Tuesday, July 20, 2021

SRI MAN NAARAYANEEYAM

 


ஸ்ரீமந்   நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN --
29வது தசகம் 


29.   யாரடி நீ  மோஹினி !!

उद्गच्छतस्तव करादमृतं हरत्सु
दैत्येषु तानशरणाननुनीय देवान् ।
सद्यस्तिरोदधिथ देव भवत्प्रभावा-
दुद्यत्स्वयूथ्यकलहा दितिजा बभूवु: ॥१॥

udgachChatastava karaadamR^itaM haratsu
daityeShu taanasharaNaananuniiya devaan |
sadyastirOdadhitha deva bhavatprabhaavaat
udyatsvayuuthya kalahaa ditijaa babhuuvuH || 1

உத்³க³ச்ச²தஸ்தவ கராத³ம்ருதம் ஹரத்ஸு
தை³த்யேஷு தானஶரணானநுனீய தே³வான் |
ஸத்³யஸ்திரோத³தி⁴த² தே³வ ப⁴வத்ப்ரபா⁴வா-
து³த்³யத்ஸ்வயூத்²யகலஹா தி³திஜா ப³பூ⁴வு꞉ || 29-1 ||

குருவாயூரப்பா,  நீ  மஹா விஷ்ணுவாக பாற்கடலில் புகுந்து  தன்வந்தரியாக  இரு தங்க கலசங்களில்  அம்ருதத்தை   கைகளில் ஏந்தி வெளிவந்தவுடன்  அதைக் கண்ட  அசுரர்கள் ''அப்பாடா இதற்காக தான் இத்தனை சிரமப்பட்டோம் என்று  உன் கரத்திலிருந்து அம்ருத கலசங்களை பிடுங்கி கொண்டனர்.  அவர்களில் ஒருவனிடம் ரெண்டு கலசங்களும் சென்றுவிட்டது. தன்வந்தரியாக நீ உன் சக்தியை அசுரர்களிடம் காட்ட முடியுமா?  தேவர்கள் ''ஆஹா  இவ்வளவு பாடு பட்டு கடைசியில் ஏமாந்து போனோமே ''என்று ஏங்கி  செய்வதறியாது நின்றனர். அவர்களால் அசுரர்களிடமிருந்து  அந்த கலசங்களைச் சண்டையிட்டுப்  பெற முடியாதே.  இதற்கிடையில்  யாரோ ஒரு அசுரன் கையில் அம்ருத கலசம் இருந்தால்  மற்ற  அசுரர்கள்  சும்மா  பார்த்துக் கொண்டா  இருப்பார்கள். உன் மாயையை நீ தாராளமாக  ஏவிவிட்டாய். அது வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அசுரர்கள்  அது என்னுடையது என்று  தமக்குள் சண்டையிட  ஆரம்பித்தாகி  விட்டது. 

 
श्यामां रुचाऽपि वयसाऽपि तनुं तदानीं
प्राप्तोऽसि तुङ्गकुचमण्डलभंगुरां त्वम् ।
पीयूषकुम्भकलहं परिमुच्य सर्वे
तृष्णाकुला: प्रतिययुस्त्वदुरोजकुम्भे ॥२॥

shyaamaaM ruchaa(a)pi vayasaa(a)pi tanuM tadaaniiM
praaptO(a)si tungakuchamaNDala bhanguraaM tvam |
piiyuuSha kumbhakalahaM parimuchya sarve
tR^iShNaakulaaH pratiyayustvadurOjakumbhe || 2

ஶ்யாமாம் ருசாபி வயஸாபி தனும் ததா³னீம்
ப்ராப்தோ(அ)ஸி துங்க³குசமண்ட³லப⁴ங்கு³ராம் த்வம் |
பீயூஷகும்ப⁴கலஹம் பரிமுச்ய ஸர்வே
த்ருஷ்ணாகுலா꞉ ப்ரதியயுஸ்த்வது³ரோஜகும்பே⁴ || 29-2 ||

கிருஷ்ணா,  என் குருவாயூரப்பா, உன்னைப் போல  கபட நாடக சூத்ரதாரி இன்னொருவனைக் காணமுடியுமா? நீ என்ன செய்தாய்?   அழகெல்லாம் ஒன்றாக உருண்டு திரண்ட ஒரு ஸ்திரீயாக, எல்லோர் மனதையும் கவரும் மோகினியாக உருவம் கொண்டு  அப்போது  அங்கே தோன்றினாய். அசுரர்கள்  அவ்வளவு பேர் மனதையும்  கொள்ளை கொண்டுவிட்டாய்.  அம்ருத  கலசத்தை  மறந்து உன்னை நாட ஆரம்பித்து விட்டார்கள்.

 का त्वं मृगाक्षि विभजस्व सुधामिमामि-
त्यारूढरागविवशानभियाचतोऽमून् ।
विश्वस्यते मयि कथं कुलटाऽस्मि दैत्या
इत्यालपन्नपि सुविश्वसितानतानी: ॥३॥

kaa tvaM mR^igaakshi vibhajasva sudhaamimaam
ityaaruuDharaagavivashaanabhiyaachatO(a)muun |
vishvasyate mayi kathaM kulaTaa(a)smi daityaaH
ityaalapannapi suvishvasitaanataaniiH || 3

கா த்வம் ம்ருகா³க்ஷி விப⁴ஜஸ்வ ஸுதா⁴மிமாமி-
த்யாரூட⁴ராக³விவஶானபி⁴யாசதோ(அ)மூன் |
விஶ்வஸ்யதே மயி கத²ம் குலடாஸ்மி தை³த்யா
இத்யாலபன்னபி ஸுவிஶ்வஸிதானதானீ꞉ || 29-3 ||

''குருவாயூரப்பா,  அப்புறம்  அங்கு நடந்ததை நான் சொல்கிறேன். சரியா என்று பார்த்து சொல்.  
அசுரர்கள் பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள்.  ''ஓ  மான் விழியாளே, அழகியே, நீ யார் சொல்?'' இது எண்களிடமிருந்தால் சண்டை வருகிறது. இந்தா,  உன் கையால்  இந்த அம்ருதத்தை மது போல் எங்கள் எல்லோருக்கும்  வழங்கு  அழகிய மாதுவே?  உன் கையால்  அம்ருதம் சாப்பிட்டால் அதற்கு மதிப்பு இன்னும் கூடிவிடும்'' என்று  உன்னை கெஞ்சினார்கள்.   சந்தர்ப்பத்தை  உண்டாக்கியவன் நீ  விடுபவனா அதை ? 
''அசுர புருஷர்களே , நான் யாரோ ஒரு அந்நிய ஸ்த்ரீ?  முன் பின் நீங்கள் அறியாதவள் . என்னை நீங்கள் நம்புவீர்களா?
''பெண்ணே, நீ  யாரா இருந்தால் என்ன. உன் அழகே உன்னை நம்பச் செய்கிறது.  நீ எது செய்தா லும்  அது சரியாகத்தான் இருக்கும்.  அதற்கு ஈடிணை கிடையாது. கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதாக இருக்கும்''  என்றார்கள் அசுரர்கள் மதி மயங்கி.  

 मोदात् सुधाकलशमेषु ददत्सु सा त्वं
दुश्चेष्टितं मम सहध्वमिति ब्रुवाणा ।
पङ्क्तिप्रभेदविनिवेशितदेवदैत्या
लीलाविलासगतिभि: समदा: सुधां ताम् ॥४॥
 
mOdaat sudhaakalasha-meShu dadatsu saa tvaM
dushcheShTitaM mama sahadhvamiti bruvaaNaa |
pankti prabheda viniveshita deva daityaa
liilaavilaasa gatibhissamadaassudhaaM taam ||4

மோதா³த்ஸுதா⁴கலஶமேஷு த³த³த்ஸு ஸா த்வம்
து³ஶ்சேஷ்டிதம் மம ஸஹத்⁴வமிதி ப்³ருவாணா |
பங்க்திப்ரபே⁴த³வினிவேஶிததே³வதை³த்யா
லீலாவிலாஸக³திபி⁴꞉ ஸமதா³꞉ ஸுதா⁴ம் தாம் || 29-4 ||

''நாங்கள்  இதை வைத்துக்கொண்டிருந்தால் ஒருவர் மேல் ஒருவர்  பொறாமையும், கோபமும் சந்தேகமும்,   கொள்வோம்.  ''இந்தா  இதில் உள்ள அம்ருதத்தை  இங்குஅனைவருக்கும்  சரிசமமாக வழங்கு.  நீ  கெட்டிக்காரியாக இருக்கிறாய்.   நீ தான் சரியானவள்.எங்களுக்கு இதை பரிமாறு'' என்று தங்க அம்ருத கலசங்களை மோஹினியான உன்னிடம் கொடுத்துவிட்டனர். நீ எதிர்பார்த்தது அதுதானே.  
நீ என்ன பதில் சொன்னாய் தெரியுமா?    

'அசுர வீரர்களே, என் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, அன்பு இருப்பதற்கு நான் கொடுத்து வைத்தவள். உங்களை எல்லாம் திருப்தி படுத்துகிறேன். என் செயல்  ஏதாவது  ஏடா கூடமாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஏற்றுக் கொள்ளவேண்டும்.  நான் உங்கள் அனைவருக்குமே இதைப்  பரிமாறுகிறேன்''

''அழகு தெய்வமே, அப்படியே செய். நீ எது செய்தாலும் அது ஒன்று தான் எங்களுக்குச் சரி '' என்றனர் அசுரர்கள். தேவர்கள் வாயையே திறக்கவில்லை. அவர்களுக்கு  நீ தான் மோஹினி என்ற சந்தேகம் வலுத்து விட்டது.  எல்லோரும் வரிசையாக உட்காருங்கள் என்று  எதிரும் புதிருமாக  தேவர்களையும் அசுரர்களையும் வரிசையாக அமர வைத்தாய். காந்தக் கண்களால் அசுரர்களை மயக்கி, உன் எழில் நடையால் இதயம் நொறுங்கச் செய்தாய்.  எங்கே தான் கற்றாயோ இந்த வித்தையெல்லாம்!


 अस्मास्वियं प्रणयिणीत्यसुरेषु तेषु
जोषं स्थितेष्वथ समाप्य सुधां सुरेषु ।
त्वं भक्तलोकवशगो निजरूपमेत्य
स्वर्भानुमर्धपरिपीतसुधं व्यलावी: ॥५॥

asmaasviyaM praNayiniityasureShu teShu
jOShaM sthiteShvatha samaapya sudhaaM sureShu |
tvaM bhaktalOkavashagO nijaruupametya
svarbhaanumardhaparipiita sudhaM vyalaaviiH || 5

அஸ்மாஸ்வியம் ப்ரணயினீத்யஸுரேஷு தேஷு
ஜோஷம் ஸ்தி²தேஷ்வத² ஸமாப்ய ஸுதா⁴ம் ஸுரேஷு |
த்வம் ப⁴க்தலோகவஶகோ³ நிஜரூபமேத்ய
ஸ்வர்பா⁴னுமர்த⁴பரிபீதஸுத⁴ம் வ்யலாவீ꞉ || 29-5 ||

ஒவ்வொரு அசுரன் மனத்திலும்  அவனைத்தான் நீ  விரும்புவதாகவும் அவனை அடைய ஆசைப்பட்டு அவனுக்கே உரியவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அனைவரையும்  அமைதியாக நீ செய்வதெல்லாம் ஏற்கச்  செய்துவிட்டாய் மாயா ஜால கண்ணா!   நீயோ பக்தவத்சலன் என்று எல்லோரும் அறிவர்.  ஆகவே  முதலில் தேவர்களுக்கு அம்ருதத்தை வழங்க ஆரம்பித்தாய். 
தேவர்களிடையே அமர்ந்திருந்த ராஹு  எனும்  அசுரனை  அவன் தேவன் அல்ல, அசுரன் என அடையாளம் கண்டுகொண்டாய். அதற்குள் அவன் தேவர்களுக்கு தந்த அளவில் பாதி அம்ருதத்தை விழுங்கி விட்டான். அவன் சிரத்தைக்  கொய்தாய். 

 त्वत्त: सुधाहरणयोग्यफलं परेषु
दत्वा गते त्वयि सुरै: खलु ते व्यगृह्णन् ।
घोरेऽथ मूर्छति रणे बलिदैत्यमाया-
व्यामोहिते सुरगणे त्वमिहाविरासी: ॥६॥

tvattaH sudhaaharaNayOgyaphalaM pareShu
datvaa gate tvayi suraiH khalu te vyagR^ihNan |
ghOre(a)tha muurchChati raNe balidaityamaayaavyaamOhite
suragaNe tvamihaaviraasiiH || 6

த்வத்த꞉ ஸுதா⁴ஹரணயோக்³யப²லம் பரேஷு
த³த்த்வா க³தே த்வயி ஸுரை꞉ க²லு தே வ்யக்³ருஹ்ணன் |
கோ⁴ரே(அ)த² மூர்ச²தி ரணே ப³லிதை³த்யமாயா-
வ்யாமோஹிதே ஸுரக³ணே த்வமிஹாவிராஸீ꞉ || 29-6 ||

உன்னை யார் என்று அசுரர்கள் அதற்குள் கண்டு கொண்டு விட்டார்கள்.  மீதி அம்ருதம் இருந்த கலசத்தை  உன்னிடமிருந்து  பிடுங்கி கொண்டார்கள். ஆகவே  அசுரர்களை தண்டித்து விட்டு  நீ மறைந்து விட்டாய்.  தேவர்களும் அசுரர்களும் மோதலானார்கள். பலத்த தேவாசுர  யுத்தமாகி விட்டது அது.  பலி  எனும் அசுரனின் தந்திரத்தால்  தேவர்கள் மயங்கி விழுந்தனர்.  மறைந்திருந்த  
 நீ  மீண்டும் அசுரர்கள் அருகே வந்தாய்.

त्वं कालनेमिमथ मालिमुखाञ्जघन्थ
शक्रो जघान बलिजम्भवलान् सपाकान् ।
शुष्कार्द्रदुष्करवधे नमुचौ च लूने
फेनेन नारदगिरा न्यरुणो रणं त्वं ॥७॥

tvaM kaalanemimatha maalimukhaanjaghantha
shakrO jaghaana balijambhavalaan sapaakaan |
shuShkaardra duShkaravadhe namuchau cha luune
phenena naaradagiraa nyaruNO raNaM tvam || 7

த்வம் காலனேமிமத² மாலிமுகா²ஞ்ஜக⁴ந்த²
ஶக்ரோ ஜகா⁴ன ப³லிஜம்ப⁴வலான் ஸபாகான் |
ஶுஷ்கார்த்³ரது³ஷ்கரவதே⁴ நமுசௌ ச லூனே
பே²னேன நாரத³கி³ரா ந்யருணோ ரணம் த்வம் || 29-7 ||

குருவாயூரப்பா, உன்னை எதிர்த்த அசுரர்களை கொன்றாய்.  காலநேமி, மாலி போன்றவர்கள் இப்படி தான் மாண்டார்கள்.  உன் அம்ருத பலத்தால்,  தேவேந்திரன்  பாகன், பாலி, ஜாம்பா , வலன்  ஆகியோரை அழித்தான்.  நமுச்சி என்ற  ராக்ஷஸன் எந்த  ஈரமுள்ள, உலர்ந்த  ஆயுதத்தாலும் கொல்ல முடியாதவன் என்று தெரிந்ததால், கடல் நுரையால் அவனைக் கொன்றான்.  நாரதர்  போதும் இந்த  யுத்தம் என்று நிறுத்த வேண்டிக்கொண்டதால், யுத்தத்தை   நிறுத்தினாய். 

योषावपुर्दनुजमोहनमाहितं ते
श्रुत्वा विलोकनकुतूहलवान् महेश: ।
भूतैस्समं गिरिजया च गत: पदं ते
स्तुत्वाऽब्रवीदभिमतं त्वमथो तिरोधा: ॥८॥

yOShaa vapurdanujamOhanamaahitaM te
shrutvaa vilOkana kutuuhalavaan maheshaH |
bhuutaissamaM girijayaa cha gataH padaM te
stutvaa(a)braviidabhimataM tvamathO tirOdhaaH ||8

யோஷாவபுர்த³னுஜமோஹனமாஹிதம் தே
ஶ்ருத்வா விலோகனகுதூஹலவான்மஹேஶ꞉ |
பூ⁴தைஸ்ஸமம் கி³ரிஜயா ச க³த꞉ பத³ம் தே
ஸ்துத்வாப்³ரவீத³பி⁴மதம் த்வமதோ² திரோதா⁴꞉ || 29-8 ||

 பரம சிவனுக்கு நீ அழகிய மோகினியாக காட்சி தந்து  அசுரர்களை மயக்கிய செய்தி சென்று விட்டது.   அட  மஹா விஷ்ணு இப்படியா ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார்  அதைக்  காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு வந்தார்.  அவரோடு பார்வதி, பூத, சிவ கணங்கள் உடன் வந்தனர் .  உன்னை கண்டதும் உன்னை புகழ்ந்து போற்றின பரம சிவனின் உள்ளத்தை புரிந்து கொண்ட நீ அங்கிருந்து  மறைந்தாய். 

 आरामसीमनि च कन्दुकघातलीला-
लोलायमाननयनां कमनीं मनोज्ञाम् ।
त्वामेष वीक्ष्य विगलद्वसनां मनोभू-
वेगादनङ्गरिपुरङ्ग समालिलिङ्ग ॥९॥

aaraamasiimani cha kandukaghaataliilaa
lOlaayamaana nayanaaM kamaniiM manOj~naam |
tvaameSha viikshya vigaladvasanaaM manObhuuve
gaadanangaripuranga samaalilinga || 9

ஆராமஸீமனி ச கந்து³ககா⁴தலீலா
லோலாயமானநயனாம் கமனீம் மனோஜ்ஞாம் |
த்வாமேஷ வீக்ஷ்ய விக³லத்³வஸனாம் மனோபூ⁴-
வேகா³த³னங்க³ரிபுரங்க³ ஸமாலிலிங்க³ || 29-9 ||

உன்னைத் தேடி ஓடிவந்த பரமேஸ்வரன் உன் காந்த கண்களால் கவரப்பட்டு பின் தொடர்ந்து மன்மதனையே எரித்த முக்கண்ணன், உன்னை அணைத்துக் கொண்டார். 
 
भूयोऽपि विद्रुतवतीमुपधाव्य देवो
वीर्यप्रमोक्षविकसत्परमार्थबोध: ।
त्वन्मानितस्तव महत्त्वमुवाच देव्यै
तत्तादृशस्त्वमव वातनिकेतनाथ ॥१०॥

bhuuyO(a)pi vidrutavatiimupadhaavya devO
viirya pramOksha vikasatparamaarthabOdhaH |
tvanmaanitastava mahatvamuvaacha devyai
tattaadR^ishastvamava vaataniketanaatha ||10

பூ⁴யோ(அ)பி வித்³ருதவதீமுபதா⁴வ்ய தே³வோ
வீர்யப்ரமோக்ஷவிகஸத்பரமார்த²போ³த⁴꞉ |
த்வன்மானிதஸ்தவ மஹத்வமுவாச தே³வ்யை
தத்தாத்³ருஶஸ்த்வமவ வாதனிகேதனாத² || 29-10 ||

அங்கிருந்து ஓடிவிட்ட உன்னை தொடர்ந்து சென்ற பரமசிவன் ஒரு க்ஷணத்தில்  உன் மாயை யிலிருந்து விடுபட்டு,  உன்னை உணர்ந்து  மகிழ்ந்து பார்வதி தேவியிடமும்  மற்றவர்கள் எல்லோருக்கும்  உன் சாமர்த்தியத்தை  சமயோசிதத்தை,  மஹாத்மியத்தை விளக்கிச்  சொன்னார்.    எண்டே  குருவாயூரப்பா, நீ எது செய்தாலும் அது   'ஒண்ணாங் கிளாஸ்',   எவரும் உனக்கு ஈடில்லை. ஒப்புமையில்லை. பகவானே  என்னை இந்த  வாத நோயிலிருந்து விடுவித்து என்னையும்  ரக்ஷிப்பாய்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...