இனி கீதாஞ்சலி J.K. SIVAN நமது ஞாபக சக்தி இருக்கிறதே அபாரம். இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது கூட நினைவில் இல்லை. என்றோ வாழ்ந்த மகான்களை எப்போது நினைக்கப்போகிறோம். தாடிக்காரர்களில் சிலர் மோசமாக இருப்பவர்களும் உண்டு அருமையானவர்களும் உண்டு. பறவைகளில் குருவி ராஜாளி கருடன் இல்லையா அது போல். நான் சொல்லும் தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட, உடைக்க சொல்லாதவர். அமர காவியங்களை படைத்தவர். உலகம் புகழ்ந்த காவியக் கவியோகி ரவீந்த்ரநாத் தாகூர் (1861-1941). அப்போதே நோபல் பரிசு வாங்கியவர். 80 வயது வாழ்ந்த அவர் சாதித்தது எத்தனையோ யுகங்களுக்கு போதுமானது. குருதேவ் என்று எல்லோராலும் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி. நமது முண்டாசு கவிஞனுக்கும் காந்திஜிக்கும் ரொம்ப பிடித்தவர். அவர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம். சமீபத்தில் படித்தேன். ஆஹா அதை கொஞ்சம் அள்ளி வீசினால் என்ன என்று தோன்றியது. அவர் எழுதிய காபூல் காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர், போன்ற மனதைப் பிழியும் கதைகளை உங்களுக்கு ஏற்கனவே சுருக்கி தந்திருக்கிறேன். மீண்டும் அதை படிக்க ஆசியானால் இந்த என் முக நூல் குரூப்பில் இருப்பவர்கள் தேடி படிக்கலாம். அவசியமா ? பிஞ்சிலே பழுத்தவர் என்று தாகூரை சொல்லலாம். முதல் வங்காள மொழி கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில். கீதாஞ்சலி தாகூரின் அற்புதமான மனம் கவரும் எண்ணச் சிதறல். எல்லா மொழிகளும் எல்லோருக்கும் தெரியாது. வங்காளியில் படிக்க முடியாவிட்டாலும் மொழிபெயர்ப்பில் தெரிந்து கொண்டதை ரசிப்போம். தாகூர் குடும்பத்தில் பல கலைஞர்கள் கவிஞர்கள் போல் இருக்கிறது. கோகோந்த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத் தாகூர்கள்.பலே பலே. கீதாஞ்சலியை தாகூரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதை தான் அலசுகிறோம். Gitanjali: 1 Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill. தாகூருக்கு கிருஷ்ணன் ஞாபகம் வந்திருக்கிறதோ? எப்படி அவன் குழலிசை கீதத்தை நினைவிலிறுத்தி ஆரம்பிக்கிறார். கீதை தந்தவனுக்கு அஞ்சலி தான் கீதாஞ்சலியோ? யாராயிருந்தாலும் எந்த பாஷை பேசினாலும் கிருஷ்ணனை மறந்து இயற்கையையோ தெய்வத்தையோ நினைக்க வழி உண்டா? ''பகவானே, எனக்கு கடைசிகாலம் என்று ஒன்று இல்லை. நிரந்தரமாக்கி விட்டாய். அதில் உனக்கு எவ்வளவு சந்தோஷம். இந்த தேகம் எனும் மண் பாத்திரம் அடிக்கடி உடையும் காலியாகும் .ஆனால் நீ மறுபடியும் அதில் ஏதோ ஒரு உயிரை உள்ளே வைத்து நிரப்புபவன். மீண்டும் புது வாழ்க்கை. !! அடேயப்பா, கிருஷ்ணா, நீ எப்படியப்பா, இந்த சாதாரண நாணல் மூங்கில் குழாயில் ஒரு தெய்வீக சங்கீதத்தை கொடுத்து காடு மலை, நதி பள்ளத்தாக்கு என்று எங்கும் உன் மூச்சுக்காற்றை செலுத்தி உயிர்ப்பிக்கிறாய். ஒவ்வொரு ஒலியும் உயிரோட்டம் நிறைந்த ஒரு புது நாதம். ஜீவ கானம் . எல்லையற்ற நிரந்தர அமர இன்னிசை. உன் மூச்சுக்காற்று மட்டுமா. உன் தெய்வீக கரகக் கரங்கள் தாங்கி விரல்கள் அசைந்து அந்த சாஸ்வத சங்கீதம் என் மேல் காற்றில் படும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை! என் நெஞ்சத்திற்கு சொல்லும் சக்தி இல்லை. வார்த்தைகள் மொழிகள் மீறிய ஒரு எல்லையற்ற இன்பம். அதன் அர்த்தங்கள் எத்தனை வேதத்திலும் அடக்க முடியாதது. நீ பரோபகாரி, எவ்வளவு அதிசய தானம் இதை அளிக்கிறாய். யுகங்கள் தான் மாறி மாறி வருமே தவிர உன் கருணைப் பரிசு தொடர்ந்து தான் அளித்துக் கொண்டிருக்கிறாய். உதிக்கும்! இந்த பிரபஞ்சத்தில் எங்கே ஒரு மண் பாண்டமும் காலி இல்லையே, அடடா எல்லாமே உன் ஜீவ நாதத்தால் நிரம்பி பொங்கி வழிகிறதே!
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Tuesday, March 27, 2018
GITANJALI

Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment