பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
47. திருவாரூர் தியாகராஜனுக்கு புது தேர்.
அவர் ஒரு முற்றும் துறந்த துறவி. 13 வயசு சிறுவனாக இருக்கும்போதே சன்யாசியானவர். சாதாரண சந்நியாசி இல்லை. ஜகத்குரு. திடீரென்று நிகழ்ந்த அந்த சம்பவத்துக்கு தன்னை நூற்றுக்கு லக்ஷம் மடங்கு தகுதியுள்ள பேசும் தெய்வமாக்கி வாழ்ந்து காட்டியவர் நமது மஹா பெரியவா.
அவரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் ஒவ்வொரு சம்பவமும் நிகழ்வும் நமக்கு எத்தனை மகிழ்ச்சி யை ஊட்டுகிறது என்று வாசகர்கள் நீங்கள் அளிக்கும் வார்த்தைகளில், உணர்ச்சிகளிலிருந்து எனக்கு புரிகிறது. உங்களை மகிழ்வூட்டும் பரமாசார்யரைப் பற்றிய சில விஷயங்களை முதலில் நான் தெரிந்து கொண்டு எழுத என்ன பாக்யம் செய்தேனோ?
காலம் வேகமாக ஓடுகிறது. இதோ மஹா பெரியவாளுக்கு 33 வயது ஆகிறது. டிசம்பர் 1927ல் பாண்டிச் சேரி க்கு செல்கிறார். அப்போது பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட நாடு அது. பிரெஞ்சுக்கார தமிழ் பக்தர்கள் சிறந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார்கள். எங்கும் வண்ண வண்ண வளைவுகள், தோரணங்கள், கொடிகள், பந்தல்கள் மலர் மாலைகள். பாண்டிச்சேரி எல்லையிலேயே போலீஸ் பாதுகாப்பு, வெள்ளைக்கார பாண்டு வாத்திய கோஷ்டி. பிரெஞ்சு அரசாங்க அதிகாரிகள். முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அதுவரை காணாதது.
பிரெஞ்சுகாரர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சாதாரண துறவிக்கு இவ்வளவு மதிப்பு மரியாதையா?எல்லோருடைய அன்பு சமிஞைகளையும் பெரியவா ஏற்றுக்கொண்டார்.
அன்று பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்து, அதில் பிரெஞ்சு கவர்னர், அவர் மனைவி, தலைவர், மேயர், அரசங்க அதிகாரிகள் கலந்து கொண்டு கூப்பிய கரங்களுடன் மற்ற பக்தர்களோடு சேர்ந்து மகா பெரியவாளை வரவேற்றனர்
அவருடைய காந்தப் புன்னகையோடு மகா பெரியவா அனைவரையும் கை உயர்த்தி வாழ்த்தி ஆசிர் வதித்தார். ஒருவார காலம் பாண்டிச்சேரியில் பெரியவா முகாம். அந்த வாரம் முழுதும் பாண் டிச்சேரி பக்தர்களுக்கும் பரம சந்தோஷம். மடத்தை சுற்றி குழுமி இருந்தார்கள். முக்கியமானவர்களுக்கு பேட்டி கொடுத்தார். சகல உபசாரங்களை குறைவில்லாமல் செய்தார்கள். தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலி ருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் பெற்றார்கள்.
நமது நாட்டில் எத்தனை கோவில்கள், அவற்றின் அழகான சிற்ப சித்திர வேலைப்பாடுகள் கொண்ட தேர்கள், விக்ரஹங்கள், நில புல சொத்துக்கள், ஆபரணங்கள், அடேயப்பா எத்தனை எல்லாம் நாசமாக்கி, கொள்ளை யடித்த வர்கள் பிற மதத்தினர் அப்போது. நம்மவர் இப்போது.
தேர் என்று சொல்லும்போது மிகப் பிரபலமான அழகு மிக்க பெரிய தேர் திருவாரூர் தியாகரா ஜனின் தேர் தான். பழங்கால மரத்தினால் ஆன அந்த அற்புதத் தேர் ஒரு காலத்தில் விஷக்கி ருமிகளால் எரித்து நாசமாக் கப்பட்டது. திருவாரூர் ஆலய தர்ம கர்த்தாக்கள் அப்போது வடபாதி மங்கலம் ஜமீன்தார் குடும்பத்தார். அவர்களும் மற்றும் பல தஞ்சாவூர் நிலச் சுவான்தார்கள் ஒன்று கூடி எரிந்து போன பழைய தேரைப் போலவே மற்றொரு தேர் உருவாகவேண்டும் என்று பிரயாசைப் பட்டார்கள்.
பழைய தேர் கொளுத்தப்பட்டு சேதமடைந்தது பற்றிய சேதி கேட்டதும் துடித்த மஹா பெரியவா பக்த ர்களுக்கு விண்ணப்பித்து எப்படியாவது மீண்டும் ஒரு அழகிய தேர் திருவாரூர் தியாகராஜனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்..
இந்த தேர் உருவாகும் முயற்சியில் முக்கியமாக பணியாற்றியவர் சுப்பராய வாத்யார். அவர் தனது வாழ்நாளில் அநேக தர்ம காரியங்களில், ஆலய புனருத்தாரண காரியங்களில் ஈடுபட்ட வர். மஹா பெரியவா பக்தர். கேட்கவேண்டுமா. விடுவிடுவென்று காரியத்தில் ஈடுபட்டார்.
1926ல் அக்டோபர் மாதம் மகா பெரியவா திருப்பாதிரிப் புலியூர் வந்த போது இது விஷயமாகப் பேச சந்தித்தார். திருவாரூர் புது தேர் விஷயமாக தான் சேகரித்த மரம், பொருள், தொழிலாளர்கள் சம்பளம் விஷயமாக ஒரு மதிப்பீடுதான் வந்திருந்தார். இது பற்றி பேசி மகா பெரியவாளிடம் ஒரு ஸ்ரீ முகம் வாங்கி கொண்டார். மஹா பெரியவா சந்தோஷமாக அவரை ஆசிர்வதித்து, காஞ்சி மடத்தின் காணிக் கையாக ஆயிரம் ரூபாய் தந்தார். புயல் வேகத் தில் தஞ்சாவூர் சென்ற சுப்பராய வாத்யார், பல தனவந்தர்களை சந்தித்து தேருக்கு நிதி திரட்டினார். ஆரூர் தேவஸ்தான நிர்வாகி நரசிம்மய்யர் , மற்றும் பல நண்பர்கள் அளித்த ஆதரவு, ஊக்கத்தோடு ஆறே மாசத்தில் அப்போதே ஒரு லக்ஷ ரூபாய் சுப்பாராய வாத்யார் வசம் சேர்ந்துவிட்டது.
மஹா பெரியவா மலையாள தேசம் சென்ற போது அங்கு பலர் உதவியோடு தேருக்கு வேண்டிய மரங்களை தானமாக கேட்டுப் பெற்று தந்தார். நூற்றுக்கணக்கான ஸ்தபதிகள், தச்சு வேலை நிபுணர்கள் பணி புரிய திருவா ரூரில் கூடிவிட்டனர். புது தேர் மளமளவென்று உருவாகியது. ரெண்டே வருஷத்தில் தேர் ரெடி.
எல்லோரையும் ஊக்குவித்து தேவையான பொருள்களை சேர்த்து திரட்டிக் கொடுத்து,, அவர்களோடு அடிக்கடி பேசி, அறிவுரைகள் சாஸ்த்ர, சம் பிரதாய, ஆகம கட்டுப்பாடுகளுக் குட்பட்து, தேவைகளுக்கு ஏற்ப, அருமையாக, எவ்வளவு வேகமாக அவர்களால் தேரை உருவாக்க முடியுமோ அதற்கு முயற்சி எடுத்தவர் மஹா பெரியவா. சுறுசுறுப்பில், எந்த சுயநலமுமின்றி, பரோபாகரமாக காரியத்தை கச்சிதமாக எடுத்து நடத்தி முடிப்பதில் அவரைப்போல் இன்னொருவரை நாம் இனி பார்க்க முடியாது.
சுப்பராய வாத்யார் தான் பின்னர் சன்யாசம் மேற்கொண்டு ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரர் என்று அறியப் பட்டவர். 1948 ஜனவரி மதம் 10ம் தேதி அவருடைய 77வது பிராயத்தில், அவருடைய கிராமம் மருதவாணஞ் சேரியில் ஒருநாள் அமர்ந்திருந்த போது இஷ்ட தெய்வமான திருவாரூர் தியாகராஜ னை நினைத்து ஸ்மரித்து ''தியாகேசா'' என்ற கடைசி சொல்லோடு அவனுடன் ஐக்யமாகி விட்டார்.
தொடரும்
No comments:
Post a Comment