வேமனா சொல்கிறார். J.K. SIVAN
தெலுங்கு புத்தாண்டு என்பதால் இன்று கொஞ்சம் தெலுங்குக்கார சித்தர் வேமனாவை ரசிப்போம்.
புத்தாண்டில் நிறைய பேர் ஏதாவது புதிதாக ஒரு பிரதிஞை எடுத்துக்கொள்வார்கள். இன்றிலிருந்து மனைவியிடம் அன்பாக இருக்கிறேன்.என்று. ரெண்டு நிமிஷம் கூட ஆகியிருக்காது எலியும் பூனையும் ஒன்றை ஒன்று விரட்டிக்கொண்டிருக்கும். சிகரெட் பிடிக்கமாட்டேன், சினிமா போக மாட்டேன். காலையில் சீக்கிரம் எழுந்து கோவிலுக்கு போவேன், டிவி வேண்டாம் இனிமே... புத்தகத்தில் படித்தபடி மனைவி சமைத்த சமையல் சரியில்லை என்றாலும் முக மலர்ச்சியுடன் உண்டு ''இதுபோல் சாப்பிட்டதே இல்லை என்று பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தையில் வாழ்த்துவேன்.''. இன்னும் எத்தனை எத்தனையோ.... ஆனால் இவை யாவும் பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம் போல் ஒன்றும் நிறைவேறுவதில்லை . வருஷங்கள் தான் வந்து போகும்.
நடுவில் எத்தனையோ வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அடி மனத்தில் வேமனாவை விட்டு விட்டு வந்தேனே இப்போது எங்கிருக்கிறாரோ, மீண்டும் அவரைத் தேடி கண்டுபிடித்து சில பொன் மொழிகளை சம்பாதிக்கவேண்டும் அதை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்ற அரிப்பு இருந்து கொண்டே இருந்தது. சரி கொஞ்சம் ப்ரீ FREE ஆனவுடன் புதுவருஷம் வரட்டுமே, ஆரம்பிப்போம் என்று ஒரு பிரதிஞை எடுத்துக்கொண்டேன்..ஆகவே முயற்சி வீண் போகவில்லை. தெலுங்கு புத்தாண்டே வந்துவிட்டது. இதுவரை புத்தாண்டு சபதம் காற்றில் பறக்க வில்லை. இதோ அவர் மீண்டும் நம்மிடம் சொல்லும் விஷயங்கள்: வழக்கம் போல் -- விலைவாசி உயர்ந்து விட்ட சமயத்தில் கொஞ்சம், ஐந்து ஐந்தாகவாவது தரட்டுமா?!
கரும்பு பற்றி அவர் இனிப்பாக சொல்வதிலிருந்தே தொடங்குவோம்.
''அல்பபுத்திவானி கதிகாரமிச்சின
தொட்டவாரினெல்ல தொலககொட்டு
செப்பு தினெடி குக்க சிறகு தீப்பெருகுனா
விச்வதாபி ராம வினுர வேமா !
அல்பனுக்கு பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டு அதிகாரம் கொடுத்தால் அவனிடமிருந்து என்ன கிடைக்கும். தன போன்றோர்க்கே நிழல் கொடுப்பான். அறிவீர் சிறந்தவர்களின் அனுபவஸ்தர்களை விரட்டி யடிப்பான். இது எதுபோல தெரியுமா? கரும்பை பக்கத்தில் பார்த்தாலும் அதை ஒதுக்கி கிழிந்த செருப்பை கண்டதும் சந்தோஷமாக கடித்து மெல்லும் சொறிநாயின் தன்மை போல.
அவன் வேறென்ன செய்வான் என்பதையும் வேமனா சொல்கிறார்:
அல்படைனவானி கைதிக பாக்யமுகலக
தொட்டவாரி திட்டி தொலக கொட்டு
அல்பபுத்தி வாடதிகுலனெருகுனா
விச்வதாபி ராம வினுர வேமா !
உயர்ந்த படிப்பு, பொறுப்பு, ஞானம் இல்லாத ஒரு அல்பன் திடீர் பணக்காரனாகிறான். உடனே கர்வம் மண்டைக்கேறிவிடுகிறது. சுலபத்தில் அனைவரையும் பகைத்துக் கொள்கிறான். பணத்தினால் எடைபோட்டு மிகுந்த அறிவாளிகளையும் ஞானிகளையுமே ஏசுவான். அவமதிப்பான் . அவனைப்புகழும் அல்பர்களின் சகவாசமே அவனுக்கு சுகமளிக்கும். விரைவில் அழிவான்.
அலனு புடக புட்டி நப்புடே க்ஷயமவுனு
கலனு காஞ்சு லக்ஷ்மி கனுடலேது
இலனு போகபாக்ய மீ தீரே கானுரு
விச்வதாபி ராம வினுர வேமா !
கடலைப்பார்க்கிறோம் . பெரிய அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக எகிறி எழும்புகிறது. அவற்றின் மகுடமாக வெள்ளை நுரை. பார்க்குமிடமெங்கும் தோன்றும் அந்த வெண்ணிற நுரை எங்கே போச்சு? அலை திரும்ப சாதுவாக கடலை நோக்கி ஓடும் முன்பே நுரை காணாமல் போகிறது. கனவில் கார், பங்களா, ப்ளேன் எல்லாம் வாங்குகிறோம். கன்மூடித்தூங்கும்பொது கனவு காணும்போது தான் அந்த ஐஸ்வர்யம். கண்ணைத் திறந்தால் பழைய ஏழ்மை நிலை தான். கனவில் கண்ட செல்வம் எங்கே போச்சு. எனவே தான் கிடைத்தபோது செல்வத்தை நாமும் உபயோகித்து மற்றோர்க்கும் அளிப்பது. இலையேல் அது நுரை, கனவில் வந்த கார் தான்!!
அனக னனக ராக மதி சயிலுச்சுனுண்டு
தினக தினக வேமுதீய நுண்டு
சாதனமுன பனுலு சமக்கூறு தரலோன
விச்வதாபி ராம வினுர வேமா !
பாடு பாடிக்கொண்டே இரு. அப்பத்தான் உனக்கு ராகம் பாடவரும். கசப்பான வேப்பிலையைக் கூட கொஞ்சம் கொஞ்சமாக விடாமல் சாப்பிட்டுக்கொண்டே வா. பிறகு சாப்பிட அது பழகிவிடும் மட்டுமல்ல இனிக்கவும் ஆரம்பிக்கும். இது எதுக்காக சொல்கிறார் வேமனா தெரியுமா? என்ன கஷ்டமான காரியமாக இருந்தாலும் விடாமல் செய்து வந்தால் அது எளிதாகிவிடும். த்யானம், ஜபம், எல்லாம் இதுபோல் தான். சாதகம் தான் மனதில் லட்சியமாக இருக்கவேண்டும் என்கிறாரோ?அனுபுகாணி சோட நதிக்குள மனராது

கொஞ்சமாயின நதியு கொதுவகாது.
கொண்ட யத்தமந்து கொஞ்சமை உண்டதா
விச்வதாபி ராம வினுர வேமா !
சந்தர்ப்பம் சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசாதே. இத்தகைய இடத்தில் அறிமுகப்படுத்தாததால் மகான்களின் பெருமை ஒன்றும் குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் அங்கே பேசலாமே. ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. சிறு கண்ணாடித்துண்டு என்பதால் மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார்.
வேமனாவை தொடர்ந்து பிடித்து மேலும் சில விஷயானுபவம் அவ்வப்போது பெறுவோம்.

No comments:
Post a Comment