Sunday, February 28, 2021

SONGS TO HEAR

 



    பாடல்களும்  பகவானும்.   J K SIVAN 


மனதில்  என்றும்  நீங்காமல் நிறைந்து இருக்கும் சில  முருகன் பாடல்களை இன்று  பகிர்கிறேன்.  பேச்சுக்கும் பாட்டுக்கும்  உள்ள வித்யாசம் என்ன?  பாடல்  செவிக்கும்  உள்ளத்துக்கும் இனிமையை தரும் சக்தி கொண்டது.  


ரிஷிகள் முனிவர்கள், மஹான்கள்  பாடல்களுக்கு இதற்காகவே  பொருத்தமான  ராகங்களை அமைத்து பாடி இருக்கிறார்கள். இயற்கையே இசைக்கு அடிமை.  இறைவனும் அவ்வாறே.  ஒளவையை, அருணகிரியை, கம்பரை,  கண்ணதாசனை, புரந்தரதாசர், தியாகராஜர் தீக்ஷிதர்  பாரதியார், சைவ சமய குறவர்கள்,  ஆழ்வார்கள்   போன்றவர்களை தன்னைப்  பாட  வைத்தவன் KBS ,  MSS , TMS  சீர்காழி,  எண்ணற்ற பல சங்கீத வித்வான்களைப்  பாட வைத்தான்.  ஏன்? ஏன்?  நம்மை அவற்றை செவிமடுத்து  நம் மனம்   வெயிலில் வைத்த ஐஸ் கட்டி மாதிரி அவன்  பால்  உருகி  ஈர்க்கபட வேண்டும்.   அதில்  நாம்  தவறினால்  அரிய  சந்தர்ப்பத்தை கோட்டை விட்டவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.  எத்தனையோ பாடல்கள் தமிழில் இருந்தாலும்  முருகன் பாடல்கள் அதிகம் என்பதற்கு காரணம்   முருகனை தமிழ்க்கடவுளாக நாம்  கொண்டாடுவதால் தான்.  வெற்றி வேல் வீரவேல்  எங்கும்  ஒலிப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்.   சில அற்புத பாடல்களை கேட்டு அனுபவிக்க ஒரு லிஸ்ட் தருகிறேன் கேட்கிறீர்களா.

TMS  பாடிய  முருகன்  பாட்டுகளில்  சில  மட்டும்:  
மண்ணானாலும்,  கற்பனை என்றாலும், முருகா நீ வரவேண்டும், உள்ளம் உருகுதய்யா, முத்தைத்தரு, ஓராறுமுகமும், இன்னும் எத்தனையோ...  நீங்களே  யு ட்யூபில்  தேடி எடுத்து  ரசிக்கலாம்.

சீர்காழி.கோவிந்தராஜன்  -  முழு முதல் கடவுள் விநாயகன் மேல் பாடியவை அதே போல்  அற்புதமானவை. 
அந்த குரலுக்கு தனி ஈர்ப்பு உண்டு. பாவத்தோடு  ராகம் லயித்து  கணீரென்று பாடும் போது கண்முன் கணபதி தோன்றுவான்.   ஒரு சில  பேர்கள் மட்டும் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு மற்ற பாடல்களை நீங்களே தேடிப்  பிடிப்பீர்கள். 

கணபதியே வருவாய்,  விநாயகனே, இன்னும் எத்தனையோ.   முருகன் மீதும் நிறைய  பாடல்கள் இருக்கிறது.
மதுரை சோமு:  ஆஹா  சொல்லவே வேண்டாம்.  எல்லாமே அற்புதம்.  உள்ளம்  உருக, கண்ணீர் பெறுக  கம்மல் குரலில் பாடும் சாரீரம் நெஞ்சை அள்ளும் 

சும்மா  நான் முருகனை, விநாயகனை தொட்டேன். அவ்வளவு தான். கண்ணன், நாராயணன், பாண்டுரங்கன், அம்பாள், சிவன்  என்று ஒவ்வொரு தெய்வம் மேலும் பாடல்களை ஆராய புறப்பட்டால்  அருமையாகத்தான்  இருக்கும்  காலம் போதாதே. என்ன செய்வது.  இவர்கள் அத்தனை பேர் மேலும் பாடிய   திரை இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீத வித்துவான்கள் பெயர்கள்  அவர்கள் பாடிய  பாடல்களை  லிஸ்ட்  எடுக்க முயன்றால்  எனக்கு  இன்னும் ரெண்டு மூன்று பிறவியாவது  குறைந்தது   நிச்சயம்  வேண்டும் என்பதால்  சும்மா கோடி காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.    வழி காட்டுகிறேன். நடப்பது, ஓடுவது உங்கள் முயற்சி, விருப்பம்.  ஒழிந்த நேரத்தில் பட்டி மன்றத்துக்கு  செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம்  இதற்கு  தந்து இந்த அற்புதத்தை  அனுபவிக்கிறேன்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...