்று கோயம்பத்தூரில் ஒரு கூட்டம். காந்திஜி-மஹா பெரியவா என்ன பேசினார்கள் என்று நிறைய பேர் ஆவலாக கேட்டதற்கு தேச பிதா கூட்டத்தில் சொன்னது: '' இது உண்மையிலேயே எனக்கு ஆன்ம திருப்தி அளித்த ஒரு சந்திப்பு. எனது எத்தனையோ கேள்விகளுக்கு ஜகத் குருவிடமிருந்து விடை கிடைத்தது''
பல வருஷங்களுக்கு அப்புறம், 1968ல் நவம்பர் மாதம் ஒரு விழாவில் மஹா பெரியவாளிடம் சிலர் நீங்கள் மகாத்மாவோடு கேரளாவில் நெல்லிச்சேரியில் சந்தித்து பேசியது பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.
'' காந்திஜி பாலக்காடு வருவதற்கு சில நாட்கள் முன்பு கொல்லப்பட்ட ஒரு ஆர்ய சமாஜ் துறவி சுவாமி ஸ்ரத்தானந்தாவைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது காந்திஜி இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்திலும் நேரிடலாம். கொலையாளிகள் மீது எனக்கு எக்காலத்திலும் வெறுப்போ,
பரமாச்சார்யர் தொடர்ந்தார். ''இந்த 'பூலோகத்தில் இப்படி ஒரு அபூர்வமான பகைவனுக்கும் அருள்வதற்கு நெஞ்சம் வேண்டும்'' என்று பாரதியார் வாக்குக்கு உதாரணமாக திகழ்ந்தவர் மஹாத்மா காந்தி '' என்று தோன்றியது. சத்தியத்தை கடைப்பிடித்தவர் ஒருவரை சந்திப்பது அரிது '' என்றார் .
No comments:
Post a Comment