Sunday, March 25, 2018

KUNTHI PRAYER

குந்தியின் பிரார்த்தனை J.K. SIVAN

இந்த கட்டுரையோடு ஸ்ரீமத் பாகவதத்தில் குந்தி தேவி கிருஷ்ணனுக்கு துவாரகை திரும்ப விடைகொடுப்பதோடு நிறைவு பெறுகிறது.

நமக்கு பிடித்தவர்கள் சிலநாளோ பல நாளோ நம்முடன் தங்கி இருந்து ஒரு நாள் காலையில் ''நான் ஊருக்கு போய்வரட்டுமா '' என்று விடை பெறும்போது நமக்கு துளியும் அவர்களைப் பிரிய மனம் இடம் கொடுப்பதில்லை. வாசல் வரை வந்து கண்கள் கலங்க, ''சரி '' என்று தலை ஆட்டும்போதும் ''இன்னும் கொஞ்சநாள் இங்கே இரேன்'' என்று வேண்டுகிறோம். குந்தி பல வருஷங்கள் தங்களது அனைத்து துன்பங்களிலும் கூடவே யிருந்து ஆபத்துக்களிலிருந்து மீட்ட கிருஷ்ணன் ''அப்போ, அத்தை நான் துவாரகைக்கு செல்லட்டுமா ?"' என்று கேட்கும்போது ''சரி போய் வா'' என்று நா கூசாமல் சொல்வாளா, சொல்லத்தான் முடியுமா?

கிருஷ்ணனை வாயார போற்றி அவன் செய்த உதவிகள், அவனது மஹிமை அனைத்தையும் நினைவு கூர்வது தான் இந்த குந்தியின் பிரார்த்தனை. வேத வியாசர் வெகு அற்புதமாக மகாபாரதத்தின் தொடர்ச்சியாக இந்த ஸ்ரீமத் பாகவதத்தில் இதை உணர்த்துகிறார்.

गोप्याददे त्वयि कृतागसि दाम तावद्या ते दशाश्रुकलिलाञ्जनासम्भ्रमाक्षम् ।
वक्रं निनीय भयभावनया स्थितस्य सा मां विमोहयति भीरपि यद्बभेति ॥१४॥ 8.31

gopy ādade tvayi kṛtāgasi dāma tāvad
yā te daśāśru-kalilāñjana-sambhramākṣam
vaktraṁ ninīya bhaya-bhāvanayā sthitasya
sā māṁ vimohayati bhīr api yad bibheti

ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு பழைய நினைவுகள் தொடர்ச்சியாக மனக்கண் முன் வருகிறதே. உன்னை ஒருநாள் யசோதை செய்தாள் என்று ஞாபகம் வருகிறதா? உன் விஷமம் தாங்கமுடியாமல் போய் விட்டது. எப்போதும் உன்னைப்பற்றி எல்லோருமே அவளிடம் புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தால் அவள் என்ன செய்வாள். எப்படி உன் விஷமத்தை குறைப்பது. அவளுக்கு தோன்றிய ஒரே யோசனை. உன்னை வெளியே விடாமல் எப்படி நிறுத்துவது. ஆம், ஒரே வழி உன்னை கட்டிப்போட வேண்டியது தான். ஒரு சிறு தாம்புக்கயிறு கண்ணில் பட்டது. .ஓஹோ. அதனால் தான் கண்ணினுள் சிறு தாம்போ!, ''வாடா இங்கே என்று உன்னை இழுத்து பிடித்து வயிற்றில் அதை கட்டி அதன் மறுமுனையை எதோடு கட்டுவது? கண்ணில் ஒரு உரல் தென்பட்டது. உன் வயிறும் உரலும் கயிறோடு இணைந்தன.

''இப்போ எப்படி வெளியே ஓடுவாய், ஒவ்வொருத்தர் வீட்டிலும் வெண்ணெய் திருடுவாய் என்று பார்க்கிறேன்?'' என்று உன்னைப்பார்த்த யசோதைக்கு நீ எப்படி தோன்றினாய்?

அழகிய மலர்ந்த கரு நிற காந்த முகம். அதில் பரந்த விரிந்த கண்கள். அவை இரண்டுமே முழுதும் கண்ணீரால் நிரம்பி பொங்கின. நீ வேதனையோடு செய்வதறியாது பரிதாபமாக அவளை பார்த்தாயே , உன்கண்களில் அவள் தீட்டிய மை கண்ணீரில் கரைந்து கலந்து கன்னத்தில் வழிந்ததே. பயம் உன் கண்களில் தெரிந்ததா? உனக்கு பயமா? இந்த காட்சியை அவள் கண்டாள் , நான் கேள்விப்பட்டேன். திகைத்தேன... பிரேமையால் அவள் கட்ட உட்பட்டவன். கட்டுண்ண பண்ணிய மாயன்.

केचिदाहुरजं जातं पुण्यश्लोकस्य कीर्तये ।
यदो: प्रियस्यान्ववाये मलयस्येव चन्दनम् ॥१५॥ 8.32

kecid āhur ajaṁ jātaṁ
puṇya-ślokasya kīrtaye
yadoḥ priyasyānvavāye
malayasyeva candanam

வேத வியாசர் மலய மலைகளில் இருக்கும் சந்தனமரங்கள், சந்தன கமகம வாசனை பற்றி சொல்கிறார்.
எதிலும் மற்றவர்கள் போல் ஜனிக்காத நாராயணன் ஒரு சிறந்த ராஜ குடும்பத்தை தேர்ந்தெடுத்து அதில் பிறக்கிறான். மஹாராஜா யது வை பக்தனாக பிடிக்கும் என்பதால் யது குல நந்தனாக அவதரித்தவன்
என்னென்னவோ மரங்கள் தோன்றும் மலய மலைச்சாரலில் அழகிய வாசமிகுந்த சந்தனமரமாக கிருஷ்ணன் பிறந்தான் என்று குந்தி சொல்வதாக எழுதுகிறார் வியாசர்.

अप्यद्य नस्त्वं स्वकृतेहित प्रभो जिहाससि स्वित्सुहृदो sनुजीविन: ।
येषां न चान्यद्भवत: पदाम्बुजात्परायणं राजसु योजितांहसाम् ॥२२ 8.37

apy adya nas tvaṁ sva-kṛtehita prabho
jihāsasi svit suhṛdo ’nujīvinaḥ
yeṣāṁ na cānyad bhavataḥ padāmbujāt
parāyaṇaṁ rājasu yojitāṁhasām
குந்திக்குள் உள்ளே பக்ஷி சொல்லிவிட்டது. இது தான் கடைசியாக அவள் கிருஷ்ணனை பார்க்கிறாள். இனி அவன் தரிசனம் கிடைக்கப்போவதில்லை. அவள் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் இவை:

''கிருஷ்ணா, என் தெய்வமே, உன் கடமை எல்லாம் முடிந்துவிட்டதா. அவ்வளவு தானா? இனி எங்களை பிரியப்போகிறாயா? நம் உறவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா, அந்த எண்ணத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லையே. எங்களை, பாண்டவர்களை விட்டு செல்லப்போகிறாயா? நாங்கள் உன்னையே அல்லவோ நம்பி வாழ்கிறோம். எங்கள் மூச்சே உன்னால் தான் எங்களுக்குள் செயல்படுகிறது. உன் கருணை ஒன்றே அல்லவோ எங்களை காக்கிறது. கிருஷ்ணா. நீயன்றி வேறு யார் உண்டு சொல் கிருஷ்ணா. காக்கும் தெய்வம் நீ ஒருவன் தானே. எங்களை சுற்றி இருந்த அத்தனை பேரும் விரோதிகளாகவே தானே இருந்தார்கள். நீ ஒருவன் அல்லவோ எங்களை அரவணைத்தவன். உன்னை எப்படி ''போய் வா மகனே போய்வா '' என்று சொல்வேன். அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடும்படியாகவா நீ எங்களுக்கு உதவியவன்
எனக்கு துன்பம் தொடரட்டும், துயரம் நீடிக்கட்டும், உன்னை அவ்வப்போது நினைப்பேன் உன் அருள் பார்வை என்மீது படுமே என்ற நம்பிக்கை. அதுவே எனக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம், அழியாத செல்வம்.

இந்த உலகத்தில் ஏன் கஷ்டம் எங்களுக்கு என்றால் உலகமே கஷ்டமயமானது. என்னதான் கஷ்டம் சூழ்ந்திருந்தாலும் ''கிருஷ்ணா'' என்ற உன் பெயருக்கு தான் எவ்வளவு சக்தி அப்பா!! அத்தனை துன்பங்களும் சூரியன் முன் பனித்துளி தான். ஹரே கிருஷ்ணா என்ற வார்த்தையே பெரிய தபோபல சக்தி அல்லவா?



கிருஷ்ணனுக்கு பிரியாவிடை தருகிறாள் குந்தி தேவி. கிருஷ்ணன் என்ற விஷ்ணுவின் அவதாரம் முடிவுக்கு வந்துவிட்ட நேரம் அது... ஆனால் கிருஷ்ணன் அவதாரம் முடிந்துவிட்டதா தவிர நம்முள் என்றும் கிருஷ்ணன் தொடர்கிறான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...