சகலகலா வல்ல சாணக்கியன். J K SIVAN
கிங் மேக்கர் KING MAKER என்கிறோமே கௌடி ல்யன் EMPEROR MAKER . விஷ்ணு குப்தன், கௌடில் யன் என்ற பெயர்கள் மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப் படுபவன். எது எப்படி இருந்தாலும் சாணக் யன் சொன்னதாக சில வார்த்தைகள் நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது புலப்படுகிறது.
சமஸ்க்ரித வார்த்தைகளை கொடுக்க வில்லை. கருத்துகளை மட்டும் தமிழில் சுருக்கி தருகிறேன். அது போதுமே சாணக்கியனை புரிந்து கொள்ள.
* மூங்கில் மரங்களே ஏன் உங்களுக்கு இலைகள் இல்லை? யாருடைய குற்றம் இது
* ராவெல்லாம் சுற்றும் ஆந்தையே, நீ ஏன் பகலில் குருடானாய்? சூரியன் மேல் கோபம் வந்தது யார் குற்றம்?
* வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழாதது யார் குற்றம்?*
*எது எப்போது எவ்வளவு எங்கே, எங்கிருந்து நமக்கு கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.
*பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்ய வில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங் களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவ னின் திருத்தலங்களுக்கு செல்லவில் லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.
* கெட்ட மனிதன் நல்ல மனிதனுடன் சேர்ந்து நல்லவனாகிறான். ஆனால் நல்ல மனிதன் கெடுவதில்லை. * மரங்களின் பூக்கள் விழுந்து பூமி வாசம் வீசும். பூமியின் வாசம் மலர்களில் வீசாது.
* நம் உடம்பு அழிந்து விடக்கூடியது. நாம் சேர்க்கும் பணம் நிலை இல்லாதது. ஆதலால் காலம் உள்ள போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள்.
* யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார் கள்.
*புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.
* வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
*முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.
* நாம் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை பற்றி கவலைப் படக்கூடாது, எதிர் காலத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி யோசிக்கக் கூடாது, நிகழ் காலமே நம் கைகளில் இருக்கிறது, லட்சியத்தை அடைய விரும்புபவன் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வான்.
*பந்த பாசமே அனைத்து துன்பத்திற்கு காரணம், ஒருவன் இன்பமாக வாழவேண்டுமானால் பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும்.
*அவன் ஒருவன் எதிர்காலத்தை சந்திக்க தயாராக இருக்கிறானோ, கிடைக்கும் சந்தர்ப் பத்தை சரியாக பயன் படுத்தி கொள் கிறா னோ அவன் எப்பொழும் மகிழ்ச்சியாக இருப்பான். வெறும் அதிஷ்டத்தை நம்புபவன் அழிந்து போவான்.
*ஒரு மன்னன் தவறு செய்தால், அவன் கீழ் உள்ளவர்கள் தவறு செய்வார்கள். " யதா ராஜா ததா பிரஜா". மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. ஆதலால் மன்னன் ஒவ்வொரு செயலையும் நன்கு ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.
*ஆன்மிக வழியில் வாழாதவன் வாழ்தாலும் இறந்தவன் ஆவான். ஆன்மிக வழியில் வாழ்தவன் இறந்தாலும் உயிருள்ளவன் ஆவான்.
*எவன் ஒருவன் தான் விரும்பும் அனைத் தையும் அடைந்தவன் ஆவான்?. அனைத்தும் இறைவன் கையில் உள்ளது. ஆதலால் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
*பசுக்கன்று ஆயிரம் பசுக்கூட்டத்திலும் தன் தாயை அடையாளம் கண்டு அதன் பின் தொடரும் . அது போல் கெட்டவன் கெட்ட நண்பர்களுடனும், நல்லவன் நல்ல நண்பர் களுடன் செல்கிறான்.
*இந்த உலகில் மூன்று ரத்தினங்கள் உள்ளது , உணவு, நீர், இன்சொல். வெறும் கற்களான முத்து, பவளம் போன்றவற்றை முட்டாள்களே ரத்தினம் என்று கூறுவர்.
*மனிதன் அவன் செய்யும் காரியங்களின் பலனையே அடைகிறான். நல்லதும் கெட்டதும் நம் செயல்கள் மூலமே விளைகிறது. முன் செய்த பாவ புண்ணிய பலன்களை நாம் இன்று அனுபவிக்கிறோம்.
*. வறுமை, வியாதி, துக்கம், சிறைவாசம், மேலும் நமக்கு வரும் துன்பங்கள் இவை யாவும் நாம் செய்த பாவம் என்னும் மரத்தில் விளைந்த பலன்கள் ஆகும்.
*செல்வம், நண்பன், மனைவி, அரசாட்சி ஆகியவைகளை இழந்தால் திரும்ப பெறலாம், ஆனால் ஆரோக்கி யத்தை இழந்தால் திரும்ப பெறுவது இல்லை.
*பல புல் புதராக ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம்.
*நீரில் சிந்தும் எண்ணை, சிறிய குணமுள்ள மனிதனுக்கு தெரிய வரும் ரகசியம், தயாள குணமுடையவனுக்கு கிடைக்கும் செல்வம், புத்திசாலியிடம் சேரும் கல்வி இவை அனைத்தும் அதன் குணத்திருக்கேர்ப்ப பரவி விடும்.
*வேடன் மானைப் பிடிக்க இனிமையாக பாடுவான், அதுபோல் ஒரு காரியத்தை நிறை வேற்ற வேண்டுமானால் இனிமையாக பேச வேண்டாம்.
*நெருப்பு, நீர், அரச குடும்பத்தில் பிறந்த வர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், முட்டாள், பாம்பு, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* பண்டிதன் என்பவன் சூழ்நிலை அறிந்து பேசுவான், தன் சக்திக்கு தகுந்து நல்ல காரியங்கள் செய்வான், மேலும் தன் கோவத்தை அளவையும் அறிவான்.
சாணக்கியனைப் பற்றிச் சொல்ல நிறைய விஷயம் இருக்கிறது. அற்புதமான ஒரு மனிதன் சாணக்கியன். மீண்டும் அவனோடு சந்திப்போம்.
No comments:
Post a Comment