வைராக்ய சதகம் -- நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி
खलालापाः सोढाः कथमपि तदाराधनपरैः
आशा नाम नदी मनोरथजला तृष्णातरङ्गाकुला
रागग्राहवती वितर्कविहगा धैर्यद्रुमध्वंसिनी ।
मोहावर्तसुदुस्तरातिगहना प्रोत्तुङ्गचिन्तातटी
तस्याः पारगता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः ॥ 4॥
க²லாலாபா: ஸோடா:⁴ கத²மபி ததா³ராத⁴நபரை:
நிக்³ருʼஹ்யாந்தர்பா³ஷ்பம் ஹஸிதமபி ஶூந்யேந மநஸா ।
க்ருʼதோ வித்தஸ்தம்ப⁴ப்ரதிஹததி⁴யாமஞ்ஜலிரபி
த்வமாஶே மோகா⁴ஶே கிமபரமதோ நர்தயஸி மாம் ॥ 4 ॥
வைராக்யம் இல்லாத முட்டாள் மனமே, என்னை என்னென்ன பாடு படுத்துகிறாய் என்று உணர்ந்து பார்க்கிறேன். தீயவர்களின் வார்த்தைகளை செவிமடுத்து பயபக்தியோடு கேட்டு அவர்களது அறியாமையை உணர்ந்தும் மனச்சாட்சிக்கு விரோதமாக தலையாட்டி ஆமோதித்து அடிமை வாழ்வு வாழச் செய்கிறாய். மனம் உடைந்து கண்ணீர் பெருகினாலும் அதை வெளிக்காட்டாமல் நமுட்டு சிரிப்பு சிரிக்கப் பண்ணுகிறாய். என்னை முழு கோழையாக்குகிறாய். உள்ளே எரிமலை பொங்கினாலும் வாய் ஹா ஹா என்று பிறருக்காக சிரிக்கச் செய்கிறாய் . பாழும் பணத்துக்கும் மூன்று வேளை சோற்றுக்கும் இவ்வளவு அடிமைத்தனம், பயம். சர்வ முட்டாள்களையும் , கொழுத்த மூளையற்ற பணக்காரனையும் தலை குனிந்து வணங்க வைக்கிறாயே .ஏன்? என் முட்டாள்தனமான தேவைகள் பூர்த்தியாவதற்காக. இன்னும் என்னென்ன செய்து என்னை ஆட வைக்கப் போகிறாய்?
आशा नाम नदी मनोरथजला तृष्णातरङ्गाकुला
रागग्राहवती वितर्कविहगा धैर्यद्रुमध्वंसिनी ।
मोहावर्तसुदुस्तरातिगहना प्रोत्तुङ्गचिन्तातटी
तस्याः पारगता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः ॥ १०॥
ஆஶா நாம நதீ³ மநோரத²ஜலா த்ருʼஷ்ணாதரங்கா³குலா
ராக³க்³ராஹவதீ விதர்கவிஹகா³ தை⁴ர்யத்³ருமத்⁴வம்ஸிநீ ।
மோஹாவர்தஸுது³ஸ்தராதிக³ஹநா ப்ரோத்துங்க³சிந்தாதடீ
தஸ்யா: பாரக³தா விஶுத்³த⁴மநஸோ நந்த³ந்தி யோகீ³ஶ்வரா: ॥ 10 ॥
நமது எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் எல்லாம் ஒரு பெரிய ஆறு மாதிரி. அதில் காணும் எண்ணற்ற அலைகள் தான் நமது எத்தனையோ ஆசைகள். அவை நம்மை இழுத்துச் சென்று துன்பங்களில் தவிக்க விடுகிறது. பறவைகள் இரைக்கு ஆசைப்பட்டு வலையில் சிக்கிக் கொள்வது போல் நம்மை இந்த ஆசைகள், பேராசைகள் கவ்வுகிறது. மனோ தைரியத்தை இழந்து சிந்திக்கத் தெரியாமல் எளிதில் அடிமைக ளாகி றோம். ஆற்றில் சுழல் போல் இந்த அஞ்ஞானத்தின் சக்தி. அதன் பிடியில் சிக்குகிறோம். நன்றாக நீந்த தெரிந்தவன் ஆற்றில் மூழ்காமல் சுழலில் சிக்காமல் அக்கரை சேர்கிறான். ஞானிகள் யோகிகள், திட சித்தம் கொண்டவர்கள் அதுபோல் இந்த ஆசை, பேராசை, அஞ்ஞான வலையில் சிக்குவதில்லை.
न संसारोत्पन्नं चरितमनुपश्यामि कुशलं
विपाकः पुण्यानां जनयति भयं मे विमृशतः ।
महद्भिः पुण्यौघैश्चिरपरिगृहीताश्च विषया
महान्तो जायन्ते व्यसनमिव दातुं विषयिणाम् ॥ ११॥
ந ஸம்ஸாரோத்பந்நம் சரிதமநுபஶ்யாமி குஶலம்
விபாக: புண்யாநாம் ஜநயதி ப⁴யம் மே விம்ருʼஶத: ।
மஹத்³பி:⁴ புண்யௌகை⁴ஶ்சிரபரிக்³ருʼஹீதாஶ்ச விஷயா
மஹாந்தோ ஜாயந்தே வ்யஸநமிவ தா³தும் விஷயிணாம் ॥ 11 ॥
ஒன்றா இரண்டா, கணக்கில்லாத எத்தனை பிறவிகள் எடுத்தும் மனம் திருந்தவில்லையே. திரும்பத் திரும்ப செய்ததையே செய்து கொண்டு உலக ஈர்ப்புகளில் சிக்கி துன்புறுவதே வாடிக்கையாகி விட்டதே. விஷய அனுபவங்களின் பிடியில் சிக்கி அதிலிருந்து மீள்வதற்கு முயற்சியே எடுப்பதில்லை. மேலும் மேலும் நீரைக்குடித்து நீந்தத் தெரியாதவன் ஆற்றில் மூழ்குவது போல் தான் உலக வாதனைகளில் அமிழ்கிறோம்.
தொடரும்
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Friday, February 26, 2021
VAIRAGYA SATHAKAM
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment