கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --
தாகூர்.
92. கண்டுகொண்டேன் கண்ணா...
and life will take its leave in silence, drawing the last curtain over my eyes.
Yet stars will watch at night, and morning rise as before,
Yet stars will watch at night, and morning rise as before,
and hours heave like sea waves casting up pleasures and pains.
When I think of this end of my moments, the barrier of the moments breaks
When I think of this end of my moments, the barrier of the moments breaks
and I see by the light of death thy world with its careless treasures.
Rare is its lowliest seat, rare is its meanest of lives.
Things that I longed for in vain and things that I got---let them pass.
Things that I longed for in vain and things that I got---let them pass.
Let me but truly possess the things that I ever spurned and overlooked.
கண்ணைத் திறப்பவன் நீ அதனால் தான் கண்ணா என்கிறோமா? எனக்கு கண் திறந்து விட்டதடா. உண்மை புரிந்து விட்டதடா.
ஒருநாள் நான் பார்க்கும் இந்த பரந்த பூமி அதன் அற்புதங்கள் அழகு கொஞ்சும் எல்லையில்லா வளங்கள் உயிரோட்டம் எல்லாம் என் கண் பார்வையிலிருந்து அகன்றுவிடும்.
என் உயிர் என்னிடமிருந்து ஒன்றும் சொல்லாமல் அமைதியாக விடை பெறும் . என் கண் கடைசித் திரையால் மூடப்படும்.
மேலே நக்ஷத்திரங்கள் எப்போதும் போல் சலனமின்றி இரவு முழுதும் எல்லாவற்றையும் கண் சிமிட்டி கவனித்துக் கொண்டே இருக்கும். காலை நேரங்கள் வழக்கம்போல் என்றும் விடிந்து கொண்டே இருக்கும். காலம், நேரம், மணி, நிமிஷம் வினாடி, எல்லாமே என்றும் போல் தொடர்ந்து கடலில் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மோதுவது போல், நகர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. அதோடு தானே உலகில் எல்லா சுகமும் துக்கமும் இன்பமும் துன்பமும் பின்னிப் பிணைந்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது.
கிருஷ்ணா, நான் என் வாழ்க்கையின் முடிவைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேனடா.
குறுக்கீடுகள், இந்த ஓட்டம், ஒரு க்ஷணம் நிற்கிறது. ஆஹா, இந்த மரண ஞாபகம் தரும் ஒளியில் தான் உன் உலகம் என் கண் முன்னே காட்சி அளிக்கிறது. அதன் அளவற்ற செல்வங்களைக் கண்டு பிரமிக்கிறேன். அங்கே எந்த பேதமும் காணவில்லை. உயர்வு தாழ்வு உயிர்களில் காணோம்.
சே, எதையெல்லாம் நான் வெட்டியாக, வீணாக விரும்பினேன், தேடினேன், அடைந்தேன். இவை எல்லாமே என்னைவிட்டு விலகட்டும். இது வரை எதையெல்லாம் நான் தேடவில்லையோ, நாடவில்லையோ, புறக்கணித்தேனோ, அறியாமல் விட்டுவிட்டேனோ அதெல்லாம் மட்டும் கொடு. நீ தான் அதை எனக்கு கொடுக்க முடியும். ப்ளீஸ்.
No comments:
Post a Comment