Thursday, February 25, 2021

CHETTIYAR STYLE MARRIAGE

 


ஒரு செட்டியார் வீட்டு கல்யாணம். 2       -          நங்கநல்லூர் J K   SIVAN 
''செட்டியோ கெட்டியோ''  என்பார்கள்.  பண விஷயத்தில் அவர்கள்  கறார் என்பதால்  அவர்கள்  நிச்சயம்   கருமிகள் என்று அர்த்த மில்லை.  எதற்கு,  எப்படி,  எவ்வளவு,  செலவு செய்யவேண்டுமோ அதற்கு அவ்வளவு தான் செலவிடவேண்டும் என்ற கட்டுப்பாடுடன்   ஆற்றில் போட்டாலும்  அளந்து போடுப வர்கள்.   காசின் அருமை அதை செலவழிக் கும்போது தான் தெரியும் என்று உணர்ந்த வர்கள். அவர்கள் மனதில்  தான தர்ம  காரியங் களுக்கு  நிறைய  இடமும், பையில் பணமும்  இருந்தது. தமிழைக்  குழந்தை போல் வளர்த்த வர்கள். கலா ரசிகர்கள்,  வள்ளல்கள் நிறைந்த ஒரு சமூகம். எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், குளங்கள், சத்திரங்கள், அறக் கட்டளைகள்... அடேயப்பா.... லிஸ்ட்  ரொம்ப  பெரிசு..
அழகப்ப செட்டியார் வீட்டு கல்யாணத்தில் இருக்கிறோம்.  நேற்று கல்யாணத்துக்கு முதல்நாள் வைபவம் அனுபவித்தோம். கோட்டையூர்  திமிலோகப்பட்டது.  எங்கும்  மகிழ்ச்சியான முகங்கள். ஊரெங்கும் இந்த கல்யாண வைபவ பேச்சு ஒன்று தான்.  இன்று கல்யாண நாள். 10.9.1943.  நேற்று இரவு எவரும் தூங்கவில்லை. முதல்நாள் நிகழ்ச்சிகளை  பற்றி பேசி, பாடி  அலசிக்கொண்டிருந்தார்கள்.
விடியற்காலையிலிருந்து  எங்கும்  கல்யாண  காரிய,  ஏற்பாடு,   வேகம்.  காப்பி  கூஜா கூஜா வாக எங்கும்  செல்கிறது.  பித்தளை டம்ளர்கள்  பளபளவென்று  பில்டர் காப்பி  மணக்க அவரவர் கையில்.
  காலை எங்கும் பட்டுச்சேலை, ஜரிகை வேஷ்டி கள் சலசலக்க  குறுக்கும் நெடுக்கும்  அலைகி றார்கள். விடிகாலையிலேயே எல்லோரும் குளித்து விட்டு  வரிசை வரிசையாக  பந்திப் பாயில் உட்கார்ந்து விட்டார்கள். நாற்காலி மேஜை சாப்பாடு ஒரு சிலருக்கு,  சப்பணம் கொட்டி  உட்கார முடியாதவர்களுக்கு மட்டும் தான்.  ஜமுக்காளம் விரித்து  வாழை இலை களில் சுடச்சுட செட்டிநாட்டு  காலை சிற்றுண்டி உணவு அயிட்டங்கள் விழ விழ  காலியாகி மறைந்து கொண்டே போகிறது. எங்கும் ஆவி மணக்கிறது. 
எட்டு மணியாகிவிட்டது. வெற்றிலை சீவல், புகையிலை  வாயை நிரப்ப  இதோ   பாருங் கள்   மண்டபத் தில்  எத்தனை பேர்  நெருக்க மாக   அமர்ந்திருக்கிறார்கள்.   எதிரே  மேடை யில்   திருவீழிமிழலை சகோதரர்கள்   ஆந்தோ ளிகா வில்  ராக சுதாரச என்று  சுர  வர்ண ஜாலங்களை எழுப்புகிறார்கள்.  நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை  தலையாட்டி ய வாறே  ஆந்தோளிகாவில் மூழ்கிவிட    அவர் கை விரல்கள் தொப்பி மாட்டிக் கொண்டு  மத்தளத்தில் நர்த்தனமாடுகிறது.   பெரிய நாயகி சமேத  ஐந்நூற்றிஸ்வரர் கோவில் பிரசாதம்  அனைவருக்கும் வந்து விநியோக மாகிவிட்டது. நெற்றியில் வெண்ணீறு பளிச் சிட   அநேக  மகிழ்ச்சி நிறைந்த முகங்கள்  .
கைக்கடிகாரம் கட்டுபவர்கள் அதிகம்  கிடை யாது.  சில பெரிய மனிதர்கள்   பாக்கெட்டில் தொங்கும் சங்கிலி தொடுத்த கடிகாரம், அல்லது கோட்டையூர் அரண்மனையில்  தொங்கும்  தாத்தா  டாங் டாங்  சுவர் கடிகாரம் தான் மணி காட்டும்.   எல்லோர் கண்களிலும்  எப்போது ஒன்பது  மணி அடிக்கும்   என்ற எதிர்பார்ப்பு.   ஒன்பது  மணிக்கு வருபவரைப்  பார்க்க,   கேட்க,   இப்போதே இடம் பிடித்து அமர்ந்தவர்கள் ஜாஸ்தி.  
வந்தாரய்யா  GNB . கிராப் தலை, காதில் வைரகடுக்கன் மினுக்க  நெற்றியில் குங்கு மம் வெள்ளை முழுக்கை சட்டை அதன் மேல் பட்டை ஜரிகை


அங்கவஸ்த்ர ஆணழகன். கந்தர்வ குரலோன்.  அற்புதமான  பக்க வாத்ய சிகாமணிகள் திருவாங்கூர் சமஸ்தான வித்துவான்  TS   ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், அதே சமஸ்தான மிருதங்க சக்ரவர்த்தி  பாலக்காடு மணி அய்யரும்  கஞ்சிரா  மற்றும்  மிருதங்கம்  ரெண்டிலுமே சமர்த்தரான  பழனி சுப்புடு என்று பெயர் பெற்ற  சுப்ரமணிய பிள்ளை.  முத்தாய்ப்பு வைத்ததுபோல்  வில்வாத்ரி அய்யர்  கடம், மோர்சிங் வாசிக்க வழக்கம்போல் மன்னார் குடி நடேச பிள்ளை... அருமையான   ஜமா சேர,  கணீரென்று  ஹம்ஸத்வனி  களைகட்டி விட்டது,  வாதாபி கணபதி யிலிருந்தே  ஜிலுஜிலு  தொடர்ந்து   சங்கீத வர்ண ஜால வேடிக்கை.   என்ன அழகான சரீரம் அதை மிஞ்சும் ஆனந்த சாரீரம்.  பிர்காக்கள் முத்து முத்தாக  உதிர்கிறதா.  விரிபோனி, அடுத்து  பைரவி  ஆலாபனை.  ஆஹா  நாளெல்லாம் தொடராதா? என்ற  எதிர்பார்ப்பு.  செட்டியார் அடிக்கடி  கச்சேரி பக்கம் வந்து கொஞ்சம் நின்று விட்டு  உள்ளே  கல்யாண வேளையில்  அரக்க பரக்க  ஓடிக்கொண்டிருந்தார்.  
ரெண்டரை மணி நேர  சங்கீத அலை ஓலிக்க,   பேரிரைச்சல் ஒன்று   திடீரென்று  துவங்கியது.  ''எல்லோரும் அமைதியாக உட்காரவேண்டும்''   என்று செட்டியார்  சிப்பந்திகள் விடாமல் கேட்டு க் கொண்டதற் கிணங்கிசபையில்  சிரிப்பொலி அடக்கி வாசிக்கப்பட்டது.  யார்  எது காரணம்?  தெரிந்துகொள்ள மேடையில் பாருங்கள்.  
சிரித்த முகமாக   ''என்னை  யாரும் கேலி செய்ய முடியாதே?  ராமன்,  கோபு, கோபாலன், கணபதி , நந்தனார் எல்லோரையும் கேலியாக  கீமன்,   கீபு , கீபாலன் , கிணபதி,  கிந்தனார் என்பீங்க...என்னை எப்படி கேலி செய்வீங்க?  என்  பேரே  ''கிஷ்ணன்''   தானே!!  என்ற  சிந்தனை சிற்பிம்  நகைச்சுவை சாம்ராஜ்ய முடிசூடா மன்னன்,   வாரிக்கொடுத்த  வள்ளல் பெருமான், சென்னையில் சிலையாகி, சாலைகளாகி நிற்கும்    NSK  என்று அழியாப் புகழ் பெற்ற   என்.எஸ். கிருஷ்ணன்  பார்ட்டி.  கிந்தனார்  காலக்ஷேபம் ஆரம்பித்து விட்டது.  என்ன குரல், என்ன சங்கீத ஞானம். ஹாஸ்ய வெடிகள்....
நேரம் போனதே தெரியவில்லையே.  மணி  ஒன்று ஆகி  நிகழ்ச்சி முடிந்து விட்டது.   இதோ  வரிசை  வரிசையாக பந்தி பறிமாறல். எத்தனை சுவையான அயிட்டங்களுண்டோ அத்தனையும் இலையில். 
''வேணும் என்கிறதை கேட்டு வீணாக்காமல் வயிறு நிறைய சாப்பிடணும்''  செட்டியார் சிப்பந்திகள்  அடிக்கடி  உபச்சாரம் செய்ய  விருந்து பந்தி பந்தியாக  தொடர்கிறது. நாமும் சாப்பிட்டு செஷன் SESSION  முடிந்து அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம்..

செட்டியார் வீட்டு கல்யாணம் தொடரும்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...