Thursday, July 15, 2021

BAGAVAN RAMANA


 பகவான் சொன்ன கதைகள்  --   நங்கநல்லூர்  J K  SIVAN 

                                                       
யோக  வாசிஷ்டத்தில் ஒரு கதை. பகீரதன் ஒரு ராஜா.    தவம் செய்தால்  தான்  கங்கை தோன்றுவாள். அவளை பூமிக்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே தவம் செய்யவேண்டும். என்னால் தவம் செய்யமுடியுமா?  அனுபவமோ பக்குவமோ  இல்லையே?   ரிஷிகள் முனிவர்களை கேட்டான்.

ஆத்ம ஞானம் இருந்தால் தான் நீ இதை செய்ய முடியும்.  பற்று முதலில் நீங்க வேண்டும்.''

 
பகீரதன்  ஒரு பெரிய யாகம் வளர்த்தான். அதில் தனது ராஜ்ஜியம், சொத்து, நகை, ஆபரணம், எல்லா வற்றையும் எல்லோருக்கும் தந்துவிட்டான்.  அவன் ராஜ்யத்தை எவரும் பெற்றுக்கொள்ள முன் வரவில்லை.    யோசித்தான்.  எப்போதும் அண்டை தேசத்து ராஜா படையெடுத்து பகீரதன் ராஜ்யத்தை கைப்பற்ற முயன்று தோற்றுப் போவான். அவனைக்  கூப்பிட்டு  ''இந்தா  என் ராஜ்யம் எடுத்துக்கொண்டு நீயே  ஆண்டுகொள் '' என்று தந்து விட்டான்.  

நாட்டை விட்டு பரதேசியாக சென்ற பகீரதன் பகலெல்லாம் எவர் கண்ணிலும் படாமல் இரவில் கொஞ்சம் பிச்சை எடுத்து பசியாற்றிக் கொண்டு  உழகைத் துறந்தவனாக எதிலும் பற்றற்று உயிர் வாழ்ந்தான்.   இந்த  சந்யாச வாழ்க்கை  மனதுக்கு அமைதி தந்தது. பல ஊர்களுக்கு திரிந்து ஒருநாள் தன்னுடைய பழைய ராஜ்யத்துக்கே வந்தான்.   அவனை 
யாருக்குமே அடையாளம் தெரியாத தால் பகலிலே கூட  பிச்சை யெடுத்தான்.    அவனது
அரண்மனை வாசலில் பிச்சை எடுத்தபோது ஒரு பழைய  காவல்காரன் ராஜா பகீரதனை அடையாளம் கண்டு கொண்டு  விட்டான். உள்ளே ஓடி  புது ராஜாவிடம் விஷயம் சொல்ல, ராஜா ஓடிவந்தான்.  பகீரதனை உபசரித்து உள்ளே அழைத்தான்.

''மஹாராஜா உங்கள்  ராஜ்யத்தை திரும்ப தருகிறேன். நீங்கள் எடுத்துக்கொண்டு பழையபடி அரசராகுங்கள்''

''வேண்டாம். எனக்கு பிக்ஷை அளித்தால் அது போதும்'' 

அதை பெற்றுக்கொண்டு பகீரதன் போய்விட்டான்.

பகீரதன் தவம் வெற்றிபெற்று  கங்கை வந்தாள் . அவன் கடமை முடிந்தது.  ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில்  அவன் எங்கோ ஒரு தேசத்தில் ராஜாவாக  நேர்ந்தது.  அப்போது தான்  அவனுக்கு  தன்னு டைய பழைய  ராஜ்யத்தின் ராஜா இறந்து போனதால் ராஜா இல்லாமல் அந்த தேசம் தத்தளிக்கிறது என்று கேட்டு, உடனே அங்கே செல்கிறான்.  பொதுமக்களின்  விருப்பத்தை  மறுக்காமல்  மீண்டும் ராஜாவாகிறான்  என்று கதை.

முன்பு சுமையாக இருந்த  ராஜ்யபாரம் இப்போது அவ்வாறில்லை. அவன் ஞானியானதே அதற்கு காரணம்.

திருவண்ணாமலை  பகவான் ரமண ரிஷிக்கு   யோக   வாசிஷ்டம் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அதிலிருந்து மேற் கோள் காட்டுவார். அதில் வரும் சம்பவங்கள் விஷயங்கள் நீதிகள் பற்றி உப தேசிப் பார்.  மேலே சொன்ன பகீரதன் கதை அவர் சொன்னது தான். 

யாரோ ஒரு பக்தர்  பகவான் ரமணரை  ''உங்கள் மதுரை வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்?'' என்று கேட்க.'

''என் அத்தை பாட்டி ஒருத்தி, எப்போ   இட்லி, தோசை, அப்பளம் பண்ண மாவு பிசைந்தாலும் என்னை வந்து முதலில் அதைத் தொடு  என்பாள்.''

ஏன் என்னை முதலில் தொடச்சொல்றே?'

'நீ நல்ல குழந்தைடா எனக்கு,  சொன்னதை கேட்பே.  பொய்  பேசமாட்டே. அதனாலே  நீ  தோட்டா இதெல்லாம் நன்னா வரும் '' என்றாள்

.''நான் ஒரு தடவை தான் பொய் சொன்னேன்.  அது  இங்கே வருவதற்காக ''

''பகவானே, அப்படி என்றால் ஒரு விசேஷ  காரியம் பண்ண எப்போவாவது பொய்  சொல்லலாம் இல்லையா?

''ஒரு நல்ல காரியம், நாலு பேருக்கு உதவியா இருக்கும் என்றால் , அதனாலே பொய்  சொல்ல லாம் என்றால்  அப்போது மட்டும்  பொய்  சொல்லலாம். 

வள்ளுவர்  சொன்னதை நாம் திருக்குறளில் படிக்கிறோம்;  ''பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்''

 பொய் எங்கே இருக்கிறது அப்போ?     ஏதோ ஒரு சக்தி அதை சொல்ல வைக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக  செய்த  ஒரு காரியம் அந்த பொய் .  காரணம் எதுவுமே இல்லாதபோது அந்த காரியம் எதற்கு? . இது விஷயமா கூட யோக வாசிஷ்டத்தில் ஒரு கதை இருக்கு.


காட்டில் ஒரு ரிஷி கண்ணைத்  திறந்து கொண்டு தியானத்தில் இருந்தபோது  வேடன் அம்புக்கு தப்பி ஓடி வந்த ஒரு மான் அவர் எதிரே ஒரு இடத் தில் ஓடி  மறைந்தது.  வேடன் வந்து ரிஷியை கேட்டான்.

''இந்த பக்கமா ஒரு மான் வந்ததா, பாத்திருப் பீங்களே, எங்கே போச்சு?

அப்பா,  இந்த காட்டில் தியானம் செய்து   விழிப்பு, தூக்கம், கனவு நிலை எல்லாம் கடந்து நான்காவது நிலையான துரியத்தில் உள்ளவனுக்கு உலகில் எது நடந்தாலும் தெரியாதே. எது எங்கே வந்தது போனது எனக்கு எப்படி தெரியும். என் மனம் அதையெல்லாம் கடந்தது.

''சே  சரியான பைத்தியம்''   என்று முணுமுணுத்து விட்டு வேடன் சென்றான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...