இன்று ஒரு மறக்க முடியாத நாள். J.K. SIVAN
இன்று சத்ரபதி சிவாஜி மஹாராஜா பிறந்தநாள். இந்த பாரத தேசத்தில் ஒவ்வொரு இந்தியனும் நன்றியுடன் இரு கை கூப்பி வணங்க வேண்டிய ஒரு சுத்த சுதந்திர ஸ்வராஜ்ய பாதுகாவலன் சிவாஜி மஹாராஜா. தைரியத்தின் மறு பெயர்.
தெற்கு பிராந்தியங்களில் அவ்வளவாக முஸ்லிம்களின் அக்கிரமம் அதிகம் இல்லாமல் இருந்ததற்கு காரண புருஷன் சத்ரபதி சிவாஜி மஹாராஜா.மராத்தா ராஜ்ஜியம் தோன்ற காரண கர்த்தா. கிட்டத்தட்ட 390 வருஷங்கள் முந்தி இருந்தாலும் இஸ்லாமியரை தெற்கே வராமல் தடுத்து நிறுத்திய புண்யசாலி அவர். அதற்காக நாம் என்றும் கடமைப் பட்டிருக்கிறோம். அவருக்கு போதிய உதவி,இருந்திருந்தால் முகலாய ஆட்சியையே கவிழ்த்திருப்பார். நமக்கு அதிர்ஷ்டமில்லை.
ஜீஜாபாய் தனக்கு ஒரு புத்ரன் வேண்டும் என்று சக்தி தேவி சிவை யை வேண்டி பெற்ற அருந்தவ புதவனுக்கு அந்த தெய்வத்தின் பெயரையே சிவாஜி என்று வைத்தாள். பலமிகுந்த முகலாய சாம்ராஜ்யத்தை வென்று வீழ்த்தி ஹிந்து மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்க முயன்றவர். பெண்களுக்கு மரியாதை, மதிப்பு பாதுகாப்பு அளிக்க பாடு பட்டவர்.
அப்பா ஷாஜி காலத்தில் இருந்த 2000 போர்வீரர்களை ஐந்து மடங்கு அதிகமாக 10000 வீரர்களாக வளர்த்த போர்வீரன்.
தெற்கே வேலூரிலும் செஞ்சியிலும் கூட அடில்ஷா கோட்டைகளை தகர்த்தவர் சிவாஜி. 52 வயதிலேயே மறைந்ததால் ஒரு சிறந்த தலைவனை ஹிந்து தேசம் இழந்தது. துக்காராம் மகாராஜ், சமர்த்த ராமதாஸ் சிஷ்யராக பக்தியில் திளைத்தவர். சென்னை காளிகாம்பாள் கோவிலில் சிவாஜி மகாராஜாவின் வீரவாள் வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?
சிவாஜியை நினைத்து ஒரு புஷ்பம் பாண்டுரங்கனுக்கு , அவன் படம் இல்லையென்றால் கிருஷ்ணனுக்கு சமர்ப்பியுங்கள். ஒரு சுத்த மஹா வீர ஹிந்து மன்னனின் ஆசி பெறுவோம்.
No comments:
Post a Comment