Sunday, February 28, 2021

CHETTIYAR FAMILY WEDDING

 

ஒரு செட்டியார்  வீட்டு கல்யாணம்  5  ---  நங்கநல்லூர்  J K  SIVAN



செப்டம்பர்  11,  1943.  மாலை  ரெண்டு  மணிக் கு  முன்பு  நான் கோட்டையூரில்  என்ன செய்தேன்? 
 M L வசந்தகுமாரி பாடிய  கிருதிகள்  அற்புத மாக  இருந்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டி ருந்தேன்.  ரெண்டு  மணி நேரம்  ஓடியதே தெரியவில்லை.   மாளிகை  சுவற்றில் தாத்தா கடிகாரம்  ரெண்டு மணி காட்டியது.  சின்னமுள்  2  பெரியமுள்  12ல்  நிற்கும்போது   ''பவமான  சுதடு  பட்டி''  இசைத்து    அம்மா லலிதாங்கியோடு சேர்ந்து வசந்தகுமாரி கச்சேரியை நிறைவு செய்து   காது செவிடு படும்  பலத்த கை  தட்டலைப் பெற்று  எல்லோ ருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
அதுவரை சாப்பிடாமல் இருந்தவர்களுக்கு அப்போது தான் வயிறு ஞாபகம் வந்தது.  சமையல் ஹாலுக்கு ஓடினார்கள். ஏற்கனவே சாப்பாடு கடை முடித்த   என் போன்றோர்   சிலர்  செட்டியார் மாளிகையில் அறிமுகமான  புதிய நண்பர்களோடு   இதுவரை  அனுபவித்த  சங்கீத, நாட்டிய,  காலட்சேப, உபன்யாச  நிகழ்ச்சிகளை பற்றி  சில நிமிஷங்கள்   அலசி னோம்.  யார் யார் எப்படி ஆடினார்கள், பாடினார்கள் பேசினார்கள் என்பதை அலசு வதில் எப்போதுமே  ஒரு பேரானந்தம்.  
 என்னென்ன  அயிட்டங்கள் மூன்று  நாட்களாக சாப்பிட்டுக் கொண்டு வருகிறோம், இன்னும் என்ன குறை இருக்கிறது என்று யோசித்தால்,  செவிக்கோ, வயிற்றுக்கோ  ஒரு வஞ்சனை யுமில்லை என்று தான் தோன்றுகிறது. செட்டி யாரிடம் குறை ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்தால்  முடியவே முடியாது போல் இருக்கிறதே.  எனக்குள் இருந்த  ஒரு பெரிய குறை  பிரம்மதேவன் மேல் தான்.  ஏன் ஒரு  நாளைக்கு 24 மணி நேரம் மட்டும் வைத் தான்? என்று   கோபம் கோபமாக வந்தது. அவன் ஒரு நாளைக்கு  100 மணி நேரம் என்று வைக்க தோணவில்லை,    ஏன்  அந்த  பயல் சூரியனை  மெதுவாக ஊர்ந்து செல்ல   வைக் வில்லை ?வயிறு நிறைய  விருந்து சாப்பிட்டால் இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றுமோ என்னவோ?
அடுத்ததாக  மேடைக்கு யார் வரப்போகிறார் கள் என்று செட்டியார் சிப்பந்திகள் அறிவித்து அனைவரையும் வரவேற்று அமைதியாக  அமரச் சொன்னார்கள்.  
இசையரசு தண்டபாணி தேசிகர்  மேடை ஏறினார். கழுக்கு  முழுக்கு என்று  கொஞ்சம் குள்ள உருவம் , ரெட்டை நாடி,  கருப்பாக இருந்தாலும்  வசீகரமான ரவுண்டு முகம்.  முன் வழுக்கை. முழுக்கை சட்டை மேல்  ஜரிகை அங்கவஸ்திரம், நெற்றியில் பெரிய  காலணா அளவு  ஜவ்வாது குங்குமம். வெண்ணிற  பற்கள் உதடுகள் விரிய சிரித்தன.  நந்தனார்  நந்தனார் என்று கூட்டத்தில் குரல்கள் ஒலிக்க  சங்கீத குழுவோடு கச்சேரியை ஆரம்பித்தார்.  முழுக்க முழுக்க  தமிழ் பாட்டுகளே  கணீரெ ன்று பாடினார்.  அருணாச்சல கவிராயர் பாடல்கள், கோபால கிருஷ்ண பாகவதர் பாடல்கள்   நேயர் விருப்பமாக  பாட கோரிக் கைகள்.  வறுகலாமோ, ஐயே மெத்தகடினம்,  வழி மறைத்திருக்குதே,  தவிர  ஜெகஜ் ஜனனி பாடும்போது ஒன்ஸ் மோர்  கேட்டார்கள்.நாலு மணி வரை பாடினார்.  ரெண்டு மணி நேரம்  இவர்களுக்கெல்லாம் போதவே  போதாது.  
நாலுமணிக்கு  எல்லோருக்கும்  வழக்கம்போல்  சாயந்திர சிற்றுண்டிகள், வெங்காய பஜ்ஜி,  தூத் பேடா,  பாதாம்கீர்,  மெது  பக்கோடா,   சுட சுட மொறுமொறுவென்று  ஆரஞ்சு  நிறத்தில்  மைசூர் போண்டா,  தேங்காய் சட்னி  வாழை இலையில்  பரிமாறல்.   சுவையான  பீ பரி   PEABURRY பில்டர்  காப்பி  குடித்துவிட்டு  மண்ட பம் வந்து அமர்ந்தபோது தான்  சிறிது நேரத் தில்  KBS,   கே. பி சுந்தராம்பாள்  குழுவி னர்  பாட ஆரம்பித்தார்கள்.    ஹார்மோனியம்,  தவில், பிடில், மிருதங்கம் ஒரு நல்ல காம்பினேஷன்.   நாடக பாட்டுக்கள், வள்ளி கல்யாணம், முருகன் பாடல்கள்,  கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் எல்லாமே  கணீரென்று குரலில்  வார்த்தைகள் ஸ்பஷ்டமாக  கேட்கும்படி பாடுவதில் KBS   தனியிடம்  பிடித்தவர். அவரது பாடல்களில்  சங்கீத தெளிவும், பக்தி பாவமும்  கலந்து ஒன்றை ஒன்று மிஞ்சும்படி இருப்பது அலாதி அழகு.   பிற்காலத்தில்  அவரது ஒளவையார் படம் பார்த்திருக்கிறீர்களா?
சாயந்திரம்  நிகழ்ச்சிகள் இத்தோடு முடிந்த வுடன்  கல்யாண கோஷ்டி மாப்பிள்ளை வீட்டார் சமூகத்துக்கு   கண்டனுர்  புறப்பட்டது. எல்லோருக்கும் வில்வண்டிகள்  இருந்தது  அத்தனைபேரும்  கோட்டையூரிலிருந்து  மாப்பிள்ளை வீட்டுக்கு கண்டனூர் செல்ல ஏற்பாடு நடந்தது.  நடந்து செல்ல  பிடித்த வர்கள்  நிறையபேர் காலாற  கிளம்பி விட்டார் கள்.    முன்பே  அங்கே  எல்லா ஏற்பாடுகளும் வைரவன் செட்டியார்  செய்து முடித்துவிட்டார்.
அழகப்பர் மாளிகையிலிருந்து  கண்டனுருக்கு  4 - 5  கிமி. தூரம் தான்.  அற்புதமான ஊர்.  வைரவன் செட்டியார் மாளிகையில்  இரவு தங்க  ஏற்பாடுகள், தொடர்ந்து சில கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.கண்டனூரில்  அற்புதமான சிவன் கோவில் உள்ளது. பிரம் மாண்டமாக கட்டப்பட்டு நகரத்தார்களால் சிறப்பாக  பராமரிக்கப்பட்டு வரும் ஆலயம்.   நிறைய பெண்களுக்கு இங்கே உமையாச்சி, உமையாள்  என்று பெயர் உள்ளது. பழனியில்  சுப்பிரமணி,முருகன், மதுரையில் சொக்க லிங்கம், சொக்கநாதன்,  சுந்தரேஸ் வரன் சிதம்பரம்  நடராஜன் மாதிரி.    எல்லோருக்கும்  தங்க இட வசதிகள் ஏற்பாடாகி யிருந்தது.    
உள்ளூர்  சிவன் கோவில்  விசாலமானது. பக்தி பூர்வமாக  நகரத்தார்கள்  கண்காணிப்பில்  பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகே சாக் கோட் டையில்    உமையாம்பிகை சமேத  வீர சேகரர்  சிவாலயம் ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட  சோழன் கட்டிய கோவில். கண்டன்  என்கிற சோழன் பேரில் உள்ளதாள்  சிவபக்தர்  கண்டராதித்த சோழர் காலமாக இருக்கலாம்.  விவரங்களுக்கு உள்ளே இன்னும்  போக வில்லை.
செட்டியார்  உபசரிப்பில்  அற்புதமான  இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும்  ஆவலாக  காத்திருந்தது  பானுமதி நாட்டியத்திற்காக. எப்படி எல்லாம் ஆட்களை பிடித்து  ஏற்பாடு செய்திருக்கிறார் செட்டியார். திரைப்புகழ் P .பானுமதி  அப்போது நடன நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறார் போலிக்கிறது .  இரவு  பதினோரு மணிக்கு முடிந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியை தொடர்ந்து நித்ராதேவி  என்னை முழுமையாக ஆட்கொண்டாள். அதற்கு முன்  கல்கண்டு  ஏலக்காய் போட்ட  THICK    கள்ளிச் சொட்டு  பசும்பால் ஒரு டம்ளர் வயிற் றை ஆக்கிரமித்தது.  
நாளை  இங்கிருந்து புறப்படு முன் கண்டனு ரில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்வேன்.
.தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...