Thursday, July 8, 2021

SRIMAD BAGAVATHAM




ஸ்ரீமத் பாகவதம்   --   நங்கநல்லூர்  J K  SIVAN  --
11வது காண்டம். 15வது அத்யாயம்
 36  ஸ்லோகங்கள்

15.   பக்தியோக 
 மஹிமை.

பரீக்ஷித் விதி வசத்தால்,  தவம் செய்து  கொண்டிருந்த ஒரு ரிஷியின் கழுத்தில் செத்த பாம்பை போட்டு  விட்டு  ரிஷிகுமாரனால்  இதே பாம்பால் தான் உனக்கு இன்னும் 7 நாளில் மரணம் என்று சாபம் வாங்கி  மரணத்துக்கு  காத்திருக்கும்போது ஒரு நல்ல வேலை செய்தான். நம்மைப் போல் உறவுகளை பார்க்காமல், வக்கீலைத்  தேடாமல், சுகப்பிரம்ம ரிஷியை அழைத்து ஸ்ரீமத் பாகவதம் அத்தனையும் எனக்கு சொல்லுங்கள் என்று  ஏழு  நாளும் கேட்டு மரணத்தை அடைந்தான். 

அவனால்  நமக்கு ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம் எல்லாம் கிடைத்தது.   அதில் கிருஷ்ணன் பூமியை விட்டு அவதாரம் முடிந்து  வைகுண்டம் திரும்பும் நேரம் உதவ ரிஷிக்கு உபதேசம் செய்வதை தான் படித்துக் கொண்டிருக்கிறோம். 

''உத்தவா, யோகி  ஆத்மாவை புரிந்துகொண்டு  அதோடு இணையும் முன் ஐம்புலன்கள், தேகம் எல்லாவற்றையும் வென்றவனாகி, என்னை அடைகிறான்.. அப்போது யோகசக்தியின் முழு பலன் அவனை அடைகிறது.

''ஆஹா  கிருஷ்ணா, நீ தான் யோகிகளை உருவாக்குபவன்.  யோக சித்திக்கு என்ன வழி, எப்படி ஏகாக்ர சித்தத்தை அடைவது , எத்தனை வழிமுறைகள்  உள்ளது என்பதையும் சொல்''

''யோகா புருஷர்கள் சொல்வது  பதினெட்டு  வழிகள்,  உத்தவா. சித்தி அடையும்  வழி காட்டும் அவற்றில் எட்டு  என்னிடம்  உள்ளது,  பத்து  நற்பண்புகளால் உருவாவது.  என்னிடமிருந்து பெறுவது எட்டும் அஷ்டமா சித்திகள். உருவில் சிறிதாவது, அணிமா,  பெரிதாவது, மஹிமா,  லேசாவது, லகிமா, கனமாவது கரிமா,  விரும்பியதைப் பெறுவது, பிராப்தி, புலன்மூலம்  அடைவது ப்ராகாம்யம், சக்திகளை பிரயோகிப்பது, இஸீதா அல்லது இசித்வா , தந்திரமாக சாதிப்பது  வசித்வா , எழும்பும் எண்ணத்திற்கு  பதில் சொல்வது,  காமாவசாயிதம்,  போன்றவற்றை  என்னுள்ளே காண்பவன்.   மீதி பத்து  சித்திகள் இருக்கிறது பார்த்தாயா, அதால்  பசியே இல்லாமல்  தாகமே இல்லாமல்,  எங்கோ வெகுதூரத்தில் உள்ளதை பார்ப்பது,  மனோ வேகத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் போவது,   எந்த உருவம் வேண்டுமானாலும் எடுப்பது,    கூடு விட்டு கூடு பாய்வது,  நினைத்த போது  மரணம் எய்துவது,    ஞான திருஷ்டி, 
கட்டளையிடுவது, நிறைவேற்றுவது போன்ற சக்திகள் கை கூடும்.   திரிகாலமும்  உணரமுடியும். சூடு குளிர்ச்சி எதுவும்  தாங்கும்  தேகம் அமைவது  போன்ற  சித்திகள் அடையமுடியும்.

என் மீது மனதை செலுத்திய பக்தன் தன் மாத்திரைகளை அறிந்து தன்னை  சிறிய உருவாகவும்  மாற்றிக் கொள்ளமுடியும்.  அணிமா சித்தி இது தான்.   எனது மஹத் தத்வம் மனதில் கொண்டு  தியானிப்பவன் எங்கும் எதிலும் பெரிதாக காணுவது தான் மஹிமா சித்தி. அவன் என்னை பஞ்ச பூதங்களிலும் அறிபவன்.  நுண்ணிய வஸ்துவாக   அணுவிலும் அணுவாக எதிலும் என்னை  உணர்பவன் அடைவது லஹிமா சித்தி.  மனதை நிலை நிறுத்தி,  நான் தான் எல்லாம் என்று உணர்பவன் அடைவது தான் பிராப்தி  எனும் விரும்பியதை பெரும் சக்தி.  காணமுடியாத  உருவம்  பரமாத்மா,   என்று அறிந்து மனதை என் மேல் செலுத்துபவன் அடைவது  ப்ரா காம்ய சித்தி.  எதுவும்  நானே.  சர்வம் விஷ்ணுமயம்  ஜகத்  இது தான். 

என்னை நாராயணனாக உணர்ந்து தானே  நானாகிய  யோகி   துரீய சித்தி அடைந்தவன்.
பரிசுத்தனாகும்  எல்லாம் கடந்த  வசிதா சித்தி அடைந்தவன்.
 
என்னை சில பக்தர்கள்  தர்மத்தின் உருவமாக,   ஸ்வேதத்வீப அதிபதியாக  வணங்குவார்கள். அவர்கள் ஆறு  அலைகளிலிருந்து  விடுபடுபவர்கள்.  பசி, தாகம், பயம், முதுமை,  துக்கம், மரணம்,போன்றவை அவர்களை நெருங்காது.

சில பக்தர்கள் என்னை  ஆகாய ஸ்வரூபமாக,  ஹம்சமாக வழிபட்டு, தூரஸ்ரவணம்  திவ்ய ஸ்ரோதம்  சக்தி பெறுகிறார்கள்.  அவர்களால் எந்த உயிருள்ள ஜீவனின் மொழியும் அறிந்து  கொள்ளமுடியும்.   எல்லா சப்தங்களும் சேர்ந்து பரவும் இடம் ஆகாசம் இல்லையா?

சூரியனை தரிசித்து நேருக்கு நேர் பார்த்து என்னை  தியானித்து வணங்குபவன் தூர திருஷ்டி சக்தி பெறுகிறான். 

மனதை என்மேல் செலுத்தி  தியானிப்பவன் மூச்சுக்கு காற்றோடு மனம்  சேர்ந்து பிரியாணிக்கும் வித்தையை பெறுகிறான்.  மனோஜவம் என்று அதற்கு பெயர். காற்றோடு மனம் கலந்து பெரும் அனுபவம்.

என்னை அடைந்தவனுக்கு பரகாய பிரவேசம்,  கூடு விட்டு கூடு பாயும் சித்தி கிட்டும்.  தனது தேகத்தை விட்டு மற்ற தேஹத்துக்குள் அவனால் பிரவேசிக்க முடியும். 

வானவெளியில் பறக்க   விமானங்களை அடையமுடியும்.  நினைத்த போது எங்குவேண்டுமா னாலும்   செல்வதற்கு அந்த பக்தனுக்கு  சித்தி கிடைக்கும்.   என்னை அடைந்த யோகியால்  த்ரிகாலமும்  அறிய முடியும்.  கடந்த, நிகழ், எதிர் காலங்களில் நடக்கப்போகிறவை அவனால் அறியமுடியும்.    ஜனன மரணத்தை முன்கூட்டியே  அறியமுடியும்.

உத்தவா,  இந்த யோகமார்கங்களை  எல்லாம் விட சிறந்தது பக்தி மார்க்கம், எளிமையானது. என்னை பக்தியோடு பழிப்படுகிறவன் என்னை அடைந்து மேலே சொன்ன சகல சித்திகளையும்  எளிதில் பெறுவான்.


வேறு மார்க்கங்களில் பெறுகின்ற  பலனை பக்தி மார்கத்தில் சுலபமாக பெறலாம். ஏனென்றால்  எல்லா சித்திகளும் சக்திகளும் என்னிலிருந்து வெளிப்படுபவை.

உத்தவனுக்கு ஸ்ரீ க்ரிஷ்ணன்  உபதேசிக்கும் பக்தியோக மஹிமை  15ம் அத்தியாயத்தில்,  36 ஸ்லோகங்களில் மேற்கண்ட விஷயத்தை போதிக்கிறது.ஷியனான் 

தொடரும்   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...