பத்திரகிரியார் புலம்பல் --- நங்கநல்லூர் J K SIVAN
''எப்போது என்று சொல்?''
பத்திரகிரியார் புலம்பல் எனும் ரெண்டடி தத்துவ பாடல்களை அவ்வப்போது படித்து அசை போடுங்கள். அதில் கிடைக்கும் அனுபவம் அற்புதமானது. மனதில் பதிந்து விட்டால் பல தொல்லைகளுக்கு நிவாரணி அது.
பத்திரகிரியார் புலம்பல் எனும் ரெண்டடி தத்துவ பாடல்களை அவ்வப்போது படித்து அசை போடுங்கள். அதில் கிடைக்கும் அனுபவம் அற்புதமானது. மனதில் பதிந்து விட்டால் பல தொல்லைகளுக்கு நிவாரணி அது.
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?
இந்த பஞ்ச இந்திரியங்களின் தாக்கத்தில் காம மோஹ மத ... இத்யாதிகளான போதைப்பொருள்களில் மயங்கி வாடி என் காலம் நிறைய வீணாகிவிட்டதே, இனியாவது இறைவா உன் நினைவாகிய பஞ்சாமிர்தம் கொஞ்சம் சாப்பிட்டு ஆனந்தம் பெரும் காலம் எனக்கு உண்டா?
கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்?
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?
இந்த பஞ்ச இந்திரியங்களின் தாக்கத்தில் காம மோஹ மத ... இத்யாதிகளான போதைப்பொருள்களில் மயங்கி வாடி என் காலம் நிறைய வீணாகிவிட்டதே, இனியாவது இறைவா உன் நினைவாகிய பஞ்சாமிர்தம் கொஞ்சம் சாப்பிட்டு ஆனந்தம் பெரும் காலம் எனக்கு உண்டா?
கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்?
பொழுது விடிந்தால் தினமும் இந்த பாழாய்ப் போன உடலுக்கு தீனி போட எவர் பின்னாலாவது போகிறேன், அதே பிழைப்பாக போகிவிட்டதே, அதை விடுத்து உன்னை நாடி ஞான இன்பம், மோக்ஷம் பெற உன் பின்னால் எப்போது போவேன்?
ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்?
நான் ஒரு விளையாட்டு பொம்மை. என்னை இந்த உலகம் ஆட்டுவித்தபடி ஆடுகிறேன். அந்த ஆட்டுவிக்கும் கயிறு அறுந்து போகுமுன்பு உன்னை அறியும் நாள் என்று வரும்?
நவசூத்திர வீட்டை நான் என்று அலையாமல்
சிவசூத்திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?
இந்த உடம்பு ஒரு ஒன்பது வாசல் வீடு. இதை அழியக்கூடியது என்று உணர்ந்து அதன் போக்கில் அலையாமல் சிவ பெருமானே உன் அஞ்செழுத்தை ஓம் நமசிவாய என்று வாய் மணக்க எப்போது, என்று, சொல்வேன்?
பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக்
கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்?
இந்த உடல் அழியும் .இது புழுக்கள் நெளியும் மலக்கூடு. இதை உணர்ந்து வெறுத்து நான் உன் திருவடியே துணை என்று அதை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு உய்வது எப்போது?
சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம்?
என்னைக்கேட்காமலேயே என்னுடம்பில் வளரும் ஒரு உறுப்பு தொந்தி. துருத்தி போல் பருத்த அதை
காட்டிலும் மேட்டிலும் சுமந்து கொண்டு அது வளர்வதற்கு உணவு வேளா வேளை தேடி நிரப்பி அலைகி றேனே. இந்த அழியும் அழுகும் நாற்றமுடைய தேகத்தை தொலைத்து விட்டு பரமா, உன்னை எப்போது அடைவேன்?
ஆசை வலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசை மணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?
ஆசை வலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசை மணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?
ஆசை என்பது ஒரு மாய வலை. அதில் சிக்கிக் கொண்டவன் கதி தூண்டிலில் அகப்பட்ட மீன் சமாச்சாரம். எப்போது அப்பா நான் இதிலிருந்து தப்பி உனது ஆலய மணி ஓசையில் மனம் இணைந்து ஆலய தீபத்தின் அருள் ஜோதியில் கலந்து என்னை இழக்கும் காலம் வரும்?
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பாரரிய ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்?
சிவனே, நீ நான்கு வேதங்களின் உட்பொருள் எனினும் அதை நன்றாக அறிந்தவர்களால் கூட எளிதில் அறிய முடியாத பரமாத்மா, இந்த காண வொண்ணா அற்புதமான உன்னை தரிசிப்பது எப்போது?''
புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
முடியவில்லை அய்யா, ஐயய்யோ ,பல பிறவிகள் எடுத்து வாடுகிறேன். புல் போன்ற அற்ப தாவரங்களாக, மிருகமாக, பறவையாக, நீரில் நிலத்தில் என பல பல பிறவிகள் எடுத்தது போதும் அப்பா . எப்போது என் மாயை இருள் அகலுமோ?)
No comments:
Post a Comment