Tuesday, February 2, 2021

SUR DAS

 


ஸூர் தாஸ்      -    J K  SIVAN 

            

10.  ஹே கோவிந்தா.
 
சூர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு  வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா,  அல்லது  அவரும்  ஒரு  பில்வமங்களா, சைதன்யரா? ''
 ''ஆம்/ இல்லை'' ரெண்டும்  சரி.  ஏனென்றால்,  மேலே சொன்னவர்களை போல இல்லை கண்ணற்ற சூர் தாஸ்.    கண்ணனை மனதால் கண்டவர்.  விழியில்லையே தவிர   சிந்தையிலே அந்த சின்னக்கண்ணனை நிலை நிறுத்திக் கொள்ள  வழி தெரிந்த அற்புத மஹான்.

அவரின் ஒரு பிரபல பாடலிலிருந்து சூர்தாசரை அனுபவிப்போம்

Hey Govind hey Gopal
Hey Govind rakho sharan
Aab to jivan hari --(2)
Neer pivan heytu gayo
Sindhu ke kinare
Sindhu beech basat grah
Charan dhari pachhare
Hey Govind hey Gopal
Chaar prahar yudha bhayo
Ley gayo mazdhare
Naak Kaan Dooban lagey
Krishna ko pukare
Hey Govind Hey Gopal
Dwarika me Sabd gayo
Shor bhayo bhare
Shankh Chakra Gada Padma, Garud ley sidhare
Sur kahe shyam suno sharan hai tihare
Aab ki bar paar karo, Nand ke dulare
Hey Govin Hey Gopal  

''அடே குட்டி கிருஷ்ணா,  என் எதிரே  உட்கார்ந்து இருக்கியா,   நீ  ஒண்ணு  செய்யேன்''' என்று ஸூர் தாஸ் சொல்ல, 

''என்ன தாத்தா  நான் என்ன செய்யணும்?  என்று கேட்டான்  கன்னத்தில்  கை  ஊன்றி அமர்ந்த குட்டி கிருஷ்ணன்.

'''என்னை எப்போவும் உன்கிட்டேயே வச்சுக்கிறீயா?   நீ தானே என்னை ரக்ஷிக்கணும். உனக்கு தெரியாதா, நான் இதோ இப்பவோ இன்னும் கொஞ்சநாளோ?''   என் வாழ்க்கை முடியப்போறதே.

''ஓஹோ  அது தான் உன் ஆசையா?\\

அன்னிக்கு சிந்து நதிக்கரையில் என்ன நடந்ததுன்னு  மறந்து போச்சா?

என்ன நடந்தது, ஞாபகம் இல்லை,  நீயே சொல்லு தாத்தா?''

தாகத்திற்கு நீர் அருந்த கஜேந்திரன் எனும் யானை ஆற்றில் காலை வைத்து இறங்கினான். எதைச் 
சாப்பிட்டு இன்று பசியாறலாம் என்று ஒரு முதலையும் அப்போது அந்த நதியில் காத்திருந்ததே.  அடடா, நமக்கு கிடைச்ச  லக்கி ப்ரைஸ் என்று யானையின் காலை பிடித்து கவ்வியது. உயிர் காத்துக் கொள்ள கஜேந்திரன்  எதிர்த்தான். வந்த ஆகாரத்தை விடுவேனா என்று முதலையும்  விடவில்லை. உயிரா, பசியா? எது வெல்லும்?. அதுவும் நீரில் முதலை பல யானைகளுக்கு சமம். பன்னிரண்டு மணி நேர போராட்டம். முதலையின் கை ஓங்கி யானையை இன்னும் ஆழத்திற்கு இழுத்துக்கொண்டு போகிறது.
யானைக்குத் தெரிந்து விட்டது. நம் சக்தி விரயமாகிக்கொண்டு வருகிறதே. இனி உதவி வெளியேயிருந்து தான் உதவி நமக்கு  வரவேண்டும். யார் உதவுவார்கள்?  சடாரென்று  கஜேந்திரனுக்கு   உன், (கிருஷ்ணன் ) ஞாபகம் வந்தது. 
''கிருஷ்ணா, கிருஷ்ணா, துவாரகா நாதா'  ஆதி மூலா'' .... யானையின் சோக ஒலி துவாரகை சென்று உன்னுடைய  அரண்மனை கதவை படார் படார் என்று இடித்தது.
''கிருஷ்ணா,  உனக்கு அவசரம் புரிந்து விட்டது. எங்கே கருடன்? என்று கூப்பிட்டாய்.  நொடியில் கருட  வாகனனாக சங்கை ஒலித்துக் கொண்டு (''நான் வந்துவிட்டேன் '' என்று தைரியம் சொல்ல ) கதாயுதத்தோடு பறந்தாயே. 
''கிருஷ்ணா , இதோபார்,  இதைக் கேள்.  நான் உன்னை அண்டி வந்தவன். என்னைக்  காத்திடுவாய் என்று கதறுகிறேன். முதலையை காத்ததுபோல் இந்த பவ சாகரத்திலிருந்து, உலக வாழ்க்கைக்  கடலிலிருந்து  என் ஐம்புலன்களாகிய முதலைகளின்  பிடியிலிருந்து  என்னை  நீ   மீட்பாயா. நந்த குமாரா ?

சூர்தாஸை அவரது பிரிஜ்பாசி மொழி தெரிந்து படித்தால்  அவர் இன்னும் மணம்  வீசுவார். நாம் கொடுத்து வைத்தது ஆங்கில மொழி பெயர்ப்பில்.  ஏதோ  இதாவது கிடைத்ததே  என்று 
 திருப்தி அடைவோமா ?

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...