Saturday, February 6, 2021

KING JANAKA

 


ராஜாவும் சன்யாசியும்.. J K SIVAN

தாமரை இலைத்தண்ணீராக ராஜ்ய பரிபாலனம் செய்தவர் மிதிலாபுரி மன்னர் ஜனகர் . மிகச் சிறந்த ராஜ யோகி . இல்லா விட்டால் ராமருக்கு மாமனாராக முடியுமா? வேத உபநிஷத்துகளின் சாரமாக வாழ்ந்த உதாரண புருஷர்.

ஒருநாள் அவரது அரண்மனைக்கு ஒரு இளம் சாது வந்தான். ஜனகர் எல்லோருடனும் வழக்கமான ராஜ்ய விவகாரம் விஷயங்கள், ராஜ ரீக நிர்வாக வேலைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டு நாள் முழுதும் பல வேலைக ளைக் கவனித்துக்கொண்டு எல்லோருக்கும் கட்டளைகள் இட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்தான்.

''யார் இவரைப்போய் , ஒரு பெரிய ஞானி என்று சொன்னது? இவரைப் பார்த்தால் இவர் செய்யும் காரியங்களை கவனித்தால் இவர் ஆன்மீக வாதி யோ ஞானியோ இல்லை என்று தான் தெரிகிறது. உலக விவகாரங்களில் முழுகியிருப்பவர் தான் என்று தெரிகிறது'' என்று மனதில் எடை போட் டான் இளம் சாது.

ஜனகர் இவனைக் கவனித்து விட்டார். அவன் மனதில் ஓடும் எண்ணங்களை அவருக்கு ஆத்ம ஞானத்தால் தெரிந்தது. சற்று நேரத்தில் ஒரு ஆளை விட்டு அந்த சாதுவை அருகே அழைத்தார்.

''யாரப்பா நீ, உன்னைப்பார்த்தால் ஏதோ பெரிய குற்றம் செய்தவனாக தெரிகிறது. சந்நியாசி
உடையில், வேஷத்தில் வந்திருக்கும் உனக்கு கடவுள் மேல் எண்ணம் செல்ல வில்லையே. குறை கண்டுபிடிக்கும் பழக்கம் உன்னை ஆட்டுவிடுகிறது என்று எண்ணுகிறேன். உனக்கு தக்க தண்டனை கொடுக்கப் போகி றேன்.. இன்றிலிருந்து ஏழாவது நாள் காலை உனக்கு தூக்கு தண்டனை. ''

ஜனகர் சிறை அதிகாரியை கூப்பிட்டு ''இவனைச் சிறையில் அடைத்து, தினமும் காய்கறிகளில் உப்பு இல்லாமல், இனிப்புகளில் மிளகாய், பாயசத்தில் புளி சேர்த்து கொடுங்கள் அது தான் அவன் ஆகாரம். ஏழாம் நாள் காலை இங்கே அழைத்து வாருங்கள். தண்டனை நிறைவேற்றுவோம்.'' காவலர்கள் அவ்வாறே செய்தார்கள்.

சாது நடுங்கிவிட்டான். பாதி உயிர் போய் விட்டது. ஆறே நாளில் அடையாளம் தெரியா மல் இளைத்து விட்டான். தூக்கம் போய் விட்டது. கழுத்தில் தூக்குக் கயிறு, அதில் அவன் உடல் தொங்குவது போன்ற காட்சி திரும்ப திரும்ப அவனை பயமு றுத்தியது..

ஏழாம் நாள் காலை சிறையிலிருந்து அவனை வெளியே ஜனகரிடம் கொண்டுவந்தபோது அவன் முக்கால் வாசி செத்த பிணம். நிற்கவே முடிய வில்லை. நடுக்கம். பிராண பயம். மயங்கி மயங்கி விழுந்தான். அவனை ஆஸ்வாஸப் படுத்தி பாலில் உப்பு போட்டு குடிக்க வைத் தார் கள். ''இன்னும் எத்தனை நிமிஷம் என் வாழ்வு. தூக்கு மரம் இங்கே தான் பக்கத்தில் எங்கோ இருக்கிறதோ?"'என்று தான் எண்ணினான்.

''ஹே சாது, இப்போது நீ குடித்த பால் ருசி எப்படி இருந்தது? ருசியாக இருந்ததா? சர்க்கரை சரியான அளவில் இனிப்பாக இருந்ததா? இந்த ஏழு நாளும் வாய்க்கு ருசியாக தானே சாப்பிட் டாய். வயிறு நிறைய தந்தார்களா? ஆகாரம் எப்படி இருந்தது?

"மஹாராஜா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த ஏழு நாளும் என்ன சாப்பிட்டேன் என்றே தெரியாது. எந்த ஆகார ருசியும் அறியேன். இப்போது கொடுத்த பாலும் என்ன ருசி என்று தெரியாது. என் மனம் பூரா தூக்குமரம், தூக்குக்கயிறு பற்றி தான் எண்ணம். எங்கும் தூக்குமரமாக கண்ணில் படுகிறது. இந்த லக்ஷணத்தில் காய்கறியோ, உணவோ, ருசியோ எதுவும் தெரியவில்லை.

ஓஹோ, அப்படியா. இளஞ்சாதுவே, உன் மனம் எப்படி தூக்கு மேடை, தூக்கு கயிறு ஒன்றிலேயே ஈடுபட்டு மற்ற எதுவும் நீ தன்னிச்சை

யாக செய்ய வில்லையோ , அதே கதை தான் என்னு டை யதும். என் மனம் பிரம்மத்தில் ஸ்திரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தாலும், உடலால் ஒரு அரசனின் கடமை யை ராஜ்ய விவகாரங்களில் எந்த தனி சுய ஈடுபாடுமின்றி கடமையாக செய்து வருகி றேன். இதை நிதித்யாஸம் என்பார்கள்.

எல்லாவற்றிலும் ஈடுபடுவேன் எதுவும் எதிலும் எந்த பற்றுமின்றி. நான் இந்த உலகில், உலகி யலில் இருந்தும் இல்லாதவன். இப்போது புரிகிறதா என் மனோநிலை உனக்கு. உன் ஒருவார அனுபவமே உனக்கு உணர்த்துமே . இனிமேல் யாரையும் விஷயம் தெரியாமல் குறை சொல்லாதே. எடைபோடாதே. உன் குறிக் கோளில் மனதை செலுத்து. உலக விவகாரங் களில் ஈடுபடும் போது அதில் ஒட்டிக் கொள் ளாதே. கவனமாக இரு நல்லதையே பார். நிறைய தியானம் செய். மற்றவர்கள் மனதை அறிந்து கொள். அதற்கு தக்கவாறு உன் செயல் கள் அமையட்டும். உலகத்துக்கு, உலகில் உழை, அதோடு ஒன்றி விடாதே. விடுபட்டே நில். இது தான் என் அனுபவம். நீ இப்போது போகலாம்.''

இளம் சாது வாயடைத்து நின்றான். ஜனகர் மேல் பெரு மதிப்பும் மரியாதையும் அவனை யறியா மலேயே வளர்ந்தது. எப்பேர்ப்பட்ட ராஜ ரிஷி, ப்ரம்ம நிஷ்டர் அவர் என்று உணர்ந்தான். பல் வேறு அலுவல்களுக் கிடையிலும் சம நிலையில் இருப்பதைக் கண்டு அதிசயித்தான். சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினான்.
தர்பார் சபையில் ஜனகர் அமர்ந்திருக்கும் போது ஒரு சேவகன் வந்து ,''மஹாராஜா, மிதிலையில் உங்கள் அரண்மனை மாளிகை பற்றி எரிகிறது. எல்லா பொருள்களும் எரிந்து விட்டன '' என்றான்.

''என் செல்வம் அழிவற்றது. நான் எதுவும் எனக்கென்றில்லாதவன் எனக்கு எது, ஏது இழப்பு? என்கிறார் ஆத்ம ஞானி, கர்மயோகி ஜனகர். அவரிடம் எந்த படபடப்பும், நிலை குலைவும் இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...