பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN --
53 கேரள விஜயத்தோடு குற்றால தரிசனம்
1928ம் வருஷம் மார்ச் மாதம் 19ம் தேதி மஹா பெரியவாவின் நீண்ட விஜய யாத்திரையில் அவர் கொச்சியை அடைந்தார். ராஜ குடும்பம் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றது. உபசரித் தது. ஸ்வாமிகளும் மடத்து பணியாளர் களும் வசதியாக தங்கி, பூஜைகள் நடக்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மஹா பெரியவா மார்ச் மாதம் முழுதும் திருப்பணித்துராவில் தங்கினார். ராஜ குடும்பத்துக்கு சொந்தமான ஆலயத்தில் வழிபட்டார். அந்த ஊரில் ராஜ குடும்பத்துக்கு சொந்தமானஒரு ஆலயம் ஸ்ரீ பூர்ணத்ரயீஸ சிவாலயம் (Photo attached). கேரளா சிவாலயங் களில் பிரதானமானது. எட்டு ராஜ குடும்பங் களின் நிர்வாக கோயில்களில் முதலாவது, முதன்மையானது. பூர்ணத்ரயீஸ்வரருக்கு யானை ரொம்ப பிடிக்கும் என்பதால் நாற்பது யானைகளுக்கு மேல் பங்கேற்கும் விரிஷ்சி கோத்சவம் விழா பிரபலமானது.
யானைகளுக்காக அதன் சொந்தக்கார்கள் ஒரு பைசாவும் வாங்குவதில்லை. பூர்ணத்ரயீசர் விக்ரஹத்தை மஹா விஷ்ணு அர்ஜுனனுக்கு கொடுத்ததால் தான் அவனால் ஒரு பிராமண னின் பத்து இறந்து போன குழந்தைகளை உயிர் பெறச் செய்ய முடிந்தது.
கொச்சி ராஜ வம்சம் நடத்தி வந்த சமஸ்க்ரித வித்தியாலயத்திற்கு மஹா பெரியவா அடிக்கடி செல்வார். அங்குள்ள மாணவர்களிடம் சமஸ்க்ரிதத்தில் உரையாடி உபதேசங்கள் புரிவார். கொச்சி ராஜாங்க சமஸ்தான அதிகாரிகள், திவான் T S நாராயண ஐயர் (photo atached) தலைமையிலே, மஹா பெரியவா தங்குவதற்கான அற்புதமாக ஏற்பாடுகள் முன்னரே செய்திருந்தார்கள். பிரம்மாண்டமான நகர்வலம், பாதபூஜை, பிக்ஷா வந்தனங்கள் விமரிசையாக நடை பெற்றன.
கொச்சியிலிருந்து மஹா பெரியவா வைக்கம் சென்றார். அங்கே ஒருநாள் தங்கியிருந்தார். பிரசித்தி பெற்ற மஹாதேவர் சிவாலயம் (photo attached) அங்கே உள்ளது. அதில் சிவ தரிசனம் பெற்றார்.மூன்று கோவில்கள் ரொம்ப சக்திவாய்ந்தவையாக அப்போது கருதப்பட்டது.. வைக்கம் மஹாதேவர் ஆலயம், எட்டுமானூர் சிவன் கோவில், காடுதுருத்தி தலியில் மஹாதேவ ஆலயம். பக்தர்கள் இந்த மூன்றிலும் ஒரே நாளில் உச்ச பூஜையில் சிவ தர்சனம் பெற்றால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கை இன்றும் இருக்கிறது. வைக்கம் சிவனுக்கு செல்லமாக பக்தர்கள் இட்ட பெயர் வைக்கத்தப்பன். த்ரேதா யுக (ராமர் கால) சிவலிங்கம்.
திருவனந்தபுரம் ஜில்லாவில் முக்கியமான மற்ற சில யாத்ரா ஸ்தலங்கள் உள்ளன. அவற்றுக்
கெல்லாம் சென்று மஹா பெரியவா தரிசனம் செய்தார்..
1928 ஏப்ரல் மாதம் 15ம் தேதி கோட்டயம் வழியாக மஹா பெரியவா ஆலப்புழைக்கு விஜயம் செய்தார். ஒருவார காலம் அங்கே தங்கும்படி பக்தர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆலப்புழாவில் மஹா பெரியவா பெயரில் ஒரு பாடசாலை இயங்கி வந்தது. அதற்கு அவர் ஆதரவு தந்திருந்தார். ஸ்ரீ சந்திரசேகரேந்திர பாடசாலை என்று அதற்கு பெயர். அந்த பாடசாலைக்கு விஜயம் செய்து மாணவர்களின் கல்வித்திறனை அறிந்து கொண்டார். அவர்களுக்கு ஆசி வழங்கினார். வேதங்கள் சாஸ்திரங்கள் எவ்வளவு அவசியம் என்பதன் முக்யத்துவத்தை உணர்த்தினார். நிர்வாகிகளை பாராட்டினார். ஆசிரியர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை வழங்கினார்.
அங்கிருந்து மான்கொம்பு எனும் இடத்திற்கு 7 மைல் தூரம் கடலில் படகில் தான் போகமுடியும்.
அந்த வருஷம் சங்கர ஜெயந்தி உன்னதமாக அங்கே கொண்டாடப்பட்டது.
அங்கிருந்து மஹா பெரியவா ஆலப்புழைக்கு திரும்பினார். கொல்லம் எனும் ஊருக்கு 1928 மே மதம் 3ம் தேதி விஜயம் செய்தார். அங்கே ஐந்து நாட்கள் முகாம் இட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.
அங்கிருந்து மஹா பெரியவா அடுத்ததாக கொட்டாரக்கரை எனும் ஊருக்கு விஜயம் செய்தார். புனலூர், ஆரியங்காவு, செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு அங்கிருந்து சென்றுவிட்டு குற்றாலத்துக்கு வந்தார்.
ஒரு வார காலம் குற்றாலநாதர் தரிசனம்.(photo attached)
குற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தென்காசி மாவட்டம் , குற்றாலத்தில் அமைந்துள்ளது. சித்ர சபை என்று ஐந்து சிவசபைகளில் இது ஒன்று. அருவிக்கரையில் அமைந்துள்ள அற்புத ஆலயம். இங்கே முதலில் இருந்த விஷ்ணு மூர்த்தியை அகஸ்திய ரிஷி சிவலிங்கமாக மாற்றினார் என்பது ஐதீகம். சிவனுக்கு இங்கே திரிகூடநாதர் என்று பெயர் இங்கே கோயில் மற்ற கோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாமல் எப்படி சங்குவடிவில் தோன்றியது?
''உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையுங்குற்றாலத் தர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கேகற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே''
.என்ற மாணிக்க வாசகர் பாடலும்
''காலன் வரு முன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு''
என்ற பட்டினத்தார் பாடலும் இங்கே ஞாபகம் வைத்துக் கொண்டு மேலே தொடர்வோம்.
மொத்தத்தில் மஹா பெரியவாளின் கொச்சி திருவனந்தபுரம் விஜய யாத்திரை தங்க வசதிகள் எல்லா ஏற்பாடுகளையும் கொச்சி ராஜாங்க ஸமஸ்தானம் பொறுப்பேற்றுக்கொண்டு சிறப்பாக நடத்தியது.
தொடரும்
No comments:
Post a Comment