Thursday, March 1, 2018

NEETHI SATHAKAM 13

ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:

                சுபாஷிதம்  13   J.K. SIVAN

सिंहश्शिशुरपि निपतति मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां न खलु वयस्तेजसो हेतुः॥

Simhashshishurapi nipatati madamalinakapolabhittishu gajeshu
Prakritiriyam sattwavataam na khalu vayastejaso hetuh 1.36

பெரிய சிங்கம் தான்  யானையை எதிர்த்து வென்று கொன்று பசியாறும் என்பதில்லை.  சிங்கக்குட்டியும் அவ்வாறு தான். வீரமும் கம்பீரமும் கொண்டவன் பயமற்றவன். வயதிற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

जातिर्यातु रसातलं गुणगणास्तस्याप्यधो गच्छतां
शीलं शैलतटात्पतत्वभिजनो संदह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रमाशुनिपतत्वर्थोऽस्तु नः केवलं
येनैकेन विना गुणास्तृणलवप्रायास्समस्ता इमे ॥

Jaatiryaatu rasaatalam gunaganastasyaapyadho gachchhataam
Sheelam shailatataatpatatwabhijanaah sandahyataam vahninaa
Shourye vairini vajramaashu nipatatwarthostu na kevalam
Yenaikena vinaa gunaastrinalavapraayaah samastaah ime 1.38

ஐயா புண்யவான்களே. ஜாதியை, மதத்தை வைத்தே  பிழைத்து வயிறு வளர்ப்பவர்கள்.  அதெல்லாம் ஒழியட்டும். பாதாளத்தில் அழுந்தட்டும் என்று சொல்பவர்கள் சொல்லட்டுமே.  அதே போல்  நல்ல, உயர்ந்தகுணங்கள், தன்மைகள் ஆகியவையும் அதோடு சேர்ந்து இன்னும் ஆழத்தில் மறையட்டும்.  நற்குணமா  அது எதற்கு. அதுவும் தொலையட்டும் சார்.
 சொந்தம் பந்தம் நட்பு எல்லாவற்றையும் குண்டுக்கட்டாக கட்டி தீயில் இடவேண்டாமா? மலையிலிருந்து உருட்டி தள்ளவேண்டாமா? எதிரிகளிடம் வீரமா?  அது எதற்கு. பல்லை இளித்து  கூழைக் கும்பிடு போதுமே.  சுயநலம், அதற்கு பணம் பணம் பணம் அது ஒன்றே போதுமே. பணம் இல்லாவிட்டால் மற்ற நல்ல குணங்கள் விஷயங்கள் எல்லாமே  புல்லுக் கட்டு.  புல்  மூட்டை.
ரொம்ப வெறுத்துப் போய்  ராஜா பர்த்ரு ஹரி இதைச் சொல்கிறான் இல்லையா?

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान् गुणज्ञः।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वेगुणाः काञ्चनमाश्रयन्ति॥

Yasyaasti vittam sa narah kuleenah sa panditah sa shrutavaan gunajnah
Sa eva vaktaa sa cha darshaneeyah, sarve gunaah kaanchanamaashrayanti 1.40

பணம் ஒருவனிடம் சேர்ந்து விட்டால், ஆஹா   இவனல்லவோ இந்திரன், சந்திரன் என்கிறார்களே. நல்ல ராஜ குடும்பம் அவன் என்பார்கள். ஆஹா எவ்வளவு கற்றவர், நல்ல குணங்கள் உள்ளவர் என்று புகழ்வார்கள். எது பேசினாலும் கை தட்டல் தான்.ஆணழகன். கம்பீர சிகாமணி.  நான் அடுக்கடுக்காக சொன்ன  குணாதிசயங்கள் அவனிடம் இல்லையென்றாலும் பணம் அதெல்லாம் அவனுக்கு கொண்டுவந்து சேர்க்குமே .

रे रे चातक सावधानमनसा मित्र क्षणं श्रूयताम्
अम्भोदा बहवो वसन्ति गगने सर्वे‌உपि नैतादृशाः ।
केचिद्वृष्टिभिरार्द्रयन्ति वसुधां गर्जन्ति केचिद्वृथा
यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वचः ॥ 1.51 ॥

re re cātaka sāvadhānamanasā mitra kṣaṇaṃ śrūyatām
ambhodā bahavo vasanti gagane sarve‌உpi naitādṛśāḥ |
kecidvṛṣṭibhirārdrayanti vasudhāṃ garjanti kecidvṛthā
yaṃ yaṃ paśyasi tasya tasya purato mā brūhi dīnaṃ vacaḥ || 1.51 ||
என்னருமை  சாதக பக்ஷியே, நான் சொல்வதை உன்னிப்பாக கேள். மேலே பார். எவ்வளவு மேகக்கூட்டங்கள். ஒன்று போல் ஒன்றா இருக்கிறது. உருவம், வண்ணம், அளவு  வெவ்வேறாக காணவில்லையா?  சிலது நிறைய ஜலத்தை பூமிமேல் பொழிகிறது.  சிலது  வெத்து  மிரட்டல் போல  இடியை மட்டும்    டும்டும் என்று இடித்து விட்டு செல்கிறது  மழை துளியும் இல்லை.   எதற்கு சொல்கிறேன் என்றால். வெறும் பேச்சை வைத்து ஒருவனை பிரபு தயாளன்  என்று தீர்மானித்து அவனிடம் யாசகம் கோரக்கூடாது. பார்த்தவன் எல்லாம் வள்ளல், தயாள தான சீலன் இல்லையே.
தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...