Friday, February 5, 2021

SADHASIVA BRAMMENDRA

 


 சதாசிவ பிரம்மேந்திரர்     J K  SIVAN 


ஒருவரே  பல  கலைகளில் வல்லுனராக இருக்கமுடியுமா.  முடியும்  என்றால் அவர்  ஒரு சித்தர்  என்று எளிதாக சொல்லிவிடலாம்.  அப்படி  ஒரு அற்புத சித்தர்  அவதூதரான சதாசிவ ப்ரம்மேந்திராள். மௌன ப்ரம்ம ஞானி. அவர்  மௌனியாக மாறியதற்கு ஒரு கதை உண்டு: 


''சதாசிவ ப்ரம்மேந்த்ரர் ஒரு ப்ரம்ம ஞானி. அவதூதர். மதுரை பூர்வீகம்.  அப்பா சோமசுந்தர அவதானி ஒரு வேதாந்தி.  சோழமண்டலத்தில்  கும்பகோணம் அருகே  திருவிசநல்லூரிலே பெரிய மஹான்கள்  சிலர் இருக்கிறதை கேள்விப்பட்டு  சோமசுந்தர அவதானி குடும்பம் அங்கே குடியேறியது.  அவர் புத்ரன் சதாசிவனுக்கு 5 வயதில் உபநயனம். குருகுல வாசம்.   அக்கால வழக்கப்படி  குழந்தை வயசிலேயே 
 கல்யாணம். மனைவி புஷ்ப வதியாகி தாய் வீட்டிலிருந்து சதாசிவன் வீட்டுக்கு வரும் நாள். அன்று காலை நல்ல பசி  சதாசிவனுக்கு.  சமையல் லேட்டாகிறது.   அம்மாவிடம்  போய் கேட்டான்: 

''ஏம்மா சமைக்கிறதுக்கு இன்னிக்கு இத்தனை நாழி? பசிக்கிறதே. ''
அம்மா பார்வதி மாமி : ''சதாசிவா , இன்னிக்கு நம் அகத்துக்கு உன் பார்யா வரப்போறா. அதுக்காக விருந்து பண்ணிண்டிருக்கிறதாலே லேட்''
சதாசிவனுக்கு கவலை வந்துவிட்டது: 
''அம்மா எனக்கு கல்யாணமாகி இன்னிக்கு தான் என் மனைவி இங்கே வரப்போறாளா? அவள்  வரப்போறா என்பதாலேயே சாப்பிட இவ்வளவு நாழியானால், மனைவியாக வீட்டுக்குள் வந்துவிட்டால் இனிமேல் எத்தனை நாழியாகுமோ?''

பட்டினத்தாரைப்  போல்  வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்  சதாசிவன் . அதிர்ச்சியடைந்த பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிலகாலம் எங்கோ அலைந்து திரிந்து தீக்ஷை பெற்று சந்நியாசியாக திரு வெண்காட்டில் வாழ்ந்திருந்தார். அகோர மூர்த்தி பக்தரான அவர் பரமசிவேந்திராள் என்கிற (1539-1586)  காஞ்சி காமகோடி பீடாதிபதியை குருவாக கொள்கிறார். பரம சிவேந்திராள் வேதாந்த சாஸ்திரங்கள் எல்லாம் கற்று இணையற்ற யோகியாக வாழ்ந்தவர். ப்ரம்ம சூத்ர வ்ருத்தி,, யோக சூத்ர வ்ருத்தி, சித்தாந்த கல்பவல்லி ஆகிய வேதாந்த நூல்களை இயற்றியவர். 

சதாசிவன் குருவுடனோ  மற்றவர்களுடனோ  அவ்வப்போது  வாதங்கள் புரிவார். தவறைச்  சுட்டிக்காட்டுவார். ஒருநாள் ஒரு பண்டிதர் குருவின் முன்பு தவறாக ஏதோ வ்யாக்யானங்கள் செய்தபோது அவரை சாடினார் சதாசிவன் .

அந்த பண்டிதர் சென்றபிறகு குரு பரமசிவேந்திராள் சதாசிவனை அழைத்து ''சதாசிவா, நீ செய்கிற தர்க்கங்களால், வாதத்தால் என்ன பயன். என்றாவது ஒருநாள் உன் நாவை அடக்கவேண்டாமா?'' என்று வருந்துகிறார்.

''குருநாதா. உங்கள் அனுக்கிரஹம் கிடைத்துவிட்டது. அது இன்றே'' என்று குருவை நமஸ்கரிக்கிறார் சதாசிவ ப்ரம்மேந்திராள். அந்த கணம் முதல் தேகவியோகம் அடையும் வரை அவர் மௌனகுருவாக இருந்தார். சர்வமும் துறந்த ஞானியாக பல க்ஷேத்ரங்கள் அலைந்து திரிந்து பைத்தியம் என்று எல்லோரும் எள்ளி நகையாட திரிந்தார். குரு பரமசிவேந்திராளிடம் செய்தி சென்றது. ஆஹா என்ன பாக்யம். எனக்கு அப்படி பைத்திய பட்டம் வர நான் கொடுத்து   வைக்கவில்லையே என்று வருந்துகிறார். நிர்வாண ப்ரம்ம ஞானியாகி விட்டாரே சதாசிவர் என்று தானும் அன்றுமுதல் சிவத்யானத்தில் மௌனமாக ஈடுபட்டார். மற்றொருவரை ஜகத் குரு பீடாதிபதியாக்கிவிட்டார்.

வரப்பின் மேல் தலைவைத்து சாய்ந்து வயலில் படுத்த இவரை ஒரு வழிப்போக்கன், ''துறந்த கட்டைக்கு சாய்மானமா''     என்பதை கேட்டு வயலில் படுக்க முயன்றபோது, ''துறவிக்கு சொல் பொறுக்கவில்லையா''
என்று சொன்னதும் ''இது எனக்கு உபதேசம். எல்லாம் துறந்தவனுக்கு மற்றவர் உபதேசம் லட்சியமா?'' என்று புரிந்து கொள்கிறார்.

பசி உடலை வாட்ட, யாரோ ஓரு முஸ்லீம் பிரபு வீட்டிற்குள் நுழைந்து கையேந்தினார். ஒரு நாளைக்கு ஒரு தரம் தான் கையேந்துவார் அப்போது யார் என்ன கொடுக்கிறார்களோ அந்த ஒரு கவளம் தான் ஆகாரம். மறுநாள் தான் அப்பறம். அந்த வீட்டு பெண்கள் '' யார் இவன்? நிர்வாணமாக அத்து மீறி, நம் வீட்டுக்குள் நுழைந்தவன்'' என்று அந்த முஸ்லீம் பிரபுவுடன் சொல்லி அவன் கோபத்தோடு ஓடி வந்தான். அதற்குள் பிரம்மேந்திரர் ஆகாரம் இல்லை என்று அந்த பெண் சொன்னவுடன் சிவ ஸ்தோத்திரங்கள் மனதால் சொல்லிக்கொண்டே காவேரிக் கரை நோக்கி நடந்தார். ஒரு கை ஜலம் அன்று போதும் என்று நினைத்தாரோ என்னவோ. அதற்குள் அவர் பின் ஓடி வந்த முஸ்லீம் கூரான வாளினால் அவர் வலது கையை தோளோடு வெட்டினான். அது கீழே விழுந்தது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட ஒன்றுமே நடக்காதது போல் ஆற்றங் கரையை நோக்கி நடந்தார். முஸ்லீம் அசந்து போனான். அவரிடம் ஓடிச்சென்று ''அய்யா, நான் உங்கள் கையை வெட்டினேன் நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் உங்கள் ஸ்தோத்திரத்தை தடைபடாமல் சொல்லிக்கொண்டு நடக்கிறீர்களே. என்ன ஆச்சரியம் இது?'' என்று கேட்டபோது தான் ப்ரம்மேந்த்ரருக்கு தனக்கு வலது கை இல்லை என்று தெரிந்தது. இருபது அடி தூரம் பின்னால் நடந்து கீழே இருந்த கையை இடது கையால் எடுத்து வலது தோளில் வைத்தார். அது முன் போல் சேர்ந்து விட்டது !!

 நமக்கே இதை படிக்கும்போது  மயிர்கூச்செறிகிறதே   நேராகவே பார்த்த அந்த முஸ்லிமுக்கு  எப்படி இருக்கும்?''

அந்த ப்ரம்ம  ஞானியின் காலில் விழுந்தான். அவனையும் எல்லோரையும் போல் அன்பாக நேசித்து ஆசி வழங்கி அவர் காவிரி நதிக்கு சென்றார். ''மானஸ சஞ்சரரே'' பாடல் மணலில் எழுதினர். பலர் அதை எழுதி வைத்துக்கொண்டார்கள் நாம் இன்றும் அதை கேட்டு பாடி, அனுபவிக்கிறோம்.

மானஸ சஞ்சரரே எனும் இந்த அற்புத சதாசிவ ப்ரம்மேந்திராவின் கீர்த்தனையை சாமா ராகத்தில் கேட்டு மகிழாதவர்கள் இல்லை. ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அதை சற்று வேறு விதமாக மாற்றி அனுபவித்து பாடியிருக்கிறார். நான் அந்த பாட்டின் ரசிகன் .

मानस सन्चररे। ब्रह्मणि मानस सन्चररे॥ - mānasa sancarare |brahmaṇi mānasa sancarare ||
मदशिखि पिञ्छालन्क्रुत चिकुरे। महणीय कपोल विजित मुकुरे॥ madaśikhi piñchālankruta cikure | mahaṇīya kapola vijita mukure ||
श्री रमणी कुच दुर्ग विहारे। सेवक जन मन्दिर मन्दारे॥śrī ramaṇī kuca durga vihāre |sevaka jana mandira mandāre ||
परमहम्स मुखचन्द्र चकोरे। परिपूरित मुरली रवधारे॥ paramahamsa mukhacandra cakore | paripūrita muralī ravadhāre ||


“ஏ மனமே சற்று சிந்தித்துப்பார். மிக உயர்ந்தது ஒன்று உன் மனதை கடந்து நிற்கிறதே அந்த பிரம்மத்தை நாடு. சிந்தித்து பார். அந்த பரம்பொருள் என்ன ஆபரணம் பூண்டு மினுக்குகிறான்? ஒரு சாதாரண அழகிய மயில் இறகு , பீலி அவனது கருத்த சுருண்ட கூந்தலில் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டது போல
அமர்ந்திருக்கிறது. உன்னத பிரம்மத்தை தேடும் முயற்சியும் அப்படி அழகு பெறட்டும். அந்த பரப்ரஹ்மத்தின் கன்னங்கள் எப்படி கண்ணாடியை போல பளபளக்கிறது. அவன் மஹாலக்ஷ்மியை மார்பில் தாங்கி நிற்கும் ஸ்ரீ நிவாஸன். அவனே துர்காவை சேர்ந்து நிற்கும் பரமேஸ்வரனும் கூட. அவனது பக்தர்களுக்கு அவன் ஒரு கல்பதரு. நினைப்பதெல்லாம் அளிக்கும் வாசலில் நிற்கும் கற்பக விருக்ஷம். அவனை அடிபணிந்து நிற்கும் சேவிக்கும் பக்தர்களுக்கு அந்த பரம ஹம்ஸ ஞானியின் முக கமலம் பூரணநிலவு. அவர்கள் அவனை நாடி விண்ணில் பறக்கும் சகோர பக்ஷிகள். மனமே, ப்ரம்மஸ்வரூபத்தை நாடும் சகோரபக்ஷியே, ஆனந்த பரிபூரணத்தை அவனது நாணல் குழல் பிரம்மானந்தத்தை எங்கும் நிரப்பும் ஒலியிலிருந்து அனுபவி!



https://youtu.be/bN-IWHIWrh0

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...