ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
18. தனிப்பெருங்கருணை
ஏன் எப்போது பார்த்தாலும் கிருஷ்ணன் கிருஷ்ணன் என்று ஸ்மரணை? இப்படி ஒரு கேள்வி யாராவது கேட்டால் அதற்கு ஒரு விடை இருக்கிறது.
''க்ரிஷ்ணனது மஹிமை, அவனது மேன்மை.''
அவன் யார்?
''க்ரிஷ்ணனது மஹிமை, அவனது மேன்மை.''
அவன் யார்?
சர்வ லோக நாயகன். சகலருக்கும் தந்தை, எவ்வுயிர்க்கும் அதிபதி, பக்தர்களின் அகம்பாவம், கர்வம் எல்லாம் கூட சிரித்துக்கொண்டே ஏற்பவன்.
எப்படியா ?
அதற்கு உடனே நான் ஒரு பழங்கதை சொன்னால் தானே புரியும்.

ஒரு கோபக்கார, சுய கவுரவம், அகந்தை பிடித்த முனிவர் பிருகு என்று எல்லோரும் அறிந்த பெயர். திரிமூர்த்திகளும் அவர் பக்தியை அறிவர். எனினும் ப்ரம்மாவை , சிவனை தூஷித்து அவமதித்து பிருகு நடந்து கொண்டதை இருவருமே எதிர்த்தார்கள். கோபம் கொண்டார்கள் முனிவர் மீது.
பிருகு அதோடு விட்டால் பரவாயில்லையே.
நேராக மஹா விஷ்ணுவிடம் வந்தார். அவரை வரவேற்று கவுரவம் தந்து உபசரிக்கவில்லை என கோபம் கொண்டு காலைத்தூக்கி படேர் என்று விஷ்ணுவின் மார்பில் உதைத்தார். சிவன் ப்ரம்மா மாதிரியா கிருஷ்ணா நீ, விஷ்ணுவாக இருந்தும் கோபம் கொண்டாயா? இல்லையே.
நீ என்ன செய்தாய் தெரியுமா?
''முனிவரே, என்ன விருட்டென்று காலைத் தூக்கி என் மார்பில் உதைத்து விட்டீர்களே. கால் வலிக்குமே உங்க ளுக்கு?'' என்று சொல்லி அந்த காலை பிடித்து விட்டு, தடவிக்கொடுத்தவனப்பா நீ.,. வேறு எந்த தெய்வம் பக்தனுக்காக இப்படி தன்னைத் தாழ்த்திக்கொண்டு விட்டுக் கொடுக்கும்?.
தன்னலமின்றி அன்போடு பழகுவதில் நேசிப்பதில் கண்ணா நீ ஒருவனே உனக்கு உதாரணம்.
ராமனாக நீ வந்தபோதும் இப்படித்தான், கொடிய ராக்ஷஸன், பயங்கர அருவருக்கத்தக்க, தனக்கு தீங்கு செய்த, ராவணனின் தம்பி என்ற போதிலும் விபீஷணனை நெஞ்சார அணைத்து மார்புற கட்டிக்கொண்டாய். அவனுக்கும் உன் தம்பி பரதனுக்கும் அப்போது உனக்கு வித்யாசமே தெரியவில்லையே?
உன்னைக் கொல்ல வந்த கொடிய ராக்ஷஸி பூதகிக்கும் மோக்ஷம் கொடுத்தாய் கிருஷ்ணா.!
இப்போது தெரிகிறதா ஏன் இந்த கிழவன் ஸுர்தாஸ் உன்னை ஈடிணையற்ற கருணா மூர்த்தியாக தெய்வ மாக ஏற்றுக்கொண்டு உபாசிக்கிறேன்!'' என்கிறார் அற்புத கவிஞர் கிருஷ்ண பக்தர் ஸுர் தாஸ் .
அவர் பாடிய இந்த பாடல் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாக கீழே தந்திருக்கிறேன். ஹிந்தி பாட்டு கிடைக்கவில்லை. இருந்தால் அர்த்தத்தோடு யாரவது எனக்கு நிறைய அனுப்புங்கள் தமிழில் திருப்பித் தருகிறேன் இது மாதிரி. என்னால் வேறு ஒன்றும் முடியாதே.
See the greatness of Krishna;
though Lord, Father and Master of the world
he willingly bears the arrogance of his close devotees
Shiva and Brahma were roaring mad
when Bhrigu kicked them,
but he gently pressed the sage's foot
when it struck his breast!'
Which of the gods
can emulate him?
He befriends selflessly;
Embracing his foe Ravana's brother, Vibhisana' as lovingly as his own
brother Bharata, sending to heaven the demoness Putana
who tried to kill him'-
Such is Sura's Lord,
the selfless Giver.

No comments:
Post a Comment