Friday, July 9, 2021

PANDURANGAN

 பாண்டுரங்கா...   நங்கநல்லூர்  J K  SIVAN


மராத்தியர்கள்  தெற்கே வந்து  தஞ்சாவூரை ஆண்டதில் நமக்கு  நன்மை  தான் கிடைத்தது. மற்றவர்களை போல் அவர்கள் இங்கே வந்த  கொள்ளையர்கள் இல்லை. கோவில்கள், கலைகள் , கலைஞர்கள், எல்லாமே  சந்தோஷமாக  வளர்ந்தது. பக்தி பெருகியது. மராத்தியர்கள்  வீர சிவாஜி வம்சத்தினர்.   வீர சிவாஜி பாண்டுரங்க பக்தன் . அந்த வம்சாவழி வந்த மராத்தியர்கள் பாண்டுரங்க பக்தர்களாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

மராத்தியர்கள்  எங்கெங்கேயோ சென்று வாழ தொடங்கினார்கள்.  சென்னையில் அவர்களில் சிலர்  குடியேறி நூற்றுக்கணக்கான வருஷங்கள் ஆகிவிட்டது.  திருவல்லிக்கேணியில் சுபத்ராள் தெரு என்ற சிறிய தெருவில்  கிட்டத்தட்ட நூறு வருஷங்களாக ஒரு பாண்டுரங்கனை ஆலயத்தில்  நிறுவியவர்கள்.   திருவல்லிக்கேணியில் நான் சில வருஷங்கள் இந்த கோவில் அருகே  வசித்து  தவறாமல் பாண்டுரங்கனை தரிசித்தவன். எத்தனையோ வருஷ இடைவெளிக்குப் பிறகு  என்னை அந்த ஆலயத்துக்கு அழைத்து  சிவாஜி பற்றி பேச சொன்னார்கள்,  பாண்டுரங்க மஹாத்ம்யம் பற்றி ரெண்டு முறை பேசினேன்.  மராத்தி குடும்பங்கள்  காலப்போக்கில்  நன்றாக  தமிழ் பேசுகிறார்கள்.  அவர்களது வழிபாட்டு  சபை தான் பாவ்ஸார் க்ஷத்ரிய  ஸ்ரீ பாண்டுரங்க பக்த ஜன சபா, மேலே சொன்ன சுபத்ராள்  தெரு பாண்டுரங்கன் ஆலயத்தை நிறுவியவர்கள். கட்டுக்கோப்பாக இன்றும் அந்த ஆலயத்தை பராமரித்து வருகிறார்கள்.

எனக்கும் பாண்டுரங்கனுக்கும் தொடர்பு என் ஐந்து ஆறு வயதிலிருந்தே எனக்கு ஞாபகம் இருக்கிறது.  என் அம்மா வைத்திருந்த ஸ்ரீ பக்த விஜயம் புஸ்தகத்தில்  பாண்டுரங்க பக்தர்கள் சரித்திரம் இருந்தாலும் அந்த பழைய புத்தகத்தை எடுத்து அதன் உளுத்துப்போன  பக்கங்களை டக்  டக்  என்று தொட்டு உடைத்தவன்.  பிறகு  பல வருஷங்களுக்குப் பிறகு  பாண்டுரங்கனைப் பற்றி  படித்து  பல கோவில்களுக்கு சென்று வணங்கி, கடைசியில் அவனைப் பற்றி  ரெண்டு புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்  ''தெவிட்டாத விட்டலா,  (100 பாண்டுரங்க பக்தர்கள் சரித்திரம்)  அதே  ஆங்கிலத்தில்  VITOBA  THE NECTAR   (100 STORIES) என்றும்  எழுதி உலகெங்கிலும் பக்தர்களிடம் பரவி இருக்கிறது.

ஆதம்பாக்கத்தில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தில் மேலே சொன்ன ரெண்டு புத்தகங்களையும்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா  டிரஸ்ட்  வெளியிட்டது.   திருவல்லிக்கேணி பாண்டுரங்க ஆலயத்தில் பாபநாசம் சிவன் பாடிய ஒரு  பாண்டுரங்கன் பாடலை  பாடினேன்.  இந்த பாட்டு எப்போதோ  ரசித்துக் கேட்டது. MKT  பாகவதர்  ராஜ முக்தி என்கிற படத்தில் பாடியது.  

உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா உலகிலே  (உனை )
வினையென்ற பெயரால்
மலைபோலுந் துன்ப
வெய்யிலில் வாட்டுவதும்
நின் விளையாட்டு (2)  (உனை)
இரங்கி மனம் கனிந்து
அன்னைப் போல் பரிந்து
இன்பத் தாலாட்டுவதும்
நின்னருள் ரங்கா  (உனை)
மாயாவதார ப்ரபோ உன்னை
மறவாத பாக்கியம் இருந்தால்
மாய இன்ப துன்பங்கள் என்னை
என்ன செய்யும் வரதா
ஜெய மாதவனே  (உனை )
தீனபந்து விட்டலா ஜெய ஜெய
பாண்டுரங்க விட்டலா
தயாசிந்து விட்டலா ஜெய ஜெய
 லிங்க்

  https://youtu.be/TXETnCfR87s

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...