Thursday, March 15, 2018

AINDHAM VEDHAM 16




ஐந்தாம் வேதம் J.K. SIVAN
16. பராசரர் கொடுத்த பரிசு

இனி வருவதெல்லாம் மஹா பாரதத்தின் ஆதி பர்வம் என்ற பெரிய பாகத்தில் ஆதி வம்சவதரண பர்வம் என்ற பகுதியிலிருந்து. தலைகாணி தலைகாணியாக இருக்கக்கூடிய புஸ்தகம் மஹாபாரதம். இப்போது அதைக்கண்டாலே எல்லோரும் ஓடிவிடுவார்கள். இதைப் படிக்க இந்த ஜென்மத்தில் நேரம் இல்லை என்று.
நான் எடுத்துக்கொண்ட மூலத்தில் 12 பாகங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 1000-1500 பக்கங்கள். சமஸ்க்ரித ஸ்லோகங்க அர்த்தங்கள். வேதவியாஸருக்கு நிறைய ஞாபக சக்தியும் நேரமும் கூட இருந்திருக்கிறது.

+++++
ஜனமேஜயன் அரண்மனைக்கு வேத வியாசர் வருகிறார். அவரிடம் ''குருநாதா, எனது வம்சாவளி பற்றியும் பாண்டவர் கௌரவர்கள் பற்றிய சகல விவரங்களும் அறிய ரொம்பவே ஆவலாக இருக்கிறது. நீங்கள் எனக்கு உரைக்க வேண்டும்'' என்று வேண்டுகிறான். அவர் தனது சிஷ்யர் வைசம்பாயனரிடம் அவ்வாறே அதையெல்லாம் அந்த மன்னனுக்கு எடுத்துச் சொல்ல உத்தரவிடுகிறார்.

அவரும் அவ்வாறே மஹா பாரதத்தை ஜனமேஜயனுக்கு எடுத்துச் சொல்கிறார்:

''உபரிசரன் என்று வசு குலத்தில் ஒரு ராஜா. ரொம்ப ஆசார சீலன். பக்திமான். வேட்டையாட பிடிக்கும். சேடி என்கிற நாட்டை வென்றான். சில காலத்தில் எல்லாம் துறந்து காட்டில் தவம் செய்ய சென்றான். இந்திரன் அவனது சீலத்தை மெச்சி அவனுக்கு ஒரு மூங்கில் கொம்பைத் தந்தான். ராஜா அதை பூமியில் நட்டு இந்திரனை வழிபட்டான். அவன் வமிசத்தில் வந்தவர்கள் இந்திர வழிபாட்டில் இவ்வாறு மூங்கில் கழியை நடுவது வழக்கமானது. ராஜாவுக்கு 5 பிள்ளைகள். வ்ரிஹத்ரதன்,மஹரதன் ,ப்ரத்யக்ரஹன், குசம்வன், மாவெலன், யது என்பது அவர்கள் பெயர். இந்த பெயர்கள் அப்படித்தான் இருக்கும். வருஷம் ஐந்தாயிரத்துக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

உபரிச்சரன் இதற்கிடையில் ஒரு தேவ கன்னிகை மீன் வடிவில் பிறந்து சாப விமோசனத்துக்காக யமுனையில் காத்திருந்து இரு மனித குமாரர்களை பெற்று தேவலோகம் செல்ல காரணமாகிறான். அந்த மீன் வடிவான அப்சரஸ் இரட்டைக் குழந்தைகளைப் பெறுகிறாள். சாபம் தொலைந்தது. அவள் பெண் மீன் நாற்றம் கொண்டவளாகவே இருந்ததால் சத்யவதி என்ற பெயர் கொண்டபோதிலும் ''மத்ஸ்யகந்தி'' (மீனின் வாடை கொண்டவள்) என்றே அழைக்கப்பட்டாள் . இதால்அவள் மீனவர்களிடம் கொடுக்கப்பட்டு வளர்ந்தாள் அவள் வளர்ந்ததும் தனது வளர்ப்புத் தந்தைக்குதவியாக சிலசமயம் தானும் கங்கையில் படகோட்டுவாள்.

ஒருநாள் பராசரர் என்கிற ரிஷி அவள் படகில் யமுனையைக் கடக்கும்போது அவளது அழகில் தன்னை இழக்கிறார். தனது தவ வலிமையால் அவளிடமிருந்து வெளிப்பட்ட முடை நாற்றத்தை விலக்குகிறார் . அதற்கு பதிலாக ஒரு யோசனை தூரத்திலிருந்தே பரிமள கந்த வாசனை வீசும் மணமாக மாறி அவள் ''யோஜனகந்தா'', ''கந்தவதி'' ''சுகந்தி'' (வாச மிக்கவள்) என்று பெயர்கள் பெறுகிறாள். பராசரர் மூலம் மகப்பேறு அடைகிறாள். அந்த குழந்தை தான் த்வைபாயனர் எனும் வேத வியாசர்.

தேவ ரிஷியான அந்த குழந்தை வேத வியாசர் சத்யவதியிடம் '' தாயே, நீ விரும்பும் நேரத்தில் நான் உன் முன் தோன்றுவேன்'' என்று வாக்களித்துவிட்டு தேவலோகம் செல்கிறது. நதியில் ஒரு தீவுப் பிரதேசத்தில் பிறந்ததால் அக்குழந்தை ''த்வைபாயனர்'' (தீவில் பிறந்தவர்) என்ற நாமம் பெற்றது. வேதங்களைப் பகுத்து அவற்றின் சாரத்தை விவரித்து உரைத்ததால் வேத வியாசர் என்ற அடைமொழியும் பெற்றது.

வியாசர் சுமந்தர், ஜைமினி, தனது மகன் சுகர், பைலர், வைசம்பாயனர் போன்றோர்களை சிஷ்யர்க
ளாக ஏற்று உபதேசித்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...