Saturday, July 17, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


57   மேகதாது ஸ்னானம்.

வருஷங்கள் எவ்வளவு வேகமாக நகர்கிறது.  சும்மா  அம்மாவோடு  காஞ்சி சென்ற 13 வயது சிறுவனை லோகக்ஷேமத்துக்காக அந்த ஆண்டவன் பரமேஸ்வரன் இந்த சிறுவனைத் தான் செலெக்ட் செய்தான். ரொம்ப பொருத்தமாக  வேறு  எவர் கிடைப்பார்  ஜகதகுருவாக  பரிம
ளிக்க ?   அந்த சிறுவன் இப்போது 35 வயது   ஞான ஒளிவீசும்  கருணாமூர்த்தியான  வாலிப சந்நியாசி.  

கார்த்திகை தீபம் தரிசிக்க  1929ம்  வருஷம் டிசம்பர் மாதம்  திருவண்ணாமலைக்கு மஹா பெரியவா சென்றார்.  பஞ்சபூதத்தில்  அக்னி க்ஷேத்ரம்  திருவண்ணாமலை எனும் அருணாசலம்.  ஒரு சின்ன கதை சொல்கிறேன்.

வேத காலத்தில்  ப்ருங்கி ரிஷி என்று ஒரு தீவிர  சிவபக்தர்  பார்வதி தேவியைக் கூட  உபாசிக்கமாட்டார் சிவனைத் தவிர. ஓஹோ  என்னைத் தனியாக இருப்பவளாக  நினைத்து தானே என்னை பார்க்க கூட மாட்டேன் என்கிறாய். இப்போது என்ன செய்வாய் என்று பார்வதி தேவி  சிவனினுடலில் பாதி யானாள் .  அர்த்தனரீஸ்வரி.  பாகம் பிரியாள் .  பரமேஸ்வரன் ஜோதி ஸ்வரூபம் என்று நினைவூட்ட வருஷா வருஷம் அருணாச்சல மலைமீது  தீபம் பிரகாசமாக பெரிதாகி ஒளி வீசும்.  அந்த விசேஷம் தான் கார்த்திகை தீபம். திருஞான சம்பந்தர், அப்பர்  தேவார பாடல்கள் பெற்ற  ஸ்தலம். மஹா விஷ்ணு பூவராஹனாக பூமிக்கடியில் பரமேஸ்வரன் பாதங்களை தரிசிக்க ,  அடி  காண,   புறப்பட்ட இடம்.  ப்ரம்மா ஹம்ஸ மாக  ஆகாயத்தில் முடி காண பரந்த இடம்.   சிவனை லிங்கோத்பவராக  சிலை   வடித்திருக்கிறார்கள் அதில் இந்த ஹம்சம், வராஹம் ரெண்டையும்  காணலாம். எல்லா சிவாலயங்களிலும் மேற்கு நோக்கி   கோஷ்டத்தில் இந்த லிங்கோத்பவரை மூலவருக்கு பின்புற  ப்ரஹாரத்தில் தரிசிக்கிறோம்.

அருணாச்சலத்தில்  தான் அருணகிரி வாழ்ந்தார். அவர் பெயரே  க்ஷேத்ரத்தின் பெயர். அவரைத் திருப்புகழ் பாட வைத்தவன் கம்பத்து இளையனார் என்னும் சுப்ரமணியன்.  இந்த சந்நிதியில் தான்  சேஷாத்ரி ஸ்வாமிகள் எப்போதும் காணப்படுபவர், காந்தம்போல் பக்தர்களை ஈர்க்கும் ஸ்தலம் திருவண்ணாமலை.  பட்டினத்தார், இடைக்காடடு சித்தர்கள்  தங்கி தரிசித்த இடம்.
வெங்கட்ரமணன் திருச்சுழியிலிருந்து  தேடி ஓடி வந்து பகவான் ரமண மஹர்ஷியான ஸ்தலம்.

மஹா பெரியவா முதல் முறையாக திருவண்ணாமலை வந்த போது   பக்தர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.  கோலாகலமாக  வரவேற்று உபசரித்தார்கள்.  ஒருமாத காலம் போல  மஹா பெரியவா இங்கே  வாசம் செய்தார். எத்தனையோ முறை கிரிவலம் வந்து  அருணாச்சலேஸ்வர தரிசனம் பெற்றார்.

திருவண்ணாமலையிலிருந்து மஹா பெரியவா காவேரி ஸ்னானம் செய்வதற்கு புறப்பட்டார். செங்கம்,  அரூர்,  தருமபுரி, வழியாக  பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாறே, தீர்த்தமலை எனும் ஊருக்கு சென்றார்.

இங்கே  சிவன் பெயர்  தீர்த்த கிரீஸ்வரர்.   இந்த சிவாலயம் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படி  பல  தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை என்பதால்  இந்த ஊருக்கு  தீர்த்தமலை என்று  பெயர்.  சின்ன குட்டியூண்டு  குற்றாலம்.   அங்கே  காவேரி  அன்னை  நீர் வீழ்ச்சியாக  காட்சியளிக்கிறாள்  அதில் மஹா பெரியவா   ஸ்னானம் செய்தார்.  

ஹொகனேக்கல் அருகே மேக்கே தாது வுக்கு சென்றார். இப்போது இந்த பெயர் நிறைய அடிபடுகிறது. காவிரி இங்கே  இரு மலைகளுக்கு இடையே குறுகலாக பாய்கிறாள்.  ஒரு ஆடு கூட  அவளைத் தாண்டிவிடும் அளவுக்கு குறுகல்.   கன்னட மொழியில் மேக்கே   என்றால்  ஆடு. ஆகவே மேகதாது என்று பெயர். அங்கே  மஹா பெரியவா ஸ்னானம் செய்தார்.

1930ம் வருஷம்  மஹா பெரியவாளின்  விஜய யாத்திரை முழுக்க முழுக்க  வட ஆற்காடு ஜில்லாவில் தான்.  

ஆரணி ஜாகிர்  அருகே  பூசை மலைக்குப்பம்  ஒரு கிராமம்.   1640ல்  ஷஹாஜி என்கிற மராத்திய அரசர் வேதாஜி  பாஸ்கர் ராவ் என்பவருக்கு தானமாக கொடுத்த ஜமீன் தான் ஆரணி ஜாகிர்.
ஷஹாஜிக்கு  பீஜப்பூர் சுல்தான்  முன்பே கொடுத்த ஜாகிர்.

பூசைக்குப்பத்தில் தான் அந்த வருஷம் மஹா பெரியவா விஜயத்தின் போது  வியாச பூஜை  நடைபெற்றது.  மரங்கள் அடர்ந்த காட்டு பிரதேசம் என்பதால் அதிகாரிகள் பாதுகாப்புடன்  மஹா பெரியவா வாசம் செய்ய பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய  ஏற்பாடுகள் செய்தவர்கள்.

தொடரும்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...