Tuesday, July 6, 2021

SRIMAN NARAYANEEYAM



 ஸ்ரீமந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர் J K  SIVAN  ---

19வது தசகம்


19.  பிரசேதஸ்கள் தவம் 


पृथोस्तु नप्ता पृथुधर्मकर्मठ:
प्राचीनबर्हिर्युवतौ शतद्रुतौ ।
प्रचेतसो नाम सुचेतस: सुता-
नजीजनत्त्वत्करुणाङ्कुरानिव ॥१॥

pR^ithOstu naptaa pR^ithudharmakarmaThaH
praachiinabarhiryuvatau shatadrutau |
prachetasO naama suchetasaH sutaa
najiijanattvatkaruNaankuraaniva॥


ப்ருதோ²ஸ்து நப்தா ப்ருது²த⁴ர்மகர்மட²꞉
ப்ராசீனப³ர்ஹிர்யுவதௌ ஶதத்³ருதௌ |
ப்ரசேதஸோ நாம ஸுசேதஸ꞉ ஸுதா-
நஜீஜனத்த்வத்கருணாங்குரானிவ || 19-1 ||

குருவாயூரப்பா, உனக்கு ப்ருது பற்றி சொன்னேனே , அவனுடைய  கொள்ளுப்பேரனுக்கு ஒரு பிள்ளை, எள்ளுப்பேரன்,  இருந்தானே தெரியுமா உனக்கு?  அவன் பெயர்  ப்ராசீனபர்ஹிர்.  இந்த எள்ளுப்பேரனுக்கு யாக யஞங்களில்  தான தர்மங்களில் ரொம்ப  ஈடுபாடும்   விருப்பமுமுண்டு.
அவன் மனைவி  சதத்ருதிக்கு  பத்து   பிள்ளைகள்  பிறந்தார்கள்.  அவர்களை பிரசேதஸ் என்று தான் அடையாளம் காண்கிறது வேதம்.   நல்ல  இதயம் கொண்டவர்கள்..  உன் கருணை பெற்றவர்கள்.

पितु: सिसृक्षानिरतस्य शासनाद्-
भवत्तपस्याभिरता दशापि ते
पयोनिधिं पश्चिममेत्य तत्तटे
सरोवरं सन्ददृशुर्मनोहरम् ॥२॥

pituH sisR^ikshaaniratasya shaasanaad
bhavattapasyaanirataa dashaapi te |
payOnidhiM pashchimametya tattaTe
sarOvaraM sandadR^ishurmanOharam॥

பிது꞉ ஸிஸ்ருக்ஷானிரதஸ்ய ஶாஸனாத்³-
ப⁴வத்தபஸ்யாபி⁴ரதா த³ஶாபி தே |
பயோனிதி⁴ம் பஶ்சிமமேத்ய தத்தடே
ஸரோவரம் ஸந்த³த்³ருஶுர்மனோஹரம் || 19-2 ||

பிரசேதஸ்களின்  அப்பா  சிருஷ்டியில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள்  உன்னைப்பற்றி தியானித்து தவம் இருந்தார்கள்.  அந்த பத்து பெரும்  மேற்கு பக்க கடல் கரையில்   இருந்தபோது அவர்கள் கண்களில்  ஒரு   அழகிய  தாமரைத் தடாகம் கண்ணில் பட்டது.   

அன்பர்களே,  குருவாயூர்  அப்பனை தரிசிக்க செல்வோர்கள் கட்டாயம்  அருகே  உள்ள  மம்மியூர் மஹாதேவன் ஆலயம் செல்வது வழக்கம். கேரளாவில் உள்ள  108  சிவாலயங்களில் அதுவும் ஒன்று.    குருவாயூரை ஒட்டி  உள்ள  ஐந்து சிவாலயங்களிலும் ஒன்று.  அந்த மம்மியூர்  உமாமகேஸ்வரன் ஆலயம் எதிரே உள்ள குலத்தைத்தான்  நாராயண நம்பூதிரி இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.  அந்த  குளத்தில் இருந்த தாமரை மலர்களைத்தான்  பிரசேதஸ்கள்  பார்த்தது.


तदा भवत्तीर्थमिदं समागतो
भवो भवत्सेवकदर्शनादृत: ।
प्रकाशमासाद्य पुर: प्रचेतसा-
मुपादिशत् भक्ततमस्तव स्तवम् ॥३॥

tadaa bhavattiirthamidaM samaagatO
bhavO bhavatsevakadarshanaadR^itaH |
prakaashamaasaadya puraH prachetasaa
mupaadishat  bhaktatamastava stavam ||

ததா³ ப⁴வத்தீர்த²மித³ம் ஸமாக³தோ
ப⁴வோ ப⁴வத்ஸேவகத³ர்ஶனாத்³ருத꞉ |
ப்ரகாஶமாஸாத்³ய புர꞉ ப்ரசேதஸா-
முபாதி³ஶத்³ப⁴க்ததமஸ்தவஸ்தவம் || 19-3 ||

மம்மியூர்  உமாமகேஸ்வரன் என்ன செய்தான் தெரியுமோ?  பிரசேதஸ்கள் வந்திருப்பதை உணர்ந்து, அவர்கள்  உன் பக்தர்கள் என்பதையும்  அறிந்தவன் .  உமாமஹேஸ்வரனான  சிவபெருமானே உன் பக்தன் தானே.  நேராக  குளத்தருகே வந்தான்.   பிரசேதஸ்கள் முன்னால் நின்றான்.  அவர்களுக்கு ருத்ர கீதம்  கற்பித்தான்.  உனக்குத் தெரிந்ததை தானே நான் ஞாபகப்படுத்தி பாடுகிறேன்?  என்று நம்பூதிரி கேட்டபோது  குருவாயூரப்பன்  புன்னகையோடு குருவாயூரப்பன் ஆமாம் என்று தலையசைத்தான்.

स्तवं जपन्तस्तममी जलान्तरे
भवन्तमासेविषतायुतं समा: ।
भवत्सुखास्वादरसादमीष्वियान्
बभूव कालो ध्रुववन्न शीघ्रता ॥४॥

stavaM japantastamamii jalaantare
bhavantamaaseviShataayutaM samaaH |
bhavatsukhaasvaadarasaadamiiShviyaan
babhuuva kaalO dhruvavanna shiighrataa ||4

ஸ்தவம் ஜபந்தஸ்தமமீ ஜலாந்தரே
ப⁴வந்தமாஸேவிஷதாயுதம் ஸமா꞉ |
ப⁴வத்ஸுகா²ஸ்வாத³ரஸாத³மீஷ்வியான்
ப³பூ⁴வ காலோ த்⁴ருவவன்ன ஶீக்⁴ரதா || 19-4 ||

பிரசேதஸ்கள்  சிவன் கற்பித்த  ருத்ர கீதத்தை  அந்த தாமரைக்கு குளத்தில்  அமிழ்ந்தபடியே  பத்தாயிரம் வருஷம் ஜெபித்தனர்.  அவர்கள் ஏன்  அதை செய்தார்கள் தெரியுமா?  எதையும் வேண்டி அல்ல.  உன் நாமத்தை பஜிப்பதால் உண்டாகும் ஆனந்தத்தை அனுபவிக்க.  துருவன் மாதிரி  எதையோ எதிர்பார்த்து புரிந்த தவம் அல்ல. 

तपोभिरेषामतिमात्रवर्धिभि:
स यज्ञहिंसानिरतोऽपि पावित: ।
पिताऽपि तेषां गृहयातनारद-
प्रदर्शितात्मा भवदात्मतां ययौ ॥५॥

tapObhireShaamatimaatravardhibhiH
sa yaj~nahimsaaniratO(a)pi paavitaH |
pitaa(a)pi teShaaM gR^ihayaatanaarada
pradarshitaatmaa bhavadaatmataaM yayau ||

தபோபி⁴ரேஷாமதிமாத்ரவர்தி⁴பி⁴꞉
ஸ யஜ்ஞஹிம்ஸானிரதோ(அ)பி பாவித꞉ |
பிதா(அ)பி தேஷாம் க்³ருஹயாதனாரத³-
ப்ரத³ர்ஶிதாத்மா ப⁴வதா³த்மதாம் யயௌ || 19-5 ||

பிரசேதஸ்கள் செய்த  கடும் தவத்தால்  அவர்கள் தந்தை யாகங்கள் செய்யும்போது  விலங்குகளை துன்புறுத்திய பாபமும்  கரைந்து விட்டது.  தந்தையும்  புனிதமடைந்தான்.  நாரதர்  அவனுக்கு உபதேசித்த  ஆத்ம ஞான மந்திரத்தால்  அவர்கள் தந்தை ப்ராசீன பர்ஹிரும் மோக்ஷமடைந்தான்.

कृपाबलेनैव पुर: प्रचेतसां
प्रकाशमागा: पतगेन्द्रवाहन: ।
विराजि चक्रादिवरायुधांशुभि-
र्भुजाभिरष्टाभिरुदञ्चितद्युति: ॥६॥

kR^ipaabalenaiva puraH prachetasaaM
prakaashamaagaaH patagendravaahanaH |
viraaji chakraadivaraayudhaamshubhir
bhujaabhiraShTaabhiruda~nchitadyutiH ||

க்ருபாப³லேனைவ புர꞉ ப்ரசேதஸாம்
ப்ரகாஶமாகா³꞉ பதகே³ந்த்³ரவாஹன꞉ |
விராஜி சக்ராதி³வராயுதா⁴ம்ஶுபி⁴-
ர்பு⁴ஜாபி⁴ரஷ்டாபி⁴ருத³ஞ்சிதத்³யுதி꞉ || 19-6 ||

குருவாயூரப்பா,  உன் கருணைஉள்ளத்தால், நீ  பிரசேதஸ்கள்  செய்த  அருந்தவத்தில் மகிழ்ந்து  அவர்கள் முன்  கருடாரூடனாக, சங்கு சக்ர  ஆயுதங்களேந்திய  எட்டு  கரங்களுடன்,  சூரியனை  மிஞ்சும்  ஒளியுடன்  காட்சி  தந்தாய்.  

प्रचेतसां तावदयाचतामपि
त्वमेव कारुण्यभराद्वरानदा: ।
भवद्विचिन्ताऽपि शिवाय देहिनां
भवत्वसौ रुद्रनुतिश्च कामदा ॥७॥

prachetasaaM taavadayaachataamapi
tvameva kaaruNyabharaadvaraanadaaH |
bhavadvichintaa(a)pi shivaaya dehinaaM
bhavatvasau rudranutishcha kaamadaa ||

ப்ரசேதஸாம் தாவத³யாசதாமபி
த்வமேவ காருண்யப⁴ராத்³வரானதா³꞉ |
ப⁴வத்³விசிந்தா(அ)பி ஶிவாய தே³ஹினாம்
ப⁴வத்வஸௌ ருத்³ரனுதிஶ்ச காமதா³ || 19-7 ||

பிரசேதஸ்கள்  கேட்கும் முன்பே நீ அவர்களுக்கு  வரம் அளித்தது உன் கருணைச் செயல். 
''உங்கள்  தவத்தின் மகிமையால்   நீங்கள் அனுஷ்டித்த மந்த்ர  உச்சாடனத்தால்  உலகில் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும். நீங்கள் ஜெபித்த  ருத்ர கீதத்தின் பலன் அவர்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றட்டும்''  என்று அருள் புரிந்தாய். 

अवाप्य कान्तां तनयां महीरुहां
तया रमध्वं दशलक्षवत्सरीम् ।
सुतोऽस्तु दक्षो ननु तत्क्षणाच्च मां
प्रयास्यथेति न्यगदो मुदैव तान् ॥८॥


avaapya kaantaaM tanayaaM mahiiruhaaM
tayaa ramadhvaM dashalakshavatsariim |
sutO(a)stu dakshO nanu tatkshaNaachcha maaM
prayaasyatheti nyagadO mudaiva taan ||

அவாப்ய காந்தாம் தனயாம் மஹீருஹாம்
தயா ரமத்⁴வம் த³ஶலக்ஷவத்ஸரீம் |
ஸுதோ(அ)ஸ்து த³க்ஷோ நனு தத்க்ஷணாச்ச மாம்
ப்ரயாஸ்யதே²தி ந்யக³தோ³ முதை³வ தான் || 19-8 ||

தருக்கள், மரங்கள்,  மகளான  மரிஷா வை  மணந்து  பத்தாயிரம்  ஆண்டுகள் சுகமாக இருப்பீர்கள்.   உங்களுக்கு  தக்ஷன் என்று ஒரு மகன் பிறப்பான். இராகு என்னை வந்தடைவீர்'' என்று  நாராயணன் அருளினான். 

ततश्च ते भूतलरोधिनस्तरून्
क्रुधा दहन्तो द्रुहिणेन वारिता: ।
द्रुमैश्च दत्तां तनयामवाप्य तां
त्वदुक्तकालं सुखिनोऽभिरेमिरे ॥९॥

tatashcha te bhuutalarOdhinastaruun
krudhaa dahantO druhiNena vaaritaaH |
drumaishcha dattaaM tanayaamavaapya taaM
tvaduktakaalaM sukhinO(a)bhiremire || 9

ததஶ்ச தே பூ⁴தலரோதி⁴னஸ்தரூன்
க்ருதா⁴ த³ஹந்தோ த்³ருஹிணேன வாரிதா꞉ |
த்³ருமைஶ்ச த³த்தாம் தனயாமவாப்ய தாம்
 த்வது³க்தகாலம் ஸுகி²னோ(அ)பி⁴ரேமிரே || 19-9 ||

மிகுந்த சந்தோஷத்தோடு  நாராயணனை வணங்கிய  பிரசேதஸ்கள்  மரங்களை எரித்தனர். பூமியெங்கும் மரங்களாயிருந்த காலம் அது.  அவற்றை எரிக்க வேண்டாம் என்று  ப்ரம்மா தடுத்தார்.   மரங்களின் ஆதரவில் வளர்ந்து வந்த மரிஷாவை மணந்து கொண்டார்கள். உனது அருளால்  அவர்கள் சௌகர்யமாக வாழ்ந்தார்கள். 

अवाप्य दक्षं च सुतं कृताध्वरा:
प्रचेतसो नारदलब्धया धिया ।
अवापुरानन्दपदं तथाविध-
स्त्वमीश वातालयनाथ पाहि माम् ॥१०॥

avaapya dakshaM cha sutaM kR^itaadhvaraaH
prachetasO naaradalabdhayaa dhiyaa |
avaapuraanandapadaM tathaavidhastvamiisha
vaataalayanaatha paahi maam ||

அவாப்ய த³க்ஷம் ச ஸுதம் க்ருதாத்⁴வரா꞉
ப்ரசேதஸோ நாரத³லப்³த⁴யா தி⁴யா |
அவாபுரானந்த³பத³ம் ததா²வித⁴-
ஸ்த்வமீஶ வாதாலயனாத² பாஹிமாம் || 19-10 ||

சிலகாலம் கழிந்தபின்  அவர்களுக்கு  தக்ஷ எனும்  மகன் பிறந்தான். பல  யாகங்களைப்  புரிந்து  அமைதியாக வாழ்ந்தார்கள்.    நாரதர் கற்பித்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டு  பல   யாகங்களை புரிந்த பின்   நீண்டகாலம் சந்தோஷமாக  வாழ்ந்தார்கள்.  ஒரு நாள் உன் திருவடி கமலங்களில்  ஐக்கியமாகி  மோக்ஷம் அடைந்தார்கள்.   அவர்களை  ரக்ஷித்து போல் என் நோய்களை நீக்கி எனக்கும் அருள் புரிவாய் என்று  இந்த  19வது தசகத்தை    நம்பூதிரி நிறைவு செய்கிறார் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...