Saturday, March 3, 2018

GNANAPPANA


சோகம் தந்த ராகம் - ஞானப் பான - J.K. SIVAN

ரொம்ப நாளாகிவிட்டது. பூந்தானத்தின் ஞானப்பான மலையாள குருவாயூரப்பன் மீதான பக்திரசம் ததும்பும் வேதாந்த பாடல்களை பற்றி எழுதி. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது.

பிறந்தது முதல் மூச்சு விடுகிறோமோ இல்லையோ கர்மம் துவங்கிவிடுகிறது. அந்தந்த பிறவிக்குண்டானது மட்டும் அல்ல. பழைய மூட்டைகளையும் சேர்த்துக்கொண்டு தான். ஜீவன் ஒரு உடலை விட்டு பிரிந்தவுடன் அடுத்ததற்கு இத்தகைய கர்மங்களின் பலனுக்கேற்றபடி தான் உடலைப் பெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தந்த ஜீவனின் பிறவிக்கேற்றபடி அமையும் உடலும் அந்த கர்மபலனை அனுபவித்தாகவேண்டும். ஸத் கர்மாக்கள் நல்ல உடலை, எண்ணத்தை பெறச் செய்யும். மற்றதைப் பற்றி பேசவே வேண்டாம். புது கர்மாக்கள், நல்லதும் பொல்லாததும் உடல் மூலமும் சேர ஆரம்பிக்கும்.

நமது பூமிக்கு கர்மபூமி என்று பெயர். கர்ம பலன்களை நல்லதாக ஆக்க பெரிதும் உதவுகிறது. யார் அதைப் பற்றி நினைத்து உணர்ந்து பலன் பெறுகிறார்கள். நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறதே. பூமி தாய் ஆயிற்றே. கருணை இருக்காதா நம் மேல். நம் எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் ஏனோ நாம் புலன்களின் அடிமையாகி அழியும் பொருள்களை நாடி ஓடுகிறோம்.

விஸ்வநாதன் என்றாலே, இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களுக்கும் கருணை புரிபவன். தயாளன். நன்மை தருபவன் என்று தானே அர்த்தம். இந்த பூமியில் தான் பரமாத்மாவே பல அவதாரங்கள் எடுத்தவர். இதுவே மேலும் கீழுமாக ஈரேழு புவனங்களிலும் சிறந்தது. பூமியை பூமா தேவி என்றுதானே வணங்குகிறோம். வேதங்களே அவளை போற்றுகிறதே. அவள் குழந்தைகள் அல்லவா நாம்.

இந்த பூமி ''ஜம்புத்வீபம்'' சமுத்திரத்தின் மத்தியில் லக்ஷம் யோஜனை விஸ்தாரமானது. இந்த பூமி ஒரு தாமரை மலர் போல், நடுவே மொட்டு தான் மகாமேரு. சூரியன் பதமாக உஷ்ணத்தை அதன்மீது பாதி தந்து பகலாகவும் மீதி பாதியை விளக்கை அணைத்துவிட்டு தூங்கவைப்பது போல் இரவாகவும் காத்தருள்கிறான். நாள் தவறாமல் சுற்றி சுற்றி வந்து அருள்கிறான். பூமிக்கு ஜீவசக்தியை தருபவன் சூரியன் அல்லவா.

இந்த பூமியில் மட்டுமே நாம் ஸத் கர்மங்களை செய்து பாபங்களை தொலைத்து மோக்ஷம் பெற வழியுண்டு. ஆகவே இது யோக பூமி.

மேற்கண்ட கருத்துகளை அழகாக சொல்கிறார் நம்பூதிரி பூந்தானம் அவரது ஞானப்பான எனும் மலையாள கீதை போன்ற நூலில். சிலவற்றை இன்று அறிவோம்.

കര്‍മ്മങ്ങള്‍ക്ക് വിളഭൂമിയകിയ
ജന്മദേശമീഭൂമിയറിഞ്ഞാലും
കര്‍മ്മനാശം വരുത്തേണമെങ്കിലും
ചെമ്മേ മറ്റെങ്ങും സാധിയാ നിര്‍ണ്ണയം

Karmangalkku vilabhoomiyaakiya,
Janama desamee bhoomi yennarinjalum,
Karma nasam varuthenam engilum,
Chemme mattengum sadhiya nirnayam.

ஐயா இந்த பூமியில் தான் உங்கள் கர்மங்களின் வித்துகள் விதைக்கப்படுகிறது. தினை விதைத்தவன், வினை விதைத்தவன் அதற்கேற்ப தான் பலனை அறுவடை செய்யவேண்டும். இல்லையா? ஞாபகம் வைத்துக்கொள். இந்த பூமி ஒன்றே தான் உனக்கு அளிக்கப்பட அற்புதமான வாய்ப்பு. நல்ல கர்மாக்களை இங்கே தான் செய்ய இயலும். புண்ய பூமி இது. பழ வினைகளையும் அழிக்க முடியும் இங்கே. வேறே எங்கே சென்றாலும் அவை உன்னோடு தொடரத்தான் செய்யுமே தவிர பூமித்தாய் போல் உதவாதே .

ഭക്തന്മാര്‍ക്കും മുമുക്ഷുജനങ്ങള്‍ക്കും
സക്തരായ വിഷയിജനങ്ങള്‍ക്കും
ഇച്ഛിച്ചീടുന്നതൊക്കെക്കൊടുത്തീടും
വിശ്വമാതാവു ഭൂമി ശിവ ശിവ!

Bakthanmarkkum mumukshu janangalkkum,
Saktharaya vishayee janangalkkum,
Ichicheedunnathokke kodutheedum,
Viswa mathavu bhoomi siva! Siva!

ஓ பக்தர்களே. மோக்ஷம் தேடும் நல்லோரே, பொருள் விரும்பிகளே ,நீங்கள் தேடுவது எதுவாகிலும் அதை தந்தருள்கிறாளே இந்த பூமி மாதா. இந்த பூமியையே அளித்த காரணனே சிவ சிவா உன்னை புகழ போற்ற நன்றியோடு வார்த்தைகளை தேடுகிறேன். அகப்படவில்லையே.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...