17வது தசகம்.
17. துருவ நக்ஷத்ர மண்டலம்.
பொதுவாக, மற்ற மதங்களில் பக்தர்கள் என்பவர்கள் வயதானவர்களாக இருப்பது தான் நமக்குத் தெரிந்தது. ஆனால் நமது ஹிந்து சமயத்தில் சிறு குழந்தைகள் கூட மிகச் சிறந்த பக்தர்களாக இறைவனை நேரில் கண்ட தூய பக்த சிகாமணிகளாக இருந்திருக்கிறார்கள். பக்த பிரஹலாதன், துருவன், நசிகேதஸ் போன்றவர்கள் என்றும் போற்றத்தக்கவர்களாக உள்ளவர்கள்.

இன்று நாம் ரசிக்கும் 17வது தசகத்தில் மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி சிறுவன் துருவன் பற்றி பாடுகிறார். ஒரு பக்த சிறுவனைப் பற்றி பகவான் சிறுவன் உண்ணி கிருஷ்ணனிடம் அவர் சொல்வது ஆனந்தமாக இருக்கிறது.
उत्तानपादनृपतेर्मनुनन्दनस्य
जाया बभूव सुरुचिर्नितरामभीष्टा ।
अन्या सुनीतिरिति भर्तुरनादृता सा
त्वामेव नित्यमगति: शरणं गताऽभूत् ॥१॥
uttānapādanr̥ patērmanunandanasya
jāyā babhūva surucirnitarāmabhīṣṭā |
anyā sunītiriti bharturanādr̥tā sā
tvāmēva nityamagatiḥ śaraṇaṁ gatā:’bhūt || 17-1 ||
உத்தானபாத³ன்ருபதேர்மனுனந்த³னஸ் ய
ஜாயா ப³பூ⁴வ ஸுருசிர்னிதராமபீ⁴ஷ்டா |
அன்யா ஸுனீதிரிதி ப⁴ர்துரனாத்³ருதா ஸா
த்வாமேவ நித்யமக³தி꞉ ஶரணம் க³தா(அ)பூ⁴த் || 17-1 ||
जाया बभूव सुरुचिर्नितरामभीष्टा ।
अन्या सुनीतिरिति भर्तुरनादृता सा
त्वामेव नित्यमगति: शरणं गताऽभूत् ॥१॥
uttānapādanr̥
jāyā babhūva surucirnitarāmabhīṣṭā |
anyā sunītiriti bharturanādr̥tā sā
tvāmēva nityamagatiḥ śaraṇaṁ gatā:’bhūt || 17-1 ||
உத்தானபாத³ன்ருபதேர்மனுனந்த³னஸ்
ஜாயா ப³பூ⁴வ ஸுருசிர்னிதராமபீ⁴ஷ்டா |
அன்யா ஸுனீதிரிதி ப⁴ர்துரனாத்³ருதா ஸா
த்வாமேவ நித்யமக³தி꞉ ஶரணம் க³தா(அ)பூ⁴த் || 17-1 ||
குருவாயூரப்பா, உனக்குத் தெரிந்ததை உன்னிடமே சொல்கிறேன். ஸ்வயம்பு மனுவுக்கு ஒரு மகன் பெயர் உத்தானபாதன். அவன் ஒரு ராஜா அவனுக்கு சுருசி என்ற இளைய ராணி மேல் கொள்ளைப் பிரியம். அவனது மூத்த ராணி பெயர் சுநிதி, அவள் துர்பாக்கியம் அவள் மீது ராஜாவுக்கு அதிக அக்கறை இல்லை, ஆசையும் அன்பும் இல்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம் தானே துணை?. அவள் உன்னைப் பிடித்துக் கொண்டாள். நாராயணா, நீ தான் தீன தயாளன், தீன ரக்ஷகன் ஆயிற்றே.ஆகவே உன்னை நீயே கதி என்று சரணடைந்தாள்.
अङ्के पितु: सुरुचिपुत्रकमुत्तमं तं
दृष्ट्वा ध्रुव: किल सुनीतिसुतोऽधिरोक्ष्यन् ।
आचिक्षिपे किल शिशु: सुतरां सुरुच्या
दुस्सन्त्यजा खलु भवद्विमुखैरसूया ॥२॥
aṅkē pituḥ suruciputrakamuttamaṁ taṁ
dr̥ṣṭvā dhruvaḥ kila sunītisutō:’dhirōkṣyan |
ācikṣipē kila śiśuḥ sutarāṁ surucyā
dussantyajā khalu bhavadvimukhairasūyā || 17-2 ||
அங்கே பிது꞉ ஸுருசிபுத்ரகமுத்தமம் தம்
த்³ருஷ்ட்வா த்⁴ருவ꞉ கில ஸுனீதிஸுதோ(அ)தி⁴ரோக்ஷ்யன் |
ஆசிக்ஷிபே கில ஶிஶு꞉ ஸுதராம் ஸுருச்யா
து³ஸ்ஸந்த்யஜா க²லு ப⁴வத்³விமுகை²ரஸூயா || 17-2 ||
சுநிதிக்கு ஒரு ஆண் குழந்தை. துருவன் என்று பெயர். சுருசிக்கும் ஒரு பிள்ளை. அவன் பெயர் உத்தமன். ரெண்டு சிறுவர்களும் கிட்டத்தட்ட ஒரே வயதுள்ள குழந்தைகள். உத்தமன் ஒருநாள் ஓடிப்போய் அப்பா உத்தான பாதன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து துருவனும் அப்பா மடிமேல் ஏறி உட்கார முயன்றான். சுருசி இதை பார்த்துக்கொண்டிருந்தவள் துருவனைக் கண்டபடி ஏசினாள் . குருவாயூரப்பா, உன்னை மனதில் நிறுத்தி வணங்காதவர்கள் மனதில் உனக்கு பதிலாக பொறாமை குணம் தானே நிரம்பி இருக்கும்.

त्वन्मोहिते पितरि पश्यति दारवश्ये
दूरं दुरुक्तिनिहत: स गतो निजाम्बाम् ।
साऽपि स्वकर्मगतिसन्तरणाय पुंसां
त्वत्पादमेव शरणं शिशवे शशंस ॥३॥
tvanmōhitē pitari paśyati dāravaśyē
dūraṁ duruktinihataḥ sa gatō nijāṁbām |
sā:’pi svakarmagatisantaraṇāya puṁsāṁ
tvatpādamēva śaraṇaṁ śiśavē śaśaṁsa || 17-3 ||
த்வன்மோஹிதே பிதரி பஶ்யதி தா³ரவஶ்யே
தூ³ரம் து³ருக்தினிஹத꞉ ஸ க³தோ நிஜாம்பா³ம் |
ஸா(அ)பி ஸ்வகர்மக³திஸந்தரணாய பும்ஸாம்
த்வத்பாத³மேவ ஶரணம் ஶிஶவே ஶஶம்ஸ || 17-3 ||

துருவனைப் பிடித்து கீழே இழுத்துவிட்ட சுருசியின் செயலால் துருவன் மனம் ஒடிந்து போனான். அவனை அவள் பேசிய வார்த்தைகள் வேறு அவன் துக்கத்தை அதிகப்படுத்தி அழுது கொண்டே அம்மா சுநிதியிடம் சென்றான். அப்பா தன் மேல் அன்பு பாராட்டாமல் சிற்றன்னை செய்த தவறை கண்டிக்காமல் அவள் மேல் கொண்ட பிரியத்தால் அவள் செய்கைக்கு ஆதரவளித்து அவனைப் புறக்கணித்தது மனதை வாட்டியது. அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான். சுநிதி என்ன செய்வாள்? துருவனை வாரி அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள் .
''குழந்தே, நம்மைப் போல் விதி வசத்தால் அவஸ்தைப் படுவோருக்கு அந்த நாராயணன் ஒருவன் தான் கதி'' என்று உன்னைக் குறிப்பிட்டாள் . நாராயணா, அந்த மதிகெட்ட ராஜா, இளம் மனைவி மயக்கத்தில் தூண்டுதலில் அவளுக்கு அடிமையாக இருந்தது உன் மாயையால் அல்லவா?
''துருவா இதெல்லாம் நம்மை விட்டு நீங்க நீ அந்த நாராயணன் மேல் தியானம் செய்து, அவன் திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள். வேறு வழி இல்லை '' என்று சொல்லிவிட்டாள் அம்மா சுநிதி.
आकर्ण्य सोऽपि भवदर्चननिश्चितात्मा
मानी निरेत्य नगरात् किल पञ्चवर्ष: ।
सन्दृष्टनारदनिवेदितमन्त्रमार् ग-
स्त्वामारराध तपसा मधुकाननान्ते ॥४॥
ākarṇya sō:’pi bhavadarcananiścitātmā
mānī nirētya nagarātkila pañcavarṣaḥ |
sandr̥ ṣṭanāradanivēditamantramārga-
stvāmārarādha tapasā madhukānanāntē || 17-4 ||
ஆகர்ண்ய ஸோ(அ)பி ப⁴வத³ர்சனநிஶ்சிதாத்மா
மானீ நிரேத்ய நக³ராத்கில பஞ்சவர்ஷ꞉ |
ஸந்த்³ருஷ்டனாரத³னிவேதி³தமந்த் ரமார்க³-
ஸ்த்வாமாரராத⁴ தபஸா மது⁴கானநாந்தே || 17-4 ||
குழந்தை துருவனுக்கு என்ன புரியும், தெரியும்? ஐந்து வயது நிரம்பாத பாலகன். அவன் பிஞ்சு மனதில் குருவாயூரப்பா, அவன் தாய் சுநிதியின் அறிவுரை பட்டென்று பதிந்து விட்டது. உடனே மன உறுதியோடு துருவன் கிளம்பிவிட்டான் உன்னைத் தேடி. மதுவன காட்டுக்கு சென்றான். வழியில் நாரத ரிஷி அவனை சந்திக்கிறார்.
मानी निरेत्य नगरात् किल पञ्चवर्ष: ।
सन्दृष्टनारदनिवेदितमन्त्रमार्
स्त्वामारराध तपसा मधुकाननान्ते ॥४॥
ākarṇya sō:’pi bhavadarcananiścitātmā
mānī nirētya nagarātkila pañcavarṣaḥ |
sandr̥
stvāmārarādha tapasā madhukānanāntē || 17-4 ||
ஆகர்ண்ய ஸோ(அ)பி ப⁴வத³ர்சனநிஶ்சிதாத்மா
மானீ நிரேத்ய நக³ராத்கில பஞ்சவர்ஷ꞉ |
ஸந்த்³ருஷ்டனாரத³னிவேதி³தமந்த்
ஸ்த்வாமாரராத⁴ தபஸா மது⁴கானநாந்தே || 17-4 ||
குழந்தை துருவனுக்கு என்ன புரியும், தெரியும்? ஐந்து வயது நிரம்பாத பாலகன். அவன் பிஞ்சு மனதில் குருவாயூரப்பா, அவன் தாய் சுநிதியின் அறிவுரை பட்டென்று பதிந்து விட்டது. உடனே மன உறுதியோடு துருவன் கிளம்பிவிட்டான் உன்னைத் தேடி. மதுவன காட்டுக்கு சென்றான். வழியில் நாரத ரிஷி அவனை சந்திக்கிறார்.
'' என்னடா துருவா இங்கே செயகிறாய்? '' என்று கேட்க நடந்ததை சொல்கிறான். அவர் அவனுக்கு உன்னை ஸ்தோத்ரம் செய்யும் மந்திரம் உபதேசிக்கிறார். ''இதை விடாமல் சொல்லி தவம் செய்'' என்கிறார். ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி உன்னை தியானித்து நாரதர் உபதேசித்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே துருவன் தவமிருந்தான்.
ताते विषण्णहृदये नगरीं गतेन
श्रीनारदेन परिसान्त्वितचित्तवृत्तौ ।
बालस्त्वदर्पितमना: क्रमवर्धितेन
निन्ये कठोरतपसा किल पञ्चमासान् ॥५॥
tātē viṣaṇṇahr̥dayē nagarīṁ gatēna
śrīnāradēna parisāntvitacittavr̥ttau |
bālastvadarpitamanāḥ kramavardhitēna
ninyē kaṭhōratapasā kila pañca māsān || 17-5 ||
தாதே விஷண்ணஹ்ருத³யே நக³ரீம் க³தேன
ஶ்ரீனாரதே³ன பரிஸாந்த்விதசித்தவ்ருத்தௌ |
பா³லஸ்த்வத³ர்பிதமனா꞉ க்ரமவர்தி⁴தேன
நின்யே கடோ²ரதபஸா கில பஞ்ச மாஸான் || 17-5 ||
''குருவாயூரப்பா, உனக்கு தெரியுமல்லவா? குற்றமுள்ள மனது குறுகுறு வென்று தவிக்கும். உத்தானபாதனுக்கு தனது பிள்ளை துருவனுக்குத் தான் செய்த அநீதி மனதை உறுத்தியது. வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாரதர் அவனை அரண்மனையில் சென்று சந்திக்கிறார். துருவனைச் சந்தித்ததை, அவனுக்கு உபதேசித்து, அவன் தவமிருப்பதை சொல்கிறார்.
ஐந்து மாத காலம் ஓடிவிட்டது. துருவன் விடாமல் ஒரு மனதோடு நாராயணா உன்னை நோக்கி தவமிருந்தான்.
तावत्तपोबलनिरुच्छ्-वसिते दिगन्ते
देवार्थितस्त्वमुदयत्करुणार्द्
त्वद्रूपचिद्रसनिलीनमते: पुरस्ता-
दाविर्बभूविथ विभो गरुडाधिरूढ: ॥६॥
tāvattapōbalanirucchvasitē digantē
dēvārthitastvamudayatkaruṇārdr
tvadrūpacidrasanilīnamatēḥ purastā-
dāvirbabhūvitha vibhō garuḍādhirūḍhaḥ || 17-6 ||
தாவத்தபோப³லனிருச்ச்²வஸிதே தி³க³ந்தே
தே³வார்தி²தஸ்த்வமுத³யத்கருணார்
த்வத்³ரூபசித்³ரஸனிலீனமதே꞉ புரஸ்தா-
தா³விர்ப³பூ⁴வித² விபோ⁴ க³ருடா³தி⁴ரூட⁴꞉ || 17-6 ||
துருவனின் கடும் தவ வலிமையில் பிறந்த சக்தி அந்த பகுதியில் நாலா பக்கத்திலும் எல்லோரையும் திணறடித்து. பிராணவாயு சகலமும் துருவனிடம் சேர்ந்து விட்டதால் மற்றவர்களுக்கு ஸ்வாசிப்பதே கஷ்டமாக இருந்தது. தேவர்கள் இதிலிருந்து தப்ப, உன்னை அணுகி வேண்டினார்கள். நீ உடனே கருடனை அழைத்து அவன் மேல் ஆரோகணித்து கிளம்பி விட்டாய். உன்மனதில் அந்த குழந்தை துருவன் மீள் இரக்கம் தயை, கருணை பிறந்து விட்டது. அவன் முன் நின்றாய். துருவனோ சிலையாக மனதில் உன் ஒருவனையே நினைந்து கடும் தவம் இயற்றிக்கொண்டிருந்தான்.
.
त्वद्दर्शनप्रमदभारतरङ्गितं तं
दृग्भ्यां निमग्नमिव रूपरसायने ते ।
तुष्टूषमाणमवगम्य कपोलदेशे
संस्पृष्टवानसि दरेण तथाऽऽदरेण ॥७॥
tvaddarśanapramadabhārataraṅgi taṁ taṁ
dr̥gbhyāṁ nimagnamiva rūparasāyanē tē |
tuṣṭūṣamāṇamavagamya kapōladēśē
saṁspr̥ṣṭavānasi darēṇa tathā:’:’darēṇa || 17-7 ||
த்வத்³த³ர்ஶனப்ரமத³பா⁴ரதரங்கி³ தம் தம்
த்³ருக்³ப்⁴யாம் நிமக்³னமிவ ரூபரஸாயனே தே |
துஷ்டூஷமாணமவக³ம்ய கபோலதே³ஶே
ஸம்ஸ்ப்ருஷ்டவானஸி த³ரேண ததா²(ஆ)த³ரேண || 17-7 ||
त्वद्दर्शनप्रमदभारतरङ्गितं तं
दृग्भ्यां निमग्नमिव रूपरसायने ते ।
तुष्टूषमाणमवगम्य कपोलदेशे
संस्पृष्टवानसि दरेण तथाऽऽदरेण ॥७॥
tvaddarśanapramadabhārataraṅgi
dr̥gbhyāṁ nimagnamiva rūparasāyanē tē |
tuṣṭūṣamāṇamavagamya kapōladēśē
saṁspr̥ṣṭavānasi darēṇa tathā:’:’darēṇa || 17-7 ||
த்வத்³த³ர்ஶனப்ரமத³பா⁴ரதரங்கி³
த்³ருக்³ப்⁴யாம் நிமக்³னமிவ ரூபரஸாயனே தே |
துஷ்டூஷமாணமவக³ம்ய கபோலதே³ஶே
ஸம்ஸ்ப்ருஷ்டவானஸி த³ரேண ததா²(ஆ)த³ரேண || 17-7 ||
''குழந்தாய் துருவா, என்ற உன் தேனினும் இனிய பாசக் குரல் துருவனை விழிக்க வைத்து அவன் பேரானந்தத்தில் திளைத்தான். உன்னை இதுவரை அந்த குழந்தை பார்த்ததில்லை. உன் திவ்ய சௌந்தர ஸ்வரூபம் அவன் கண்களுக்கு மகத்தான விருந்தாகி விட்டது. ஆனந்தக் கண்ணீர் பெருகி அவன் பார்வையை மறைத்தது. உன்னைப் பாடவேண்டும் என்று மனதில் ஆர்வம் பிறந்தது. அவனுக்கு வார்த்தைகள் தெரியாதே. உன் கரத்திலிருந்த பாஞ்ச ஜன்யம் எனும் சங்கால் துருவனின் கன்னங்களை மிகுந்த வாத்சல்யத்தோடு நீ மெதுவாக தொட்டாய்.
तावद्विबोधविमलं प्रणुवन्तमेन-
माभाषथास्त्वमवगम्य तदीयभावम् ।
राज्यं चिरं समनुभूय भजस्व भूय:
सर्वोत्तरं ध्रुव पदं विनिवृत्तिहीनम् ॥८॥
tāvadvibōdhavimalaṁ praṇuvantamēna-
mābhāṣathāstvamavagamya tadīyabhāvam |
rājyaṁ ciraṁ samanubhūya bhajasva bhūyaḥ
sarvōttaraṁ dhruva padaṁ vinivr̥ttihīnam || 17-8 ||
தாவத்³விபோ³த⁴விமலம் ப்ரணுவந்தமேன-
மாபா⁴ஷதா²ஸ்த்வமவக³ம்ய ததீ³யபா⁴வம் |
ராஜ்யம் சிரம் ஸமனுபூ⁴ய ப⁴ஜஸ்வ பூ⁴ய꞉
ஸர்வோத்தரம் த்⁴ருவ பத³ம் வினிவ்ருத்திஹீனம் || 17-8 ||
அப்புறம் என்ன. கடல் மடை திறந்தால் போல துருவன் உன்னைபோற்றி ஸ்தோத்திரங்கள் பாட ஆரம்பித்துவிட்டான். அவன் இப்போது பூரண ஞானி. அவன் மனதை அறிந்தவன் அல்லவா நீ? . அவனை உத்தான பாதனுக்கு அடுத்த அரசனாகச் செய்து விட்டாய். நீண்ட காலம் நீ அரசாள்வாய்'' என்று அருள் புரிந்தாய். அவனை என்றும் அமரனாக துருவ நக்ஷத்ரமாக்கி வானில் ஜொலிக்கச் செய்துவிட்டாய். உன்னைத் தொழுது பணிந்து தவமிருந்த துருவன் எட்டாத உச்சிக்கு சென்று விட்டான்.

इत्यूचिषि त्वयि गते नृपनन्दनोऽसा-
वानन्दिताखिलजनो नगरीमुपेत: ।
रेमे चिरं भवदनुग्रहपूर्णकाम-
स्ताते गते च वनमादृतराज्यभार: ॥९॥
ityūciṣi tvayi gatē nr̥panandanō:’sā-
vānanditākhilajanō nagarīmupētaḥ |
rēmē ciraṁ bhavadanugrahapūrṇakāma-
stātē gatē ca vanamādr̥tarājyabhāraḥ || 17-9 ||
இத்யூசிஷி த்வயி க³தே ந்ருபனந்த³னோ(அ)ஸா-
வானந்தி³தாகி²லஜனோ நக³ரீமுபேத꞉ |
ரேமே சிரம் ப⁴வத³னுக்³ரஹபூர்ணகாம-
ஸ்தாதே க³தே ச வனமாத்³ருதராஜ்யபா⁴ர꞉ || 17-9 ||
குருவாயூரப்பா, நாராயணனாக, நீ துருவனுக்கு வரம் தந்து மறைந்தபின் துருவன் தனது நாட்டுக்கு திரும்புகிறான். ஊர் மக்கள் அவனை கோலாகலமாக வரவேற்கிறார்கள். உத்தானபாதன் துருவனை அரசனாக்கி விட்டு வானப்ரஸ்தம் சென்றுவிட்டான் தவமிருக்க. துருவன் சிறந்த நற்பண்புகள் கொண்ட ராஜாவாக நீண்ட காலம் ஆண்டான்.
यक्षेण देव निहते पुनरुत्तमेऽस्मिन्
यक्षै: स युद्धनिरतो विरतो मनूक्त्या ।
शान्त्या प्रसन्नहृदयाद्धनदादुपेता-
त्त्वद्भक्तिमेव सुदृढामवृणोन्महात्मा ॥१०॥
yakṣēṇa dēva nihatē punaruttamē:’smin
yakṣaiḥ sa yuddhaniratō viratō manūktyā |
śāntyā prasannahr̥dayāddhanadādupētā-
ttvadbhaktimēva sudr̥ḍhāmavr̥ṇōnmahātmā || 17-10 ||
யக்ஷேண தே³வ நிஹதே புனருத்தமே(அ)ஸ்மின்
யக்ஷை꞉ ஸ யுத்³த⁴னிரதோ விரதோ மனூக்த்யா |
ஶாந்த்யா ப்ரஸன்னஹ்ருத³யாத்³த⁴னதா³து³பே
த்த்வத்³ப⁴க்திமேவ ஸுத்³ருடா⁴மவ்ருணோன்மஹாத்மா || 17-10 ||
இதற்கிடையில் சுருசியின் மகன் உத்தமன் ஒரு யக்ஷனால் கொல்லப்படுகிறான். துருவன் அந்த யக்ஷனோடு போரிட்ட போது ஸ்வயம்பு மனுவால் தடுக்கப்படுகிறான். துருவனின் நல்ல குணங்களை மெச்சி குபேரன் அவனுக்கு வரமளிக்கிறான்.
''துருவா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், தருகிறேன்''- குபேரன்.
'''நாராயணன் என் மனதில் என்றும் நீங்காமல் நிறைந்திருக்க வேண்டும் '' என்கிறான் துருவன்.
अन्ते भवत्पुरुषनीतविमानयातो
मात्रा समं ध्रुवपदे मुदितोऽयमास्ते ।
एवं स्वभृत्यजनपालनलोलधीस्त्वं
वातालयाधिप निरुन्धि ममामयौघान् ॥११॥
antē bhavatpuruṣanītavimānayātō
mātrā samaṁ dhruvapadē muditō:’yamāstē |
ēvaṁ svabhr̥ tyajanapālanalōladhīstvaṁ
vātālayādhipa nirundhi mamāmayaughān || 17-11 ||
அந்தே ப⁴வத்புருஷனீதவிமானயாதோ
மாத்ரா ஸமம் த்⁴ருவபதே³ முதி³தோ(அ)யமாஸ்தே |
ஏவம் ஸ்வப்⁴ருத்யஜனபாலனலோலதீ⁴ஸ்த்வம்
வாதாலயாதி⁴ப நிருந்தி⁴ மமாமயௌகா⁴ன் || 17-11 ||
मात्रा समं ध्रुवपदे मुदितोऽयमास्ते ।
एवं स्वभृत्यजनपालनलोलधीस्त्वं
वातालयाधिप निरुन्धि ममामयौघान् ॥११॥
antē bhavatpuruṣanītavimānayātō
mātrā samaṁ dhruvapadē muditō:’yamāstē |
ēvaṁ svabhr̥
vātālayādhipa nirundhi mamāmayaughān || 17-11 ||
அந்தே ப⁴வத்புருஷனீதவிமானயாதோ
மாத்ரா ஸமம் த்⁴ருவபதே³ முதி³தோ(அ)யமாஸ்தே |
ஏவம் ஸ்வப்⁴ருத்யஜனபாலனலோலதீ⁴ஸ்த்வம்
வாதாலயாதி⁴ப நிருந்தி⁴ மமாமயௌகா⁴ன் || 17-11 ||
வெகுகாலம் வாழ்ந்த துருவ ராஜா, ஒருநாள் உனது விஷ்ணு கணங்கள் விமானத்தோடு வந்து அவனை அவன் தாய் சுநிதி யோடு சேர்த்து அவனுக்கென்று நீ அமைத்த துருவ லோகத்துக்கு அழைத்துச் செல்ல வருகி றார்கள்.
''அப்பா நாராயணா, நான் கண்டு மகிழும் குருவாயூரப்பா, இன்றும் துருவன் ஒரு விண்வெளி மண்டலமாக ஒளிவீசி எல்லோரையும் மகிழ்விக்கிறான். நீ பக்தர்கள் மீது, உன்னை பக்தியோடு வேண்டுவோர்க்கு , எவ்வளவு கருணை செய்வாய் என்பதற்கு இந்த துருவ சரித்திரம் ஒன்றே போதும். என்னையும் உன் கருணையால் நோய்கள் நீங்கி வாழ அருள் புரிவாய்.
இவ்வாறு 11 ஸ்லோகங்களோடு 17வது தசகம் நிறைவு பெறுகிறது.
No comments:
Post a Comment