கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --
தாகூர்
80. என் ஆவி நீ யானால் நீராவி நானாவேன்.
80. I am like a remnant of a cloud of autumn uselessly roaming in the sky, O my sun ever-glorious!
Thy touch has not yet melted my vapour, making me one with thy light, and
thus I count months and years separated from thee.
If this be thy wish and if this be thy play, then take this fleeting emptiness of mine,
If this be thy wish and if this be thy play, then take this fleeting emptiness of mine,
paint it with colours, gild it with gold, float it on the wanton wind and spread it in varied wonders.
And again when it shall be thy wish to end this play at night,
And again when it shall be thy wish to end this play at night,
I shall melt and vanish away in the dark, or
it may be in a smile of the white morning, in a coolness of purity transparent.
கிருஷ்ணா, உனக்குத் தெரியாதது எதுவுமில்லை. இருந்தாலும் சொல்கிறேன் கேள். நான் யார்? இந்த இலையுதிர் காலத்தில் வானத்தில் அதோ தெரிகிறது பார் ஒரு சின்ன மேக கூட்டம். மிதந்து கொண்டு போகும் அதில் நான் ஒரு மீந்து போன துண்டு.
ஒளிரும் கண்ணைப்பறிக்கும் சூரியதேவா, நீ இன்னும் என்னைத் தொடவில்லையே. நீராவியை உண்டாக்கி மழை தருபவன் நீ யாயிற்றே. ஏன் இன்னும் என்னை உருக்கி நீராவியாக்கவில்லை? உன் ஒளிக்கதிர்களோடு என்னையும் இன்னும் சேர்த்துக் கொள்ளவில்லையே . உன்னிடமிருந்து பிரிந்து எத்தனை நாளாக, வருஷங்களாக, உன்னோடு சேர காத்திருக்கிறேன், நாட்களை எண்ணுகிறேன்.
இது தான் உன் விளையாட்டா ? இது தான் உனக்கு பிடிக்குமா? . சரி அப்படியென்றால் என் வெறுமையையும் நீயே .எடுத்துக் கொண்டுவிடு. ஜம்மென்று அதற்கு வண்ணங்கள் தீட்டு. தங்க முலாம் பூசு. காற்றில் ஆடவிடு. திசை அறியாமல் உலவட்டும். எத்தனையோ அதிசயங்களில் அதுவும் ஒன்றாகட்டுமே.
ஒருவேளை இந்த விளையாட்டு போதும் என்று ஒரு இரவு உனக்கு மனதில் தோன்றினால் அந்த கருமை இருளிலே நானும் உருகி ஆவியாகி கலந்து விடுகிறேன்.காணாமல் போகிறேன்.
இருளிலோ பொழுது விடிந்து நீ பளிச்சென்று கண்ணைப் பறிக்க ஒளி வீசும்போது அதில் ஐக்கியமாகிவிடுகிறேன். உன் மோகனச் சிரிப்பாகிறேன் . பரிசுத்தத்துக்கு, புனிதத்துக்கு ஒரு குளுகுளு கிடைக்கட்டும். எங்கும் பரவட்டும்.
No comments:
Post a Comment