சோகம் தந்த ராகம் (ஞானப்பான) -- J.K. SIVAN
വിശ്വനാഥന്റെ മൂലപ്രകൃതിതാന്
പ്രത്യക്ഷേണ വിളങ്ങുന്നു ഭൂമിയായ്
അവനീതല പാലനത്തിന്നല്ലോ
വതാരങ്ങളും പലതോര്ക്കുമ്പോള്
അതുകൊണ്ടു വിശേഷിച്ചും ഭൂലോകം
പതിന്നാലിലുമുത്തമമെന്നല്ലോ
വേദവാദികളായ മുനികളും
വേദവും ബഹുമാനിച്ചു ചൊല്ലുന്നു.
ലവണാംബുധി മദ്ധ്യേ വിളങ്ങുന്ന
ജംബുദ്വീപൊരു യോജനലക്ഷവും
സപ്തദ്വീപുകളുണ്ടതിലെത്രയും
ഉത്തമമെന്നു വാഴ്ത്തുന്നു പിന്നെയും.
Viswanathante moola prakrithi thaan,
Prathyakshena vilangunnu bhoomiyayi,
Avani thala paalanithinnallo ,
Avatharangalum palathorkkumbol,
Athu kondu viseshichum Bhoolokam,
Pathinalilum uthamam ennallo,
Veda vadhikalaya munikalum,
Vedavum bahumamichhu chollunnu.
Lavanambhudhi madhye vilangunna,
Jambhu dweeporu yojana lakshavum,
Saptha dweepukal adhil undethrayum,
Uttamamennu vazhthunnu pinneyum.
பூந்தானம் நம்பூதிரி ஒரு ரகசியத்தை போட்டு உடைக்கிறார். விஸ்வம் எனும் இந்த ப்ரபஞ்சத்தை உருவாக்கிய விஸ்வநாதன் எனும் பரம சிவன், தானே இங்கே வந்து ஒளிவீசியவாறு பூமாதேவியாக காட்சியளிக்கிறான். இந்த பூமியில் பிறக்கும் சகல உயிர்களையும் ரக்ஷிக்க, காப்பாற்ற. பகவான் எல்லா அவதாரங்கள் எடுத்ததும் இந்த பூமியிலே தான். அது இந்த பூமியின் விசேஷம். நமது அதிர்ஷ்டம். இந்த ஈரேழு பதினாலு லோகங்களிலும் இந்த பூலோகம் போல் ஒன்றை காண முடியாது. இதை ஓயாமல் எல்லா வேதங்களும், ரிஷிகளும் கற்றறிந்த ஞானிகளும் விடாமல் சொல்லி வருகிறார்கள். நாம் தான் இங்கே பிறக்க எத்தனை பாக்யம் செய்திருக்கிறோம் என்று இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
ഭൂപദ്മത്തിനു കര്ണ്ണികയായിട്ടു
ഭൂധരേന്ദ്രനതില്ലല്ലോ നില്ക്കുന്നു
ഇതിലൊമ്പതു ഖണ്ടങ്ങളുണ്ടല്ലോ
അതിലുത്തമം ഭാരതഭൂതലം
Bhoo padmathinnu karnigayayittu,
Bhoo dharendran adil allo nilkunnu,
Ithil ombadhu gandangal undallo,
Athil uttamam bharatha bhoo thalam
கண்ணுக்கெட்டும் வரை நாலா பக்கமும் ஓயாமல் ஒழியாமல் அலைகளோடு ஓவென்ற சப்தத்துடன் உப்பு கரிக்கும் சமுத்திரம். அதன் நடுவே ஒரு அழகான பசுமை படைத்த பெரும் நிலப்பரப்பு அதன் பெயர் ஜம்புத்வீபம். பூமி. 100,000 யோஜனை விஸ்தீரணம். (1 யோஜனை = 5 - 8 மைல் பரப்பு கிட்டத்தட்ட ),இது போன்ற ஏழு தீவுகளில் இந்த பூமி ஒன்றே மிகப்பெரியது. புனிதமானதும் கூட.
സമ്മതരായ മാമുനിശ്രേഷ്ഠന്മാര്
കര്മ്മക്ഷേത്രമെന്നല്ലോ പറയുന്നു
Sammatharaya mamuni shreshtanmaar
Karma kshetramennallo parayunnu
கண்ணை மூடிக்கொண்டு இந்த பூமியை ஒரு தாமரையாக உருவப்படுத்திப்பார்த்தால் நடுவே உள்ள மொக்கு போன்றவன் தான் இந்த பூமி மண்டலத்து ராஜா. இந்த பூமியை ஒன்பது பாகமாக பிரித்து கண்டங்களாக பார்த்தால் அதில் எல்லாவற்றிலும் மிக அற்புதமாக கச்சிதமாக, புனிதமானது. ( சபாஷ் பூந்தானம் நம்பூதிரி !)
കര്മ്മബീജമതീന്നു മുളയ്ക്കേണ്ടു
ബ്രഹ്മലോകത്തിരിക്കുന്നവര്കള്ക്കും.
Karma bheejamatheennu mulaykkendu,
Brahma lokathil irikkunnavargalkkum,
பாரதம் கர்மபூமி. இதை எத்தனையோ மஹா புருஷர்கள், ரிஷிகள் முனிவர்கள், தீர்க்க தரிசனத்தோடு சொல்லியிருப்பதால் காரணம் இங்கே, இந்த கர்மக்ஷேத்ர த்தில் நமது பாபங்களை தொலைக்க வழி உண்டு.
കര്മ്മബീജം വരട്ടിക്കളഞ്ഞുടന്
ജന്മനാശം വരുത്തേണമെങ്കിലും
Karma bheejam varatti kalanjudan,
Janma nasam varuthanamengilum
நம்முடைய இந்த பாரத தேசத்தில் கர்மங்கள் பலனை அடைந்து தீர்க்கமுடியும். இந்த காரணத்துக்காக ப்ரம்ம லோக ஜீவன்களும், ஆத்மாக்களும் இங்கே தான் வந்து தீரவேண்டும். வினை தீர்க்க வேண்டும்.
ഭാരതമായ ഖണ്ടമൊഴിഞ്ഞുള്ള
പാരിലെങ്ങുമെളുതല്ല നിര്ണയം
Bharathamaya gHanda mozhinjhulla,
Paarilengumeluthalla nirnayam.
மோக்ஷம் தேடுவோர், கர்மங்களை ஒழிக்க இதைவிட்டால் வேறு மார்க்கமில்லை. பாரத தேசம் ஒன்றே கடைவழி.
No comments:
Post a Comment