Thursday, February 4, 2021

VIDHURAN

 


அண்ணனும் தம்பியும்   - J.K. SIVAN


மஹா பாரதத்தில் வரும்  திருதராஷ்ட்ரன்   என்ற பாத்திரம், நம் எல்லோருடைய  ஒட்டு மொத்த  குணாதிசயங் களின்  பிரதிபலிப்பு.   ஆசை,  பேராசை, பொறாமை, சுயநலம், சந்தேகம், பயம்,   எல்லாம்  அவனை  எப்போதும்  வாட்டி வதைத்தது.  ஆனால்  திருதராஷ்ட்ரன்  அதிர்ஷ்டக்காரன்.   தர்ம தேவதையே தம்பியாக  பிறந்து  விதுரன் வடிவில்  அவனுக்கு  அவ்வப்போது  அறிவுரை வழங்கியது.   இருந்தாலும்  திருதராஷ்டிரன்  திருந்த வில்லை.  அவன் தான் நம்மைப்போல  என்றேனே .
    
நமக்கு  மனச்சாட்சி  காணாமல் போய்விட்டது.    உலகில்  நாள் தோறும்  எங்கும்  அக்ரமம், அதர்மம் தலை விரித்தாடுகிறது.    பேப்பர்,   டிவி,   வாட்ஸாப்ப்,  FB  எல்லாம்  கொள்ளை கொள்ளையாக  இதை சொல்கிறதே. 

சத்யம் எங்கே போனது?  அதைத்  தான்,  உச்சாணிக் கிளையில் ஒரு கம்பத்தின் மேலே மூன்று சிங்கங்கள் பாவம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறதே.   பொய்மை வாய்மையையே தின்றுகொண்டிருக்கிறது.  இது நம்   எதிர்காலத்தை ஒரு பெரிய கேள்விக்குறியாக பார்க்க,  பயப்பட,  வைக்கிறது. நல்லவர்கள்   யாருமே
 இல்லையா? இருக்கிறார்கள். அவர்களை  யார்  லக்ஷியம் செயகிறார்கள்.  அவர்கள் சொல்வதை யார் கேட்கிறார்கள்?  யார்  யாரோ  நம்மை  ஆள போட்டி போட்டுக்கொண்டு  ஒருவரை ஒருவர்  தெருநாய்கள் சண்டைபோடும் அதை விட மோசமாக  குலைக்கிறார்கள்.  ஏன்  அவ்வளவு  அவசரம், ஆசை. நம்மை நன்றாக  ஆள்வதற்கு அத்தனை  விருப்பமா?  ஒரு  MLA  சீட்டுக்கு  பல  கோடிகள் கொடுக்கவேண்டுமாம்.   அவ்வளவு கோடி கொடுத்து  MLA  ஆகி  நமக்கு நல்லது செய்ய  ஆசையா என்றால்  அவன் என்ன காதில் பூ சுற்றிக்கொண்டிருக்கிறானா?  செலவழித்ததை  மீட்டு  மேலும் சம்பாதித்து  தனது குடும்ப நலத்திற்கு  அல்லவோ குறுக்கு வழி தேடுகிறான்? நாம்  எங்கே  முன்னேறுவது?  நாடு என்று சுபிக்ஷத்தை பார்க்கும்?

முன்பு ஒரு காலத்தில் பாரதத்தில் நிகழ்ந்தது தான்.  விதுரன் படித்து படித்து சொன்னான். திருதராஷ்டிரனுக்கு கண் தான் தெரியவில்லை என்றால் காதுமா கேட்காமல் போனது?.

ஆமாம். பாண்டவர்களின் அருமை, பெருமை அவனுக்கும் அவன் மக்களுக்கும் உள்ளூர பொறாமையையும் அச்சத்தையும் வளர்த்தது.இதனால் விளையும் தீமையை விதுரனை விட வேறு யாரும் எடுத்துச் சொல்ல முடியாது. சொல்லி என்ன பயன்?

நல்லவர்களையும் அவர்கள் செயலையும் வெறுத்து, தூஷணை தான் செய்யத்  தூண்டியது  இந்த பொறாமை.

''நாம் தான் உள்ளபடியே, தகுதியானவர்கள்,  நல்லவர்கள், மற்றவர்கள் அக்கிரமக்காரர்கள், ஆனால் இது இந்த பாழாய்ப்போன உலகத்துக்கு தெரியவில்லையே'' என்ற தவறான எண்ணம்  திருதராஷ்ட்
ரனை 
 அப்படித்தான் ஆட்டிப்படைத்தது..    நமக்கு நம்மையே தெரி யவில்லையே! எப்படி மற்றவர்களை புரிந்து கொள்ள இயலும்? ஆத்ம விசாரம், மனச்சாட்சி என்று ஏதாவது இருந்தால் தான் இது புரியும்.

 துர்போதனைக்கு என்றே சிலர் எக்காலத்திலும் முளைப்பார்கள்.  நமது நாட்டின் சீரழிவு நிலையில் இதை ன் நிறைய பார்த்தவர்கள். நம்மை சுற்றி நடக்கும் மனச்சாட்சி அற்ற நிகழ்ச்சிகள்  தருவது  மன நெகிழ்ச்சியா, மகிழ்ச்சியா?

கைகேயி நல்லவள். ராமனை வளர்த்தவள்.
 பெற்ற அம்மா கோசலையை  விட  கைகேயி மேல் தான் ராமனுக்கு பாசம் அதிகம். அவளும் அவனை கண்ணை இமை போல் வளர்த்தாள் . ஒரு குடம் பாலில் ஒரு துளி மோர் போதுமே.   கூனி எனும் மந்தரை போதாதா. வெள்ளைத்துணி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் ஒரு சொம்பு சாயத் தண்ணீர் போதும் அதன் நிறத்தை மாற்ற. அடையாளத்தை அழிக்க.

துஷ்ட சகவாசம் கூடாது. சத்சங்கம் மிக அவசியம் என்று  அதனால் தான்  திரும்ப திரும்ப  நமது முன்னோர்கள்  சொல்வார்கள்.  புரிந்து கொள்ளவேண்டும். தொற்று நோய் கிருமிகள்  கொரோனா மாதிரி  கப்பென்று  உடனே பிடித்துக் கொள்ளும். நல்ல குணம் லேசில் பெற முடியாது . நாட்பட நாட்பட தான் தன்வசமாகும். 


நல்லோர் நட்பு, நல்ல எண்ணங்கள், சாத்வீக உணவு, இதெல்லாம் சத்ய வழியில் செல்ல, சத்வ குணம் பெற உதவும். ஆன்மீக தாகத்தை தீர்க்கும் நீராகும்.

''விதுரா, நீ இப்போது சொல், எந்த ஒரு நடத்தையால், வாழ்வில் பெற வேண்டிய நல்லவிஷயங்கள் நம்மை விட்டு விலகும் என்கிறாய்? என்று கேட்டான்   திருதராஷ்டிரன்.

''அகம்பாவம், கர்வம் இருந்தால் மற்ற நல்ல குணங்கள் எல்லாமே நம்மை விட்டு போய்விடும். அது தான் உன்னையும் உன் மக்களையும் கெட்டியாக பிடித்துக்கொ ண்டிருக்கிறது. ஆதியில் செய்த காரியங்களால் தான் அந்திம காலத்தில் நெருக்கடி'' என்கிறான் விதுரன்.

சத்யம், நேர்மை ஒருவனிடம் இருந்தால் அவனை அது ரட்சிக்கும். ஒரு நேர்மையான, சத்தியமான, உண்மை யான விஷயத்தை எடுத்துச் சொல்வதால் மற்றவன் மனது புண்படும் என்றால் அதை சொல்லாமல் மௌனமாக இருத்தல் நன்று என்கிறான் விதுரன். அதைக்  கூடுமானவரை சம்பந்தப்பட்ட அந்த மனிதனை எந்த விதத்திலும் புண் படாமல் வலியுறுத்த முடிந்தால் அதைவிட சிறந்த சேவை வேறு எதுவுமில்லை. எதைச்  சொன்னாலும் கேட்பவன் மனது புண்படக்கூடாது'' என்கிறான் விதுரன்.

திருதராஷ்டிரன் நொந்து போகிறான். தனிமையில் மனச்சாட்சி அவனை வாட்டுகிறது. விதுரனை கூப்பிட்டனுப்புகிறான். எனக்கு நிம்மதியே இல்லை என வருந்துகிறான்.

''எதற்கு அண்ணா வருந்துகிறாய்.  நீ   வருந்துவதால்  நடந்ததை, கடந்ததை மீட்க முடியுமா உன்னால்?. நீ இப்போது உணர்வதால் உன் கஷ்டங்கள் காற்றிலே ஆவியாக போய்விடுமா சொல்?

மற்றவர்கள் எல்லோரும் புகழ்கிறார்கள் என்று எவனையும் தலையில் வைத்து கொண்டாடாதே. புகழாதே. ஹீரோ ஒர்ஷிப் வேண்டாம். ஒரே ஒரு ஹீரோ தான் உண்டு. அவனே ராமன், கிருஷ்ணன், சிவன் எனும் பலபேர் கொண்ட ஒருவன். அவனால் மட்டுமே zeero க்கள் எல்லாம் hero க்களாக, அல்லது hero க்கள் zero க்களாகவோ ஆவார்கள்.   அவன் செயலை , முடிவை, நாம் விதி என்ற பெயராலும் உணர்கிறோம்.. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...