Saturday, July 3, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --

தாகூர் 

78.  இருப்பதே  போதும். 


78.  When the creation was new and all the stars shone in their first splendour,
the gods held their assembly in the sky and sang `Oh, the picture of perfection! the joy unalloyed!’
But one cried of a sudden
`It seems that somewhere there is a break in the chain of light and one of the stars has been lost.’
The golden string of their harp snapped, their song stopped, and they cried in dismay
`Yes, that lost star was the best, she was the glory of all heavens!’
From that day the search is unceasing for her,
and the cry goes on from one to the other that in her the world has lost its one joy!
Only in the deepest silence of night the stars smile and whisper among themselves
`Vain is this seeking! unbroken perfection is over all!’

ப்ரம்மா  சிருஷ்டியை  படு வேகமாக  துவங்கிவிட்டான்.  விண்ணில்  அவன் படைத்த  நக்ஷத்திரங்கள் ஜொலித்தன.  கிருஷ்ணா,  தேவர்கள்   உபதேவதைகள் எல்லாம்  அதிசயித்தனர் .   ஆஹா  ஓஹோ  என்று ஆனந்தத்தில் ஆடினர் .  ஒவ்வொரு நக்ஷத்திரமும் ஒரு அதிசயம். திடீரென்று ஒரு குரல்.  ''அதிகமாக  ஒளி வீசுமே   அந்த நக்ஷத்திரத்தை  எங்கே காணோம்?  அது இல்லாமல்  இந்த  வானவெளி அழகு சோபிக்க வில்லையே?    ஆடிப்பாடிக்கொண்டு   விதவித வாத்தியங்கள் வாசித்தவர்கள் சட்டென்று  வாத்ய  ஒலியை  நிறுத்தினர்.  எங்கே அந்த  ஒளிமிக்க  நக்ஷத்திரம்?
எப்போதுமே  காணாமல் போன  ஒரு ரூபாய்க்கு பாக்கெட்டில் இருக்கும் மற்ற ரூபாய்களை விட மதிப்பு அதிகம் இல்லையா?  ஆஹா அந்த நக்ஷத்ரம்  மிக  சிறந்தது.  இணையற்றது  என்று ஏகோபித்த பல குரல்கள்.எங்கு எத்தனை நாள் அதைத் தேடினார்கள்???கணக்கே கிடையாது.  இவர்கள் வருத்தம்  இப்படி தொடர்ந்த சமயம்   அந்த இரவின் அமைதியில்  வானிலே  விண்மீன்களிடம் ஒரு புன் சிரிப்பு. குசுகுசுவென்று தங்களுக்குள்  அவை என்ன பேசுகிறது என்று காதில் விழுகிறதா?
''இல்லாததை விட இருப்பதில் எத்தனை அழகு  ஜொலிப்பு  என்று ஏன் இவர்களுக்கு புரியவில்லை. இருப்பதில்  இல்லாததை  விட அழகும்  ஒளியும் அதிகமாக இருப்பதை  கூர்ந்து கவனித்தால் தான் புலப்படும் என்று தெரிய வில்லையே  இவர்க ளுக்கு''.  
இருப்பதில் அடையும் திருப்திக்கு ஈடு இணையே இல்லை என்ற பாடம் நமக்கும் தான்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...