ராஜா பர்த்ருஹரி
உஜ்ஜயினி ராஜா விக்கிரமாதித்தன் அம்புலி மாமா மூலம் எல்லா குழந்தைகளுக்கும் ஒரு காலத்தில் தெரிந்த சரித்திர நாயகன். அவனைத் தெரியாத ஹிந்துவே கிடையாது. அவனுடைய அண்ணா தான் பர்த்ருஹரி. சிறந்த வேதாந்தி. கவிஞன். இன்பம் சுவைத்து விரும்பி வாழ்ந்த அரச போகத்தை உதறித் தள்ளி விட்டு சன்யாசி யானவன் பர்த்ருஹரி . முன்னூறு பாடல்கள், அவன் எழுதி நமக்கு ஒரு புதையலாக விட்டு விட்டு போயிருக்கிறான். அவற்றில் நூறு தான் இந்த வைராக்ய சதகம். காலத்தால் அழியாத மேன்மை கொண்டது.
अमीषां प्राणानां तुलितबिसिनीपत्रपयसां
कृते किं नास्माभिर्विगलितविवेकैर्व्यवसितम् ।
यदाढ्यानामग्रे द्रविणमदनिःसंज्ञमनसां
कृतं वीतव्रीडैर्निजगुणकथापातकमपि ॥ ५॥
அமீஷாம் ப்ராணாநாம் துலிதபி³ஸிநீபத்ரபயஸாம்
க்ருʼதே கிம் நாஸ்மாபி⁴ர்விக³லிதவிவேகைர்வ்யவஸிதம் ।
யதா³ட்⁴யாநாமக்³ரே த்³ரவிணமத³நி:ஸம்ஜ்ஞமநஸாம்
க்ருʼதம் வீதவ்ரீடை³ர்நிஜகு³ணகதா²பாதகமபி ॥ 5 ॥
நம்முடைய பலம், சக்தி வானளாவியது என்று மூட நம்பிக்கை தான் நமக்கு முதல் எதிரி. அடேய், அது தாமரை இலைத் தண்ணீரடா . எந்த கணமும் உன்னை விட்டு ஓடி விடும். ஒட்டாது. என்று புரிய வில்லையே! யோசிக் காமல்,ஆற அமர்ந்து சிந்திக்காமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்து செத்து மடியுமிந்த விட்டில் பூச்சி வாழ்க்கை யை யாரும் புரிந்து கொள்ள வில்லையே. ஏதோ கொஞ்சம் பணம் சொத்து இருக்கிற தென்ற கர்வத்தில், மமதையில், அதுவே என்றும் நிலைக்கும் என்ற தவறான எண்ணத்தில், மற்றவன் என்னை புகழ் பாட, நான்தான் சர்வ சக்தி, இந்திரன் சந்திரன் என்று பகல் கனவில் காலம் கழித்து விட்டேனே.
निवृत्ता भोगेच्छा पुरुषबहुमानोऽपि गलितः
समानाः स्वर्याताः सपदि सुहृदो जीवितसमाः ।
शनैर्यष्ट्युत्थानं घनतिमिररुद्धे च नयने
अहो मूढः कायस्तदपि मरणापायचकितः ॥ ९॥
நிவ்ருʼத்தா போ⁴கே³ச்சா² புருஷப³ஹுமாநோঽபி க³லித:
ஸமாநா: ஸ்வர்யாதா: ஸபதி³ ஸுஹ்ருʼதோ³ ஜீவிதஸமா: ।
ஶநைர்யஷ்ட்யுத்தா²நம் க⁴நதிமிரருத்³தே⁴ ச நயநே
அஹோ மூட:⁴ காயஸ்தத³பி மரணாபாயசகித: ॥ 9 ॥
என்ன வாழ்க்கையடா இது! என்னென் னவோ மண் கோட்டைகள், மனக்கோட்டைகள் அதில் கோடானு கோடி ஆசைகள், எங்கே அதெல்லாம் இப்போது? இருந்த இடமே காணோம். இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டவர்கள் போன இடமே அட்ரஸ் இல்லை. யார் இவன் என்று கேட்கும் அளவுக்கு மங்கி விட்டேனா? என்னிடம் தேன் வண்டாக சுற்றிக்கொண்டிருந்தவர்கள் எப்படி ஆவியாக மாறி பறந்து போய் விட்டார் கள். என் கஷ்டத் துக்கு அவ்வளவு சக்தியா? எல்லாம் கைவிட்டு போனபின் இந்த கைத்தடி ஒன்று தான் துணையா. ஆஹா ஊன்று கோல் என்ன அருமையான பேர் அதற்கு ! கண் பார்வை மங்கினால் பிராண சிநேகிதன் அது ஒன்றுதான்.
இந்த முட்டாள் உடம்புக்கு உலக வாழ்க்கை, அதன் சுகங்களில் அத்தனை மோகம் என்பதால் தானே மரணம் என்றால் நடுங்குகிறது. இதெல் லாம் பார்த்தால், யோசித்தால் ஆச்சர்ய மாக இல்லையா?.
अवश्यं यातारश्चिरतरमुषित्वापि विषयाः
वियोगे कोभेदस्त्यजति न मनो यत्स्वयममून् ।
व्रजन्तः स्वातन्त्र्यादतुलपरितापाय मनसः
स्वयं त्यक्त्वाह्येते शमसुखमनन्तं विदधति॥
அவஶ்யம் யாதாரஶ்சிரதரமுஷித்வாபி விஷயா
வியோகே³ கோ பே⁴த³ஸ்த்யஜதி ந ஜநோ யத்ஸ்வயமமூந் ।
வ்ரஜந்த: ஸ்வாதந்த்ர்யாத³துலபரிதாபாய மநஸ:
ஸ்வயம் த்யக்தா ஹ்யேதே ஶமஸுக²மநந்தம் வித³த⁴தி ॥ 12 ॥
ஒன்றா இரண்டா, எத்தனை வருஷங்களாக இந்த இந்திரிய சுகங்களை அடிமையாக இருந்தேன்!. உலகமே இது் தான் என்று மயங்கிக் கிடந்தேன். இந்த ஐம்புலன்கள் தந்த, அதன் மூலம் நான் அனுபவித்த சுகம் இன்பம் எல்லாம் சாஸ்வதமாக, நிரந்தரமாக இல்லை யே. பஞ்சாக பறந்து விட்டதே! போகும்போது கை நிறைய, பை நிறைய துன்பம் துயரத்தை தான் ''இந்தா என் பரிசு'' என்று தந்து விட்டு போகும் என்று தெரியாமல் போய்விட்டதே. கொஞ்சம் கெட்டிக் காரத்தனமாக நாமாகவே ''இதெல்லாம் எனக்கு வேண்டாம்'' என அதை தவிர்த்தால் ஆஹா அதன் சுகமே தனி என்பது புரியாமல் போனதே.
இதில் என்ன கஷ்டம் என்றால் இந்த குரங்கு மனம் நம்மை அப்படி போக விடாதே. திரும்ப திரும்ப புலனின்பத்தை அல்லவோ தேடுகிறது. அந்த சுகம் கிடைக்காவிட்டால் மனம் படும் பாடு, துன்பம், ஏக்கம் இருக்கிறதே. அப்பப்பா , சொல் லில் எழுத்தில் அடங்காது. சீ சீ, நீ வேண் டாம் போ என்று நாமாக உதறிவிட்டால் அப்போது விளையும் நிரந்தர சுகம், மன அமை திக்கு ஈடு இணை உண்டா?
பர்த்ரூஹரி வைராக்ய சதகமாக ஒரு பக்கம், தமிழில் பத்திரகிரியார் புலம்பலாக இன்னொரு பக்கம் தொடர்வார்.
No comments:
Post a Comment