Tuesday, July 20, 2021

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K  SIVAN

''வெள்ளம் வந்திருக்கு'' 

ஸ்ரீ சூர்யநாராயணன் ராஜா  ஐயர் எழுதிய   மஹா பெரியவா அதிசயங்கள்  ஆங்கில புத்தகத்தில் 
நான் அனுபவித்த சில விஷயங்கள் தொடர்கிறது.

சூரியநாராயணன் பெரிய உத்யோகம் வகித்தது, வெளிநாடுகளில் மேன்மை, மரியாதையுடன் இருக்க நேர்ந்தது எல்லாம்  பெரியவா ஆசிர்வாதத்தால் என்கிறார். ரொம்ப வாஸ்தவம். 

ஒய்வு  பெற்று  இந்தியா திரும்பி அடையாறில்    ஒரு வீடு கட்டினார் . அதற்கு அவர் இட்ட பெயரே  ''சங்கரம் ''.   

எதிர்பாராத விதமாக  அவர் வீடு கட்டிய  பகுதியில்  நிலத்தடி நீர் போதுமானதாக இல்லையே.  தண்ணீர் இல்லாமல் BORE ரெண்டு தடவை  எடுத்தும்  பணம் தான் விரயம்.  பலன் இல்லை.  மனம் வாடியது.   சரி இன்னொருமுறை  பணத்தை பார்க்காமல்  ஒருதரம்  கடைசி முயற்சி பண்ணி போர் BORE  தோண்டி பார்ப்போம்.   தண்ணீர் வர வில்லை யென்றால்   வேறு வழியே இல்லை.  இந்த புது வீட்டை விற்றுவிட்டு எங்காவது  செ ல்லவேண்டியது தான்....
அவர்  போர்  தோண்டலாம்  என்று முடிவெடுத்த அன்றைக்கு '' பெரியவா ஜெயந்தி''  .
ஆஹா  எப்படி அமைந்து விட்டது நமது கடைசி முயற்சி.

விடிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஸ்னானம் செயது பெரியவாளை   த்யானம் செய்தார்.  போர் லாரி வந்து விட்டது.  ஆட்கள் சப்தமாக போர் தோண்டிக் கொண்டிருக்க தண்ணீருக்கு பதிலாக புஸ் என்று காற்று தான் வந்து கொண்டிருந்தது.   அடடா,  இதுவும் வீணா? சூர்யநாராயணன் தியானம் முடிந்து பெரியவா படத்துக்கு நமஸ்காரம் செய்து கொல்லைப் பக்கம் வந்து என்ன ஆச்சு  என்று விசாரித்த போது அவர் மனைவி

''ஜெட் பம்ப் வெறி பிடித்து நீரை  வெள்ளமா  கக்கிறது. வந்து பாருங்கோ.  போர் காராளுக்கே  ஆச்சர்யம் ''  என்றாள் .   ஆச்சரியமாக  வெள்ளம் என்றால்  மலையாளத்தில் தண்ணீருக்கு பெயர். இங்கே தண்ணீரே  தமிழில் வெள்ளமாக வந்திருக்கிறது.

தண்ணீர்  வெள்ளத்தைப்   பார்ப்பதற்கு முன்  ஓடிப்போய்  கருணை வெள்ளத்தின் படம் முன் விழுந்து  நமஸ்காரம் செய்தார்  சூர்ய நாராயணன்.

 தண்ணீர் இல்லை என்று அந்த பகுதியில்   அநேகர்  வீ டுகளை விற்றுவிட்டு போன நேரம் அது.  இந்த நிலையில்  சூர்யா வீட்டில்  நிகழ்ந் ததை மஹா பெரியவா  கருணை, தெய்வ   அனுக்ரஹம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

இதை  அதிசயம் என்று எப்படி சொல்லலாம் என்று நினைத்தால்  எந்த ஆக்ஷேபணையும் இல்லை. ஆனால் அதிசயங்கள் இதோ பார்  நான் அதிசயம் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வருவதில்லை முன்னெச்சரிக்கை எதுவும் கொடுப்பதில்லை.  நிகழ்ந்தாலும் தம்பட்டம் அடிப்பதில்லை. உணரும் மனதுக்கு மட்டுமே தெரிந்த விவகாரம் இது.



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...