Sunday, July 18, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி   -    நங்கநல்லூர்  J K  SIVAN  --

தாகூர் 


90.   காலன்  வருமுன்னே...


90. On the day when death will knock at thy door what wilt thou offer to him?
Oh, I will set before my guest the full vessel of my life--
-I will never let him go with empty hands.
All the sweet vintage of all my autumn days and summer nights, 
all the earnings and gleanings of my busy life will I place before him 
at the close of my days when death will knock at my door.


''கிருஷ்ணா   நீ ஒரு கேள்வி கேட்டாய்?  யோசிக்க வைத்து விட்டாய்?''

''இவ்வளவு கொடுத்தேனே , இத்தனை வருஷங்களாக கொடுத்தேனே , நீ என்ன கொடுத்தாய் , என்ன கொடுப்பாய், எப்போது கொடுப்பாய்?''

அதற்கும் ஒரு கால எல்லை உண்டு என்று உணர வைத்தாய்.  நான் ஒன்றுமே கொடுக்கவில்லை, கொடுக்கவேண்டும் என்று நினைக்கவும் இல்லை.  ஆனால் கொடுத்தே ஆகவேண்டிய ஒரு சந்தர்ப்பம் வரும். அது எப்போது என்று உணர வைத்தாய்? இதோ வந்துவிட்டதே வாசல் வரை.

என் கதவை தட்டுகிறான் ஒரு விருந்தாளி.
யார் என்று பார்க்கிறேன். வாசலில் கருப்பு எருமை மாடு நிற்கிறது. கையில் ஒரு கயிறுடன்  ஒரு 
கிங்கரன் நிற்கிறான். 
''யார் வேண்டும் ?''
''நீ '' என்னுடன் புறப்படவேண்டும்.''
''நான் எதற்கு உன்னுடன்  வரவேண்டும். நீ யார் என்றே தெரியாதே எனக்கு.''
''எனக்கு தெரியுமே உன்னை''
''எங்கே வரவேண்டும்,  ஏன், எத்தனை நேரம் ஆகும் திரும்பி வருவதற்கு?''
''எமலோகத்திற்கு.   ஏன் என்றால் உன் காலம் இங்கே முடிந்துவிட்டது. எத்தனை நேரம் ஆகும் நீ திரும்பி வருவதற்கு என்பது நீ செய்த  கர்ம பலனைப் பொறுத்தது. அந்த கணக்கு எங்கள் ஆபிஸில் இருக்கிறது. திரு. சித்ரகுப்தன் முடிவு செய்வார். எப்படி,  எப்போது, எந்த உருவில் நீ மீண்டும் இந்த பூமியில் என்ன பெயரோடு வருவாய் என்று அங்கே தான் தெரியும். 
 எனக்கு உன்னை அழைத்துப் போகத்தான் வேலை.''

புரிந்து விட்டது.  எதை   மறக்கக் கூடாதோ அதையே மறந்திருக்கிறேன். 
''சரி அப்பா உட்கார்''.
''இல்லை நான் உட்கார வரவில்லை''
''சரி இந்தா நீ என் விருந்தாளி. வெறும் கையோடு உன்னை அனுப்பமாட்டேன்.  என்னைக் கொடுத்துவிட்டேன்''

 
கிருஷ்ணா, நீ கேட்ட கேள்விக்கு இதோ விடை. 
இந்த உலகில் நான் அடைந்த, சேமித்த, எல்லாவற்றையும், என் புகழ், பெருமை நான் செய்த தீங்குகள், தீமைகள், பாபங்கள்  சேர்த்த சொத்துக்கள், எதுவும் இனி எனதல்ல. மீண்டும் இங்கே வந்து அவற்றை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆகவே  அதை எல்லாம் இழக்க நேரிடுவதற்கு முன்பே  இப்போதே  உன்  நினைவால் அனைவருக்கும்  அளித்து விடுகிறேனப்பா. இங்கேயே  விட்டு செல்கிறேன்.  பிரியமுடியாத  நான் செய்த கர்மங்கள் மட்டும் என்னை தொடரும் என்று  தான் நீ ஏற்கனவே எச்சரித்திருக்கிறாயே.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...