Saturday, February 20, 2021

SURDAS

 ஸூர்தாஸ்     --    J K    SIVAN  



  17. துயிலெழு
 
வெயில் கொஞ்சம் கொஞ்சமாக  கிழக்கிலிருந்து  உயரே எழும்புகிறது.  கிருஷ்ணனைத் துயிலெழுப்புகிறார் ஸூர்தாசர்.  நாள்  முழுதும் விளையாடி விட்டு நன்றாகத் தூங்கிய கிருஷ்ணா,  எழுந்திரடா குழந்தே, 
பொழுது  புலர்ந்துவிட்டதே. கிழக்கு வானில் சூரியன் சிவப்பாக ஒளி வீசி கொஞ்சம் கொஞ்சமாக தங்க மயமாக உலகை மாற்று கிறான் பார்க்கவில்லையா.

ஆஹா,   கண் விழித்தாகி விட்டதா. என்ன அழகடா  ராஜா. உன் விழிகள்!. விசாலமான, ஆழ்ந்து நோக்கும் தாமரை மலரை ஒத்த காதல் சின்னமா?, கடல் போன்ற  ஏரியா? உன் மயக்கும் கருவிழியா? தேன்  வண்டா? 
இருவிழிகளும்    உண்மையில் இரு அழகிய சிறிய  அன்னப் பறவைகளா?,

காண்போரைக் கவர்ந்து மயங்கச் செய்யும் காமதேவன் மன்மதனே வெட்கும் அ
ளவிற்கு மந்திரசக்தி
கொண்ட காந்த முகனே, எழுந்திரு, இதோ கிழக்கு வெளுத்து விட்டது. கீழ்வானம்  சிவப்பாக வர்ணம்
பூசிக் கொண்டுவிட்டதே.

சூர்ய தேவா வா!   உன் வரவு நல்வரவாகட்டும். சுப்ரபாதம். உயிர்கள் களிக்கட்டும். மங்கிய இருள்  கொஞ்சம்
கொஞ்சமாக மறையட்டும்.  செக்கர்வானம் கடலில்  மூழ்கட்டும். இருள் விடைபெறட்டும்.  இளங்காலைக்கு 
வழிவிடட்டும்..

சந்திரா, நன்றிடா உனக்கு.  போய்  ஓய்வெடு.   இரவெல்லாம்  குளிர்ந்த அமுதநிலா ஒளியை எங்கும் போர்த்திய வனே. ஒய்வு அவசியம் உனக்கு. போ. ஓய்வெடு.  இரவு வந்தால் நீ  மீண்டும் வர காத்திருக்கிறேன்.

வீடுகளில் எல்லாம் எண்ணெய் தீபங்கள் இரவெல்லாம் எரிந்து இதோ அவற்றுக்கு நன்றி கூறி அணைத்து உத்தரவு  கொடுக்கப்போகிறோம்.  விளைக்கை  அணைக்கிறோம் என்று சொல்லும் பழக்கம் இல்லை. உத்தரவு கொடுப்பது தான்  எங்கள்  வார்த்தை.   
அவை அளித்த சுடரொளி இனி இரவில் மட்டும் தானே
மீண்டும் தேவை.

வானில் பளிச்சிடும் தாரகைகளே,  கண்சிமிட்டும் விண்மீன்களே, போய் வாருங்கள். கைகூப்பி விடை அளிக்கிறோம்.
ஞானம் ஒளி வீசி அஞ்ஞானத்தை அகற்றுவதுபோல்,
அறிவு சுடர் விட்டு அறியாமை அகல்வதுபோல்,
வைராக்ய மனம் புலன்களை அடக்கி ஆள்வது போல்,
மனதில் நம்பிக்கை சுடர் விரிந்து பயத்தை, அவ நம்பிக்கையை, சந்தேக இருளை ஒட்டி ஒளி மயமாவது போல்,
கிருஷ்ணா, உன் கண் திறந்து எங்களை உன் வசமாக்கி அருள்வாய் அப்பனே.
''குக்கூ'' என்றுஅழகிய தேன் குரல் காதில் வந்து பாய்கிறதா கிருஷ்ணா உனக்கு?
அந்தக்  குரலில் தான் எத்தனை மதுரமான பாசம், நேசம், சந்தோஷம் கண்ணா!. அழகிய தெய்வீக குழந்தாய்!
கிருஷ்ணா, என் வாழ்வின் நம்பிக்கை நக்ஷத்திரமே. எனது சங்க நிதி பத்மநிதியே, அள்ள அள்ள
குறையாத
செல்வமே, செல்லப்பிள்ளையே, செல்வப்பிள்ளையே! இதோ வந்துவிட்டார்கள் கூட்டம் கூட்டமாக கவிஞர்கள், பக்தி மேலீட்டுடன் புலவர்கள், ஞானிகள், ரிஷிகள், வாத்தியக்காரர்கள், முனிவர்கள், பக்தர்கள், முக்தர்கள் எல்லோருமே. கோஷ ம்எழுப்புகிறார்களே, காதில் விழுகிறதா உனக்குகிருஷ்ணா
''ஜெய விஜயீபவ'' ஜெய விஜயீபவ'' ஸ்ரீகிருஷ்ணா.!!!

ஸூர் தாஸர்  கண்ணற்றவர்அல்ல. நாம் தான். என்ன கற்பனை வளம் பார்த்தீர்களா அவர் சொல்லில்?. மனதில் உள்ள கிருஷ்ண ப்ரேமைக்கு தான் அளவுண்டா??.

Krishna awake, for the day has dawned:
large, deep and lotus-like,
your eyes are as in the love-shaped lake
a pair of swans even a million Kamadevas cannot vie
with the bewitching beauty of your face;
the sun rises in the east,
a crimson ball the night is going
and the moonlight pales
the lamps turn dim
and the stars fade out
as though the bright radiance of wisdom's rays
dispels the pleasures that the senses tire,
and the light of hope chases away
the murky darkness of despair and doubt.

Listen, the birds sing
aloud with glee O sweet child,
life of my life,
my sole wealth,
O darling boy,
bards and minstrels
sing your praises,
saying 'victory! victory!'

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...