ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN --
28வது தசகம்.
28. லக்ஷ்மி பிரவேசம்
गरलं तरलानलं पुरस्ता-
ज्जलधेरुद्विजगाल कालकूटम् ।
अमरस्तुतिवादमोदनिघ्नो
गिरिशस्तन्निपपौ भवत्प्रियार्थम् ॥१॥
garalaM taralaanalaM purastaa
jjaladherudvijagaala kaalakuuTam |
amarastutivaada mOda nighnO
girishastannipapau bhavatpriyaartham || 1
க³ரலம் தரலானலம் புரஸ்தா-
ஜ்ஜலதே⁴ருத்³விஜகா³ல காலகூடம் |
அமரஸ்துதிவாத³மோத³னிக்⁴னோ
கி³ரிஶஸ்தன்னிபபௌ ப⁴வத்ப்ரியார்த²ம் || 28-1 ||
தேவர்களும் அசுரர்களும் விஷ்ணுவாகிய குருவாயூரப்பா, நீ தந்த ஊக்கத்திலே, சக்தியிலே, விடாமல் பாற்கடலை கடைந்தார்கள். வாசுகியின் உடல் மந்திர மலையில் சுற்றி கயிறாக இழுக்கப்பட்டதில் வாசுகி எளிதில் களைப்படைந்து. நீ அதற்கும் சக்தி அளித்தாய்.
கடைந்ததற்கு பலன் இல்லாமல் போகுமா?
முதலில் வெளிவந்தது என்ன என்று உனக்கு தான் எல்லாரையும் விட முதலில் தெரியும். மிக கொடிய விஷமான காலகூடம் . ஐயோ, இதை என்ன செய்வது. இதற்கு தானா இவ்வளவு பாடு பட்டது?
வெளியில் இருந்தால் பல உயிர்களுக்கு ஆபத்தாயிற்றே? நெருஎன்ன செய்வது என்று ப்பென தகிக்கும் கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையோடு வந்த அந்த விஷத்தை என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்தபோது ''என்னிடம் விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று பரமேஸ்வரன் சிவன் அதை அப்படியே விழுங்கி விட்டார். அவரை அது ஒன்றும் செய்ய முடியாதே. தேவர்கள் அனைவரும் வணங்கி போற்றினர்.
विमथत्सु सुरासुरेषु जाता
सुरभिस्तामृषिषु न्यधास्त्रिधामन् ।
हयरत्नमभूदथेभरत्नं
द्युतरुश्चाप्सरस: सुरेषु तानि ॥२॥
vimathatsu suraasureShu jaataa
surabhistaamR^iShiShu nyadhaasitradhaaman |
hayaratnamabhuudathebharatna
M dyutaru shchaapsarasaH sureShu taani || 2
விமத²த்ஸு ஸுராஸுரேஷு ஜாதா
ஸுரபி⁴ஸ்தாம்ருஷிஷு ந்யதா⁴ஸ்த்ரிதா⁴மன் |
ஹயரத்னமபூ⁴த³தே²ப⁴ரத்னம்
த்³யுதருஶ்சாப்ஸரஸ꞉ ஸுரேஷு தானி || 28-2 ||
பாற்கடலை மேற்கொண்டு கடைந்தார்கள். ஆஹா, இது என்ன அழகிய பசு போல் ஒன்று. காமதேனு. தேவர்களே இந்தாருங்கள் நீங்கள் விரும்பியதை அளிக்கும் பசு என்று நீ அந்த காமதேனுவை அவர்களிடம் கொடுத்துவிட்டாய். அடுத்ததாக பாற்கடலிலிருந்து வெளி வந்தது உச்சைஸ்ரவஸ் எனும் குதிரை. அதை இந்திரனுக்கு பரிசாக கொடுத்தாய். அப்பறம் ஐராவதம் எனும் யானை, தொடர்ந்து கற்பக விருக்ஷம். அப்புறம் அழகிய அப்ஸரஸ்கள். இந்தாருங்கள் தேவர்களே என்று அவர்களுக்கே அனைத்தையும் வழங்கிவிட்டாய்.
जगदीश भवत्परा तदानीं
कमनीया कमला बभूव देवी ।
अमलामवलोक्य यां विलोल:
सकलोऽपि स्पृहयाम्बभूव लोक: ॥३॥
jagadiisha bhavatparaa tadaaniiM
kamaniiyaa kamalaa babhuuva devii |
amalaamavalOkya yaaM vilOlaH
sakalO(a)pi spR^ihayaambabhuuva lOkaH || 3
ஜக³தீ³ஶ ப⁴வத்பரா ததா³னீம்
கமனீயா கமலா ப³பூ⁴வ தே³வீ |
அமலாமவலோக்ய யாம் விலோல꞉
ஸகலோ(அ)பி ஸ்ப்ருஹயாம்ப³பூ⁴வ லோக꞉ || 28-3 ||
அடுத்ததாக வெளிவந்தது ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி. உன்னைக்கண்டதும் நீயும் அவளும் முடிவு செய்துவிட்டீர்கள். நாம் நமக்குத்தான் என்று. இருவரும் ஒன்றாவது என்று பார்வையே சொல்லிவிட்டது. மற்றவர்கள் அவளை விரும்பி என்ன பயன்? மஹாலக்ஷ்மி உன்னை அடைந்தாள்.
त्वयि दत्तहृदे तदैव देव्यै
त्रिदशेन्द्रो मणिपीठिकां व्यतारीत् ।
सकलोपहृताभिषेचनीयै:
ऋषयस्तां श्रुतिगीर्भिरभ्यषिञ्चन् ॥४॥
tvayi dattahR^ide tadaiva devyai
tridashendrO maNipiiThikaaM vyataariit |
sakalOpahR^itaabhiShechaniiyai-
rR^IShayastaaMshrutigiirbhirabhyaShi~nchan || 4
த்வயி த³த்தஹ்ருதே³ ததை³வ தே³வ்யை த்ரித³ஶேந்த்³ரோ மணிபீடி²காம் வ்யதாரீத் |
ஸகலோபஹ்ருதாபி⁴ஷேசனீயை
ர்ருஷயஸ்தாம் ஶ்ருதிகீ³ர்பி⁴ரப்⁴யஷிஞ்சன் || 28-4 ||
மஹாலக்ஷ்மியை இந்திரன் தேவர்கள் புடைசூழ நவரத்ன சிம்ஹாசனத்தோடு வேத மந்திர கோஷத்தோடு உனக்கு காணிக்கையாக்கினான்.
अभिषेकजलानुपातिमुग्ध-
त्वदपाङ्गैरवभूषिताङ्गवल्लीम् ।
मणिकुण्डलपीतचेलहार-
प्रमुखैस्ताममरादयोऽन्वभूषन् ॥५॥
abhiSheka jalaanupaati mugdha
tvadapaa~Ngai ravabhuuShitaangavalliim |
maNikuNDala piita chela haara pramuk
haistaamamaraadayO(a)nvabhuuShan || 5
அபி⁴ஷேகஜலானுபாதிமுக்³த⁴
த்வத³பாங்கை³ரவபூ⁴ஷிதாங்க³வல்லீம் |
மணிகுண்ட³லபீதசேலஹார-
ப்ரமுகை²ஸ்தாமமராத³யோ(அ)ன்வபூ⁴ஷன் || 28-5 ||
குருவாயூரப்பா, தேவர்கள் மகாலக்ஷ்மிக்கு புண்ய தீர்த்தங்களில் அபிஷேகம் செய்வித்து , அலங்கரித்து, ஆபரணங்கள் பூட்டி மஞ்சள் பட்டு வஸ்திரம் அளித்து சர்வாலங்கார பூஷிதையாக தொழுது உன்னிடம் சேர்ப்பித்தார்கள்.
वरणस्रजमात्तभृङ्गनादां
दधती सा कुचकुम्भमन्दयाना ।
पदशिञ्जितमञ्जुनूपुरा त्वां
कलितव्रीलविलासमाससाद ॥६॥
varaNa srajamaatta bhR^inga naadaa
M dadhatii saa kuchakumbha mandayaanaa |
padashi~njitama~njunuupuraa tvaa
M kalitavriila vilaasamaasasaada ||6
வரணஸ்ரஜமாத்தப்⁴ருங்க³னாதா³ம்
த³த⁴தீ ஸா குசகும்ப⁴மந்த³யானா |
பத³ஶிஞ்ஜிதமஞ்ஜுனூபுரா த்வாம்
கலிதவ்ரீலவிலாஸமாஸஸாத³ || 28-6 ||
குருவாயூரப்பா, ஒரு நல்ல மலர் மாலையின் சிறப்பு அதை சூழ்ந்திருக்கும் தேன் வண்டுகள் தான். அவற்றின் ரீங்காரம் ஒலிக்க தேனைப் பருக சுற்றுவது. இத்தகைய மலர் மாலைகளை அணிந்து புத்தம் புது மணப்பெண்ணாக தேவர்கள் அவளை அழைத்து வர அவள் வெட்கம் சூழ கால் சலங்கைகள் கொலுசுகள் ஒலிக்க உன்னை அடைந்தாள். ஆஹா அந்த காட்சி என் மனக்கண் முன் நிற்கிறதே. எத்தனை கல்யாணம் பார்த்தாலும் இந்த கல்யாணம் பார்ப்பது போல் ஆகுமா?
गिरिशद्रुहिणादिसर्वदेवान्
गुणभाजोऽप्यविमुक्तदोषलेशान् ।
अवमृश्य सदैव सर्वरम्ये
निहिता त्वय्यनयाऽपि दिव्यमाला ॥७॥
girishadruhiNaadi sarvadevaan
guNabhaajO(a)pyavimukta dOShaleshaan |
avamR^ishya sadaiva sarvaramye
nihitaa tvayyanayaa(a)pi divyamaalaa || 7
கி³ரிஶத்³ருஹிணாதி³ஸர்வதே³வான்
கு³ணபா⁴ஜோ(அ)ப்யவிமுக்ததோ³ஷலேஶான் |
அவம்ருஶ்ய ஸதை³வ ஸர்வரம்யே
நிஹிதா த்வய்யனயாபி தி³வ்யமாலா || 28-7 ||
நாராயணா, குருவாயூரப்பா, சாக்ஷாத் மஹா லக்ஷ்மிக்கு தெரியும். சிவன் ப்ரம்மா மற்ற தேவாதி தேவர்கள் எல்லோரும் பக்தர்கள் மீது அன்புடையவர்கள் என்றாலும் உன் போல் ஆக மாட்டார் கள். உனதன்பு தாயன்பை விட மேலானது. இது மகாலக்ஷ்மிக்கு தெரியும் என்பதால் மலர் மாலையை உனக்கு சூட்டினாள் . அந்த க்ஷணத்திலேயே ஸ்வயம்வரமா? உனக்கு அவள் தகுதி போல் அவளுக்கு நீ ஒருவனே தகுதியானவன்.
उरसा तरसा ममानिथैनां
भुवनानां जननीमनन्यभावाम् ।
त्वदुरोविलसत्तदीक्षणश्री-
परिवृष्ट्या परिपुष्टमास विश्वम् ॥८॥
urasaa tarasaa mamaanithainaaM
bhuvanaanaaM jananiimananya bhaavaam |
tvadurO vilasattadiikshaNa shrii
parivR^iShTyaa paripuShTamaasa vishvam || 8
உரஸா தரஸா மமானிதை²னாம்
பு⁴வனானாம் ஜனநீமனந்யபா⁴வாம் |
த்வது³ரோவிலஸத்ததீ³க்ஷணஶ்ரீ
பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விஶ்வம் || 28-8 ||
கிருஷ்ணா, அழகோடு அழகு சேர்ந்து விட்டது. நீ மஹா லக்ஷ்மியை அணைத்து உன் மார்பில் இடம் கொடுத்தாய். உன்மீது மட்டுமே அளவற்ற அன்பு கொண்டவள் அவள் என்று உனக்கும் தெரியும். இருவரின் பார்வையிலேயே அது முடிவாகிவிட்டதே. அவள் உன் மார்பில் அடைக்கலம் கொண்டதால் பிரபஞ்சத்தில் காருண்யம் செல்வம் இரண்டும் ஒன்றாகிவிட்டது.
अतिमोहनविभ्रमा तदानीं
मदयन्ती खलु वारुणी निरागात् ।
तमस: पदवीमदास्त्वमेना-
मतिसम्माननया महासुरेभ्य: ॥९॥
ati mOhana vibhramaa tadaaniiM
madayantii khalu vaaruNii niraagaat |
tamasaH padaviimadaastvamenaa-
matisammaananayaa mahaasurebhyaH || 9
அதிமோஹனவிப்⁴ரமா ததா³னீம்
மத³யந்தீ க²லு வாருணீ நிராகா³த் |
தமஸ꞉ பத³வீமதா³ஸ்த்வமேனா
மதிஸம்மானநயா மஹாஸுரேப்⁴ய꞉ || 28-9 ||
பாற்கடல் தொடர்ந்து கடையப்பட்டு வாருணீ தேவி வெளிப்பட்டாள் . அவள் மாயையை தோற்றுவிப்பவள் என்று உனக்குத் தெரியும் ஆதலால் அவளை அசுரர்களுக்கு பரிசாக தந்தாய்.
அஞ்ஞானத்துக்கு தாய் அல்லவா அவள்? அசுரர்களிடம் இருந்தால் தான் பொருத்தம்.
तरुणाम्बुदसुन्दरस्तदा त्वं
ननु धन्वन्तरिरुत्थितोऽम्बुराशे: ।
अमृतं कलशे वहन् कराभ्या-
मखिलार्तिं हर मारुतालयेश ॥१०॥
taruNaambuda sundarastadaa tvaM
nanu dhanvantarirutthitO(a)mburaasheH |
amR^itaM kalashe vahan karaabhyaama
khilaartin hara maarutaalayesha ||10
தருணாம்பு³த³ஸுந்த³ரஸ்ததா³ த்வம்
நனு த⁴ன்வந்தரிருத்தி²தோ(அ)ம்பு³ராஶே꞉ |
அம்ருதம் கலஶே வஹன்கராப்⁴யா-
மகி²லார்திம் ஹர மாருதாலயேஶ || 28-10 ||
அடுத்தது உன் வேடிக்கை. குருவாயூரப்பா, நீயே தன்வந்தரியாக பாற்கடலிலிருந்து வெளி வந்தாய். உன் கரங்களில் இரு தங்க கலசங்கள் அதில் அம்ருதம். என்ன செய்யப்போகிறாய் அதை வைத்து?
தெய்வமே, எண்டே குருவாயூரப்பா, என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷி.
தொடரும்
No comments:
Post a Comment