Monday, July 12, 2021

SRIMAN NARAYANEEYAM



 ஸ்ரீமந்  நாராயணீயம் - நங்கநல்லூர்  J  K  SIVAN 

23வது தசகம் 


23.    நல்லதே நடக்கும்.

ஸ்ரீமந்  நாராயணீயம்  ஒரு  தெய்வீக பாராயண நூல்.  ஒரு பக்தனும் கடவுளும் சம்பாஷித்தமாதிரி அமைந்த உன்னத ஸ்லோகங்கள்.  சகல புராண விஷயங்களும் தத்வங்களும் உள்ளடங்கிய ஒரு  எளிய சுவாரஸ்யமான பக்தி நூல்.   ஸ்ரீ குருவாயூர் அப்பனின் கருணையை, அருளைப்   பெற்று  சகல துன்பங்களிலிருந்தும் விடுபட ஒரு உன்னத மருந்து. உலகமெங்கும்  ஹிந்துக்கள் இதை உணர்ந்ததால் தான் இதை கற்றவர்கள், கற்பவர்கள் எண்ணற்றவர்களாக எங்கும் நமக்கு தெரிகிறார்கள்.   இந்த கொரோனா சமயத்தில்  கூட  விடாமல்  online  நாராயணீயம் வகுப்புகள்  நடக்கிறதே. எவ்வளவு வசதிகள் இந்த காலத்தில் இருக்கிறது.

प्राचेतसस्तु भगवन्नपरो हि दक्ष-
स्त्वत्सेवनं व्यधित सर्गविवृद्धिकाम: ।
आविर्बभूविथ तदा लसदष्टबाहु-
स्तस्मै वरं ददिथ तां च वधूमसिक्नीम् ॥१॥

praachetasastu bhagavannaparO hi dakshastvatsevanaM
vyadhita sargavivR^iddhikaamaH |
aavirbabhuuvitha tadaa lasadaShTabaahustasmai
varaM daditha taaM cha vadhuumasikniim ||

ப்ராசேதஸஸ்து ப⁴க³வன்னபரோ(அ)பி த³க்ஷ-
ஸ்த்வத்ஸேவனம் வ்யதி⁴த ஸர்க³விவ்ருத்³தி⁴காம꞉ |
ஆவிர்ப³பூ⁴வித² ததா³ லஸத³ஷ்டபா³ஹு
ஸ்தஸ்மை வரம் த³தி³த² தாம் ச வதூ⁴மஸிக்னீம் || 23-1 ||

ஸ்ரிஷ்டி காலத்தில், குருவாயூரப்பா, நிறைய பேரின் பங்கு இருந்தது. ப்ரசேதஸ்  மகன்  தக்ஷன்  அதில்  ஒருவன்.  அவன் உன்னை பிரார்த்தித்து  அவனும் ஜீவன்களின் விருத்திக்கு  சேவை செய்ய விரும்பவே நீ அவன் முன் அஷ்ட  கரங்களுடன் காட்சி அளித்து  அவ்வாறே ஆகுக என்று வரமளித்தாய்.  அசிக்னி என்ற மனைவி அவனுக்கு வாய்த்தாள் . 

तस्यात्मजास्त्वयुतमीश पुनस्सहस्रं
श्रीनारदस्य वचसा तव मार्गमापु: ।
नैकत्रवासमृषये स मुमोच शापं
भक्तोत्तमस्त्वृषिरनुग्रहमेव मेने ॥२॥

tasyaatmajaastvayutamiisha punassahasraM
shriinaaradasya vachasaa tava maargamaapuH |
naikatravaasamR^iShaye sa mumOcha shaapaM
bhaktOttamastvR^iShiranugrahameva mene ||

தஸ்யாத்மஜாஸ்த்வயுதமீஶ புன꞉ஸ்ஸஹஸ்ரம்
ஶ்ரீனாரத³ஸ்ய வசஸா தவ மார்க³மாபு꞉ |
நைகத்ரவாஸம்ருஷயே ஸ முமோச ஶாபம்
ப⁴க்தோத்தமஸ்த்வ்ருஷிரனுக்³ரஹமேவ மேனே || 23-2 ||

தக்ஷனுக்கு பதினாயிரம் புத்ரர்கள். அடேயப்பா.அவர்கள்  நாரதரின் அறிவுரைப்படி  நாராயணா,   உன்னை அணுகினார்கள். முக்தி அடைந்தார்கள். இதனால்  கோபமடைந்த  தக்ஷன் நாரதன் தான் காரணம் என்பதால் அவனை சபித்தான்.  ''இனி  ஒரு இடத்தில் நிலையாக தங்காமல் எங்கும் அலைந்து கொண்டே இருக்க கடவது''   
இது உன் உண்மையான பக்தனான நாரதனுக்கு  சாபமாக இல்லாமல்  வரமாக போய்விட்டது. அவன் தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே.

षष्ट्या ततो दुहितृभि: सृजत: कुलौघान्
दौहित्रसूनुरथ तस्य स विश्वरूप: ।
त्वत्स्तोत्रवर्मितमजापयदिन्द्रमाजौ
देव त्वदीयमहिमा खलु सर्वजैत्र: ॥३॥

ShaShTyaa tatO duhitR^ibhiH sR^ijataH kulaughaan
dauhitrasuunuratha tasya sa vishvaruupaH |
tvatstOtravarmitamajaapayadindramaajau
deva tvadiiyamahimaa khalu sarvajaitraH ||

ஷஷ்ட்யா ததோ து³ஹித்ருபி⁴꞉ ஸ்ருஜத꞉ குலௌகா⁴ன்
தௌ³ஹித்ரஸூனுரத² தஸ்ய ஸ விஶ்வரூப꞉ |
த்வத்ஸ்தோத்ரவர்மிதமஜாபயதி³ந்த்³ரமாஜௌ
தே³வ த்வதீ³யமஹிமா க²லு ஸர்வஜைத்ர꞉ || 23-3 |

அப்புறம்  தக்ஷனுக்கு  அறுபது பெண்கள் பிறந்தார்கள்.  அவர்கள் மூலம் எத்தனையோ  பேரன் பேத்திகள். அவர்களில் ஒருவன் தான் விஸ்வரூபன்.  ஒரு பெண் வயிற்று பேரன்.  அவன் தான்  நாராயணா, உன் மேல்  சக்தி வாய்ந்த நாராயண கவச ஸ்தோத்ரத்தை இந்திரனுக்கு கற்பித்து  இந்திரன்   எதிரிகளை ஜெயித்தான்.  குருவாயூரப்பா,  நீ  இந்திரனுக்கு மட்டுமா, எல்லோருக்குமே  ஜெயம் அடைய உதவுபவனாயிற்றே. அதை நீ ஒரு பிரதானமான  காரியமாக செய்கிறவனாயிற்றே!

प्राक्शूरसेनविषये किल चित्रकेतु:
पुत्राग्रही नृपतिरङ्गिरस: प्रभावात् ।
लब्ध्वैकपुत्रमथ तत्र हते सपत्नी-
सङ्घैरमुह्यदवशस्तव माययासौ ॥४॥

praakshuurasenaviShaye kila chitraketuH
putraagrahii nR^ipatirangirasaH prabhaavaat |
labdhvaikaputramatha tatra hate sapatnii
sanghairamuhyadavashastava  maayayaasau ||

ப்ராக்ஷூரஸேனவிஷயே கில சித்ரகேது꞉
புத்ராக்³ரஹீ ந்ருபதிரங்கி³ரஸ꞉ ப்ரபா⁴வாத் |
லப்³த்⁴வைகபுத்ரமத² தத்ர ஹதே ஸபத்னீ-
ஸங்கை⁴ரமுஹ்யத³வஶஸ்தவ மாயயாஸௌ || 23-4 ||

க்ஷுரசேன தேசத்தில் சித்ரகேது என்கிற ராஜாவுக்கு வெகுநாள் பிள்ளை யில்லாமல் அவன் முதல் மனைவிக்கு ரிஷி அங்கீரஸ் அனுகிரஹத்தால் ஒரு பிள்ளை பிறந்தான்.  அவன் துரதிர்ஷ்டம் மற்ற மனைவிகளின்  பொறாமையால் இந்த குழந்தை கொல்லப்பட்டான்.  இந்த துக்கத்தில் மனமுடைந்த  சித்ரகேது உனது மாயை யினால் சோர்ந்து மயக்கமுற்றான்.

तं नारदस्तु सममङ्गिरसा दयालु:
सम्प्राप्य तावदुपदर्श्य सुतस्य जीवम् ।
कस्यास्मि पुत्र इति तस्य गिरा विमोहं
त्यक्त्वा त्वदर्चनविधौ नृपतिं न्ययुङ्क्त ॥५॥

taM naaradastu samamangirasaa dayaaluH
sampraapyataavadupadarshya sutasya jiivam |
kasyaasmi putra iti tasya giraa vimOhaM
tyaktvaatvadarchanavidhau nR^ipatiM nyayunkta ||

தம் நாரத³ஸ்து ஸமமங்கி³ரஸா த³யாலு꞉
ஸம்ப்ராப்ய தாவது³பத³ர்ஶ்ய ஸுதஸ்ய ஜீவம் |
கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கி³ரா விமோஹம்
த்யக்த்வா த்வத³ர்சனவிதௌ⁴ ந்ருபதிம் ந்யயுங்க்த || 23-5 ||

அந்த நிலையில் அவனை  ரிஷி நாரதரும்  ஆங்கீரஸும்  வந்து பார்த்தனர்.  அவனுக்கு   ஆறுதல் சொன்னார்கள் சித்ரகேதுவுக்கு  இறந்த அவன் மகனின்  ஜீவனை  வரவழைத்து காட்டுகிறார்கள்.
அந்த ஜீவனைப்  பார்த்து   சித்ரகேது  ''ஆஹா என் மகனே'   'என்று தாவுகிறான்.  அந்த ஜீவன் சித்ரகேதுவைப் பார்த்து    ''நீ யார்?   நான் உன் மகன் அல்லன் ''    என்று பதிலளிக்கிறது.   ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு கிடையாது என்ற தத்துவத்தை இப்படி சூசகமாக  ரிஷிகள்  சித்ரகேதுவுக்கு புகட்ட, அவன்  மனம் தெளிவடைகிறது. ரிஷிகளின் உபதேசத்தின் படி, நாராயணா  சித்ரகேது உன்னை நோக்கி தவமிருந்தான்.


स्तोत्रं च मन्त्रमपि नारदतोऽथ लब्ध्वा
तोषाय शेषवपुषो ननु ते तपस्यन् ।
विद्याधराधिपतितां स हि सप्तरात्रे
लब्ध्वाप्यकुण्ठमतिरन्वभजद्भवन्तम् ॥६॥

stOtraM cha mantramapi naaradatO(a)tha labdhvaa
tOShaaya sheShavapuShO nanu te tapasyan |
vidyaadharaadhipatitaaM sa hi saptaraatre
labdhvaa(a)pyakuNThamatiH anvabhajadbhavantam ||

ஸ்தோத்ரம் ச மந்த்ரமபி நாரத³தோ(அ)த² லப்³த்⁴வா
தோஷாய ஶேஷவபுஷோ நனு தே தபஸ்யன் |
வித்³யாத⁴ராதி⁴பதிதாம் ஸ ஹி ஸப்தராத்ரே
லப்³த்⁴வாப்யகுண்ட²மதிரன்வப⁴ஜத்³ப⁴வந்தம் || 23-6 ||

நாரதரிடம்  மந்த்ரோபதேசம் பெற்ற சித்ரகேது உன்னை நோக்கி கடும் தவம் இருந்தான்.  ஆதிசேஷன் மெல்  பள்ளிகொண்ட  ஆதி நாராயணா, நீ அவனை  வித்யாதர்களுக்கு  சக்ரவர்த்தியாக்கினாய்.  அவன் தொடர்ந்து உன்னை தொழுது கொண்டிருந்தான். 

तस्मै मृणालधवलेन सहस्रशीर्ष्णा
रूपेण बद्धनुतिसिद्धगणावृतेन ।
प्रादुर्भवन्नचिरतो नुतिभि: प्रसन्नो
दत्वाऽऽत्मतत्त्वमनुगृह्य तिरोदधाथ ॥७॥

tasmai mR^iNaaladhavalena sahasrashiirShNaa
ruupeNa baddhanutisiddha gaNaavR^itena |
praadurbhavannachiratO nutibhiH prasannO
datvaa(a)(a)tmatattvamanugR^ihya tirOdadhaatha ||

தஸ்மை ம்ருணாலத⁴வலேன ஸஹஸ்ரஶீர்ஷ்ணா
ரூபேண ப³த்³த⁴னுதிஸித்³த⁴க³ணாவ்ருதேன |
ப்ராது³ர்ப⁴வன்னசிரதோ நுதிபி⁴꞉ ப்ரஸன்னோ
த³த்த்வா(ஆ)த்மதத்த்வமனுக்³ருஹ்ய திரோத³தா⁴த² || 23-7 ||

குருவாயூரப்பா, நீ  எப்படி  சித்ரகேதுவுக்கு தரிசனம் கொடுத்தாய் என்று எனக்கு தெரியும். சொல்லட்டுமா?  வெண் தாமரை போன்ற பளிச்சென்ற  தேகத்தோடு, ஆயிரம் சிரங்களோடு,  ரிஷிகள்,யோகிகள், முனீஸ்வரர் உன்னைப் போற்றி பாடியபடி, நீ  அவன் முன் தோன்றினாய்.  அவனுக்கு ஆத்மஞானம் அளித்தாய்.  காட்சி  தந்த பின்  மறைந்தாய்.

त्वद्भक्तमौलिरथ सोऽपि च लक्षलक्षं
वर्षाणि हर्षुलमना भुवनेषु कामम् ।
सङ्गापयन् गुणगणं तव सुन्दरीभि:
सङ्गातिरेकरहितो ललितं चचार ॥८॥

tvadbhaktamauliratha sO(a)pi cha lakshalakshaM
varShaaNi harShulamanaa bhuvaneShu kaamam |
sangaapayan guNagaNaM tava sundariibhiH
sangaatirekarahitO lalitaM chachaara ||

த்வத்³ப⁴க்தமௌலிரத² ஸோ(அ)பி ச லக்ஷலக்ஷம்
வர்ஷாணி ஹர்ஷுலமனா பு⁴வனேஷு காமம் |
ஸங்கா³பயன்கு³ணக³ணம் தவ ஸுந்த³ரீபி⁴꞉
ஸங்கா³திரேகரஹிதோ லலிதம் சசார || 23-8 ||

பாக்கியசாலி  சித்ரகேது  உன் பக்தர்களில் முதல் வரிசைக்காரன்.  பல லக்ஷம் ஆண்டுகள் வாழ்ந்தான். வித்யாதரர்கள் அவன் தலைமையில்  மகிழ்ந்தார்கள். உன்னை  பாடல்களால் துதித்தார்கள்.  சகல லோகங்களிலும்  சஞ்சரித்தார்கள்.  எந்த விருப்பும் பற்றும்  இன்றி  ஆனந்தமாக  திருப்தியடைந்த மனத்தோடு  வாழ்ந்தார்கள்.

अत्यन्तसङ्गविलयाय भवत्प्रणुन्नो
नूनं स रूप्यगिरिमाप्य महत्समाजे ।
निश्शङ्कमङ्ककृतवल्लभमङ्गजारिं
तं शङ्करं परिहसन्नुमयाभिशेपे ॥९॥

atyanta sanga vilayaaya bhavatpraNunnO
nuunaM sa ruupyagirimaapya mahatsamaaje |
nishshankamankakR^itavallabhamangajaariM
taM shankaraM parihasannumayaa(a)bhishepe

அத்யந்தஸங்க³விலயாய ப⁴வத்ப்ரணுன்னோ
நூனம் ஸ ரூப்யகி³ரிமாப்ய மஹத்ஸமாஜே |
நிஶ்ஶங்கமங்கக்ருதவல்லப⁴மங்க³ஜாரிம்
தம் ஶங்கரம் பரிஹஸன்னுமயாபி⁴ஶேபே || 23-9 ||

சித்ரகேது அதற்குப்பிறகு செய்த காரியம் விசித்திரமானது.  கைலாசத்துக்கு சென்றான்.  மற்ற ரிஷிகள் முனிவர்கள் சூழ நின்று    எதிரே  அமர்ந்திருந்த    பரமேஸ்வரனின் மடியில் பார்வதி  அமர்ந்து  இருந்ததை  கவனித்து கேலி  செய்து விட்டான்.  இதனால் கோபமடைந்த பார்வதி தேவி அவனை  ஒரு அசுரனாகக் கடவது என்று சாபமிட்டாள்.

निस्सम्भ्रमस्त्वयमयाचितशापमोक्षो
वृत्रासुरत्वमुपगम्य सुरेन्द्रयोधी ।
भक्त्यात्मतत्त्वकथनै: समरे विचित्रं
शत्रोरपि भ्रममपास्य गत: पदं ते ॥१०॥

nissambhramastvayamayaachitashaapamOkshO
vR^itraasuratvamupagamya surendrayOdhii |
bhaktyaa(a)(a)tmatattvakathanaissamare vichitraM
shatrOrapi bhramamapaasya gataH padaM te ||

நிஸ்ஸம்ப்⁴ரமஸ்த்வயமயாசிதஶாபமோக்ஷோ
வ்ருத்ராஸுரத்வமுபக³ம்ய ஸுரேந்த்³ரயோதீ⁴ |
ப⁴க்த்யா(ஆ)த்மதத்த்வகத²னை꞉ ஸமரே விசித்ரம்
ஶத்ரோரபி ப்⁴ரமமபாஸ்ய க³த꞉ பத³ம் தே || 23-10 ||

சித்ரகேது  பார்வதியின்   சாபத்தைப் பற்றி கவலைப்படவில்லை.  சாப விமோசனமும் கேட்கவில்லை.  சாபம் பலித்து விட்டது.    இப்போது சித்ரகேது  வ்ருத்தாசுரன்.  தேவேந்திரனுடன் மோதினான்.  உன்னுடைய சிறந்த பக்தன் ஆயிற்றே.  இந்திரனின்  அஞ்ஞானத்தையும் போக்குகிறான். வேதாந்த பரமாக  ப்ரம்மத்தைப் பற்றி  உபதேசிக்கிறான். உன்னுடைய திருவடிகளை துதித்து  சரணடைகிறான்.  ஆச்சர்யமாக இருக்கிறது அவன் சரித்திரம்.

त्वत्सेवनेन दितिरिन्द्रवधोद्यताऽपि
तान्प्रत्युतेन्द्रसुहृदो मरुतोऽभिलेभे ।
दुष्टाशयेऽपि शुभदैव भवन्निषेवा
तत्तादृशस्त्वमव मां पवनालयेश ॥११॥

tvatsevanena ditirindra vadhOdyataa(a)pi
taanpratyutendra suhR^idO marutO(a)bhilebhe |
duShTaashaye(a)pi shubhadaiva bhavanniShevaa
tattaadR^ishastvamava maaM pavanaalayesha ||

த்வத்ஸேவனேன தி³திரிந்த்³ரவதோ⁴த்³யதா(அ)பி
தான்ப்ரத்யுதேந்த்³ரஸுஹ்ருதோ³ மருதோ(அ)பி⁴லேபே⁴ |
து³ஷ்டாஶயோ(அ)பி ஶுப⁴தை³வ ப⁴வன்னிஷேவா
தத்தாத்³ருஶஸ்த்வமவ மாம் பவனாலயேஶ || 23-11

குருவாயூரப்பா,  உனக்கு நினைவிருக்கிறதா?  அசுரர்களின் தாய்,  திதி, இந்திரனைக்  கொல்ல  ஒரு மகன் வேண்டும் என்று உன்னை துதித்தாள் .   உன் அனுகிரஹத்தால்  மருத்துகளை  பெற்றாள் .  அவர்கள் இந்திரனின்  நண்பர்களானார்கள்.  ஒன்று நிச்சயம்  புரிகிறது உண்ணி கிருஷ்ணன்.  கெட்டவர்கள், தீயவர்கள் உன்னை  சேவித்து, பணிந்து கெடுதல் விளைய விரும்பினாலும்  நீ  நல்ல பயன் அடையும்படியாக செய்பவன். என் நோய்களையும் தீர்த்து என்னையும் ரக்ஷிக்க வேண்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...