Thursday, July 22, 2021

A DISCUSSION


 


விஸ்வரூபனோடு  ஒரு விவாதம்... 
நங்கநல்லூர்  J  K  SIVAN  -


அடிக்கடி கிருஷ்ணனோடு பேசுவேன். இன்று வகையாக மாட்டிக்கொண்டான் என்னிடம். விடுவேனா அவனை? பிச்சு  உதறிட்டேன்.

நான்: ''நீ  தான் குறையொன்றுமில்லாத  கோவிந்தனா... ரொம்ப ரொம்ப பெரிய  ஆளுப்பா  நீ.  உனக்கு குறை எதுவும்  கிடையாது. ஆனா..'

'கிருஷ்ணன்.  ''என்ன ஆனா?  சொல்லு'' 

நா  ''எங்களுக்கு  இல்லாத  குறையே  இல்லை?

கி: ''குறை என்றால் என்ன?'' -நா:  ''ஏக்கம். இல்லாததை தேடுவது.. கிடைக்காததை நினைத்து  அழுவது, தவிப்பது , வாடுவது... இன்னும் என்ன குறை வேண்டும் சொல்?''

கி:  ''எனக்கு குறை எதுவும் உங்களுக்கு வைத்ததாக  தெரியவில்லையே அப்பனே''  நீயாக எதையாவது வரவழைத்தது கொண்டால் நான் பொறுப்பா?

நா:  '' அடேடே இப்படி சொல்லி தப்பிக்க எண்ணமா ? என்னோடு வா காட்டுகிறேன்.
கிருஷ்ணன் கூட்டிக்கொண்டு பல  வீடுகள், இடங்கள், சிலவற்றை பார்ப்போம்

கி:    ''இது என்ன. என்னை வீடு வீடாக இழுத்துக் கொண்டு போகிறாய்.  நீ சொல்ற குறை எந்த ரகம்?''.

ந:  ''ஏக்கம் தான். வேறே என்ன.  அதோ பார்  கிருஷ்ணசாமி நாயக்கர்  நிற்கிறார். உன் பேர் தானே  உன்னை மாதிரி குறையொன்று மில்லாமலா நிற்கிறார்?. நிலம் கொஞ்சம் இருந்தது. கூட இருந்ததுகள் படிக்காத நாயக்கர் கிட்டே கையெழுத்து போட வெச்சி வித்து  தரேன் என்று சொன்ன காசை தரவில்லை. வீடு இல்லாமல் ஒரு சத்திரத்தில் இருந்தார். அதையும் இடித்து இப்போ கோவில் வாசலில் நிற்கிறார். அவ்வப்போது இலவச அன்னதானம் சாப்பிட்டு பக்தர்கள் தரும் பிச்சை காசில் வாழ்கிறார். மனசில் வீடு வாசல், சுகம் இல்லையே  என்ற ஏக்கம். கோவிந்தா;.. இது கோவிந்தபுரம்...  நிறைய பேர் இருக்கிறாரகளே அவ்வளவு பேருக்கும் பூரண திருப்தியா பக்தியா? . நிறைய  பேருக்கு ஏக்கம்.  பிள்ளை பொண்ணு கவனிக்கல. வெளியூர் போயிட்டுது. இல்லை வீட்டை விட்டு விரட்டிடுத்து.  சொத்து சுகம் எல்லாம் அதுகளுக் காக செலவழிச்ச்சு.  நிம்மதி கிடைக் குமா என்கிற ஏக்கம் பாலு மாமா மாமி க்கு. அதோ குண்டா, குள்ளமா சட்டை யில்லாம. அவர் தான்.''
சுப்ரமணியத்துக்கு பாட்டு பிடிக்கும். நிறைய கேட்பான். எவ்வளவு தூரம் இருந்தாலும் கிருஷ்ண கான  சபா போவான். ஒருநாள் அவன் காது கிட்ட பேரன் ஒரு படாஸ் வெடிச்சான் அவ்வளவு தான். அந்த   சப்தத்தோடு வேறு எந்த சப்தமும் அதுக்கப்புறம் கேக்கலே.. செவிடு. மயான அமைதி.  அவன் ஏக்கம்  இனிமே  மதுரை மணி கேக்க முடியாதேன்னு..... என்ன சொல்றே?
இந்த சின்ன குழந்தையை பார் திருவல்லிக் கேணி ராயர் சந்துல  மாதவ ராவ் பேத்தி...  பிறந்ததுலேர்ந்து பேசலே. ...வயசு  நாலு இப்போ. தவிக்கிறார் மாதவ ராவ்.அவர் குடும்பமும் சேர்ந்து தான்.  அவருக்கு  டைலரிங் வேலை. ''ராவ் டைலர்ஸ்''    அத்தனை பேர் பெற்று நிறைய வருமானம்.    திடீர்னு வலது கை  மரக்கட்டை யாயிடுத்து. உணர்ச்சி இல்லை. குடும்பம் படுத்துடுத்து. சொல்லமுடியாத வறுமை,எல்லா துக்கமும் ஏக்கமும் சேர்ந்த ஒரு குடும்பம் இது.
அதோ பார்  அது தான் ஜெயராம சர்மா.  நீ இருக்கிற திருப்பதிக்கு எத்தனை தடவை மொட்டை போட்டார் தெரியுமா? நீ தான் குல தெய்வம். அவருக்கு. மொட்டை போட்டவுடன்  மறுபடியும் காடா முடி வளரும் வரை உஞ்ச வ்ருத்தி. மறுபடியும் திருப்பதிலே உனக்கு மொட்டை. ஏன்? என்ன குறை? என்ன ஏக்கம்.?  வாரிசு இல்லை இந்த சர்மா சாம்ராஜ்யத்துக்கு. பிள்ளை அமெரிக்கால இருக்கான். வரதே  குதிரைக்கொம்பு. வந்தாலும் ரிஷி கர்பம் ராத்தங்காது. மூணு நாலு நாளிலே திரும்பிடு வான். அவன் பொண்டாட்டி வேணிக்கு  இங்கே முள்ளு மேலே வாசம்.  இது தான்  பணம் பண்ணும் வேலை. ஏன் இப்படி ஒரு மனத்திலே பாசம் இன்னொண்ணுளே  மோசம் னு வைச்சிருக்கே ன்னு அவருக்கு ஏக்கம்.?
 
இந்த கிராமத்திலே பார் ஒரு பண்ணை, அதிலே   ஓனர்  மாமா  இல்லை. படமாயிட்டார். அவர் பிள்ளை தாமோதரன் தான். அதுவும் உன் பேர் தான்.  அவனுக்கு  லல்லி மேலே ஆசை.  யாரு தெரியுமா  பட்டாச்சாரி பொண்ணு. குடுப்பாளா.  அந்த பெண்ணும் நாணி கோணி அவனை பிடிச்சதை காட்டிண்டது. அதுக்கு எங்கேயோ ராகவாச்சாரி ன்னு ஒருத்தனுக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம். மூணு பிள்ளை இப்போ. ஆனா தாமோதரனுக்கு இன்னும் அவ நினைவு தான். ஒரு தேவதாஸ் ஆயிட்டான். இது ஒரு வித ஏக்கம்.

அங்கே போவோம் வா.  சலங்கை சப்தம் கேக்கறதா. அது ராகினி வீடு.  பெரிய டான்சர். சின்னம்மை வந்தது. பூரிச்சு  முகம் பூரா  அம்மி பொளிஞ்சுடுத்து.  இப்போ  கான்சர் என்கிறா.  மருந்து  கெமோ  எல்லாம்  பண்ணிண்டா. காசு  கரைஞ்சு போச்சு.  ஒரு பக்கம் மார்பு எடுத்தாச்சு. தலைமயிர் கொட்டி   பொன்முடி போய் பொய் முடி...  அவளுடைய ஏக்கம் சொல்லப்போனா,  சொன்னா நாலு பக்கம் பேப்பர்  ரொம்பிடும்.

கி:  ''சரிப்பா  என்னை  விடு.  இன்னும் என்னை எங்கெல்லாம் இழுத்துண்டு போறதா  உத்தேசம் உனக்கு ... போதும் எனக்கு.  

நா:   ''இனிமே எங்கேயும் இல்லை அவ்வளவு தான்.   எதிரே யார் வரா பார்.  அவ தான் தாக்ஷாயணி.  நிறைய  மாந்தோட்டம் வாழை தோப்புக்கு சொந்தக்காரி. முருகேசன் பிள்ளை மனைவி. அந்த ஆளு இவளுக்கு குழந்தை இல்லைன்னுட்டு  வேலாயுதம் பிள்ளை செத்த பிறகு அவர் பெண் டாட் டியை அழைச்சுண்டு வந்துட்டான். இவளை இப்போ தயிர் மோர் விக்க வைச்சுட் டான்.  நன்னா கிருஷ்ணன் பாட்டு பாடுவா. இப்போ வாயே திறக்கறதில்ல. எப்பவாவது நாங்க யாராவது உக்கார வெச்சு பாடச்சொன்னா பாடுவா.. முன்னேமாதிரி இல்லை''
.
கி:  சரி சரி  அபத்தம்.  போதும் இதெல்லாம்.. நீ பேசறதிலே, காற்றது எதிலுமே   அர்த்தமே இல்லை''

நா:  ''இவ்வளவோ தூரம் அழைச்சுண்டு போய்   நிறைய காட்டினேன் சிரிக்கிறியே .. என்ன அர்த்தம். இதற்கு. கல் நெஞ்சா உனக்கு?''

கி: ''உங்களுக்கு எல்லாம் நெஞ்சே இல்லைன்னு அர்த்தம்.''நா:  ''கிருஷ்ணா, என்னடா   இப்படி சொல்றே?

கி:  ''நீ காமிச்சது தண்ணிலே மிதக்கிற ஐஸ் கட்டி மாதிரி. ICEBERG .  வெளியே தெரிஞ்ச கொஞ்ச  விஷயம்.  தெரியாத விஷயம் பெரிசு. தண்ணிக் கடியிலே இருக்கிற  பெரிய  ஐஸ் கட்டியோட முக்கால் வாசி மாதிரி.    சுகமா வாழ்ந்து என்னை நன்றியோடு நினைக்கிறவா.  அவரவர் கஷ்டம் அவரவர் வரவழைத்து கொண்டது என்று சொன்னேன் நீ கவனிக்க வில்லை. பூர்வ ஜென்ம கர்ம பலன் எல்லாம்.  நான் எல்லோருக்கும் ஓரே வித வாழ்க்கை தான் கொடுக் கிறேன். ஒரே வித சலுகை, ஒரே வித சந்தர்ப்பம், சூழ்நிலை, வசதி எல்லாம்.. 

நான் அறுசுவை உண்டி  உங்க  இலையிலே   பரிமாறினாலும்  எல்லாத்தையும் விட்டுட்டு மிளகா ஊருகா  தான்  சாப்பிடுவேன் என்று அதை மட்டும்  முழுங்கினால்  கையில் சொம்போடு  கொல்லைப்பக்கத்திலேயே  தானே இருக்கணும். அதுக்கு  நான் என்ன பண்ணுவேன் சொல்லு''

கிருஷ்ணன் மறைந்தான்.   தர்க்கம் முடிந்தது.  கண்ணை விழித்தேன்.  நல்ல கனவுடா சாமி இது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...