கீதாஞ்சலி --- J K SIVAN
தாகூர்
15. கூப்பிடு நான் பாடுகிறேன் !
15. I am here to sing thee songs.
In this hall of thine I have a corner seat.
In thy world I have no work to do;
my useless life can only break out in tunes without a purpose.
When the hour strikes for thy silent worship
at the dark temple of midnight,
command me, my master, to stand before thee to sing.
When in the morning air the golden harp is tuned,
honour me, commanding my presence.
நான் மனம் குளிர்ந்து இருக்கிறேன் கிருஷ்ணா. எப்போது எல்லாம் என் மனம் குளிர்கிறதோ அப்போதெல் லாம் நீ என்னுள்ளே இருக்கிறாய் என புரிந்து கொண்டேன். சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தால் அல்லவோ பாட்டு தானாக வரும்? குளிக்கும் போது நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதால் தான் குளியலறையில் அபாரமாக அபஸ்வர ஆலாபனை பண்ணுகிறோம் ? எப்போதோ கேட்டதில் அரை பாட்டு கால் பாட்டு எல்லாம் ஞாபகம் வருகிறதல்லவா ? கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் உடல் மேலே பட்டாலே, உறவு கொண்டாலே, இப்படி ஆனந்த சங்கீதம் என்றால் குளிர்ச்சி உள்ளே சென்று மனம் பூரா நிரம்பிவிட்டால்??
அதுவும் கிருஷ்ணா, நீ தான் அந்த குளிர்ச்சி என்று புரியும்போது! . அதனால் தான் நான் உனைப் பாட வந்தேன். இந்த பிரபஞ்சமே உன்னுடைய தர்பார் ஹால். உன் அத்தாணி மண்டபம். அதில் எங்கோ ஒரு மூலையில் நான் உட்கார சிறிது இடமுண்டு. நீ தான் சகல தொழில்களும் புரிபவன். புரியப்பண்ணுகிறவன். எனக்கு என்ன வேலை இருக்கிறது. தினமும் பணிவேன் உன் காலைப் பிடிக்க. அது ஒன்றே எனக்கு வேலை.
பாடுவேன் எனக்கு தெரிந்த விதமாக. நான் எதைப் பாடுகிறேனோ எப்படிப்பாடுகிறேனோ அது தான் எனக்கு ராகம்.
நடு நிசி தான் மௌனமாக நான் உன்னைப் பணியும் நேரம். எங்கும் நிசப்தத்தில் என் மனம் முழுதும் உன் மேல் இருக்கும்போது நீ என்ன செய்யவேண்டும் தெரியுமா, என் எஜமானே?
''வாடா, வா, வந்து என் எதிரே நில், பாடு '' என்று எனக்கு கட்டளை இட வேண்டும். ஜம்மென்று உரக்க என் இஷ்டத்துக்கு காச் மூச் என்று பாடுவேன்.
காலை பொன் வெயில் வானில் உலவ வரும்போது, பக்ஷிகள் பாடுமே அந்த நேரம் எனக்கு பிடிக்கும். எனக்கும் அப்போது பாடத் தோன்றுமே. அப்போது என்னையும் நீ கௌரவிக்க வேண்டும். எப்படி?
''வாடா பையா வா, எங்கே நழுவுகிறாய், என் முன்னே வா.. வந்து என்னைப் பாடு '' என்று அழைக்க வேண்டும். எப்படி இந்த ஐடியா.. சரியா கிருஷ்ணா? கூப்பிடு. காத்திருக்கிறேன்.

No comments:
Post a Comment