Thursday, March 8, 2018

HARIVAMSAM 1

ஸ்ரீ ஹரி வம்ச புராணம் - ஜே.கே. சிவன்

வேத வியாசர் இயற்றிய புனித நூலான ஸ்ரீ ஹரி வம்சம் 16374 ஸ்லோகங்களை கொண்ட ஒரு ஸமஸ்க்ரித கடல். ஆதிபர்வா, விஷ்ணு பரவா, பாவிஷ்ய பர்வா என மூன்று
பகுதிகளைக் கொண்டது. முழுக்க முழுக்க ஸ்ரீ மந் நாராயணின் எட்டாவது அவதாரமான க்ரிஷ்ணன் ஜனனம், வளர்ச்சி பற்றிய சுவாரசிய சமாச்சாரங்கள் கொண்ட அற்புத காவியம் . பெயரே சொல்கிறதே ஸ்ரீ ஹரியின் வழி வந்தவர்களை பற்றி என்று. மகாபாரதத்தின் தொடர்ச்சி இது. இதுவரை நாம் அறியாத எத்தனையோ விஷயங்கள் இனி வரிசையாக வரும்.

ஹரிவம்சத்தின் பல அத்தியாயங்கள் துவாரகையை ஒட்டி நடக்கும் நிகழ்வுகள். ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முந்தைய கால கட்டம்.

எல்லாவற்றையும் நான் படித்து எவ்வளவு சுருக்கமாக எதையும் விடாமல் ;சொல்லமுடியுமோ அப்படி அதை உங்களுக்கு அளிக்க என்னோடு நீங்களும் அந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளையே வேண்டுவோம்.

NArAyaNaM namaskR^itya naraM caiva narottamam |
devIM sarasvatIM chaiva tato jayamudIrayet ||1

அது மாம்பலம் கொஞ்சம் கொஞ்சமாக தி.நகராகும் சமயம். சாயங்காலம். நல்ல கூட்டம். ஆவலாக காத்திருக்க மெதுவாக நடந்துவந்து மேடையேறி எல்லோரையும் நமஸ்கரித்து விட்டு சிவ விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் ஆரம்பிக்கிறார்.

''நாராயணம் நமஸ்க்ரித்ய நரம் சைவ நரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் சைவ ததோஜய முதீ ரயேத்..'' குரல் கம்பீரமாக ஒலித்து இன்னும் என் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

மஹாபாரதம் பற்றி நினைக்கும்போது ஹரிவம்சம் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. வியாசரின் ஒரு அற்புதமான மற்றொரு அம்ரிதம். முதல் ஸ்லோகம் ஸ்ரீமன் நாராயணனை வணங்கும்போது நரனான அர்ஜுனனை வணங்குவது எப்படி என்று யோசிக்கவே வேண்டாம். கிருஷ்ணனை வணங்கும்போது அவனது புல்லாங்குழலும் சங்கு சக்கரமும் வணங்கப்படுவதைப் போல், நாராயணன் என்றால் நர உத்தமனான அர்ஜுனனும் அதில் சேர்த்தி தான். கலைமகளான சரஸ்வதி தேவி லட்சுமி அனைவறையும் வணங்கி ஜெயா என்கிற ஈடிணையற்ற நீதி, சாஸ்த்ர பக்தி நூலான மகாபாரதமும் நினைக்கப்படுகிறது.

dvaipAyanoShThapuTaniHsR^itamaprameyaM
puNyaM pavitramatha pApaharaM shivaM ca |
yo bhArataM samadhigacChati vAcyamAnaM
kiM tasya puShkarajalairabhiShecanena ||2||

கிருஷ்ண த்வைபாயனர் எனப்படும் வியாச முனியின் திருவாக்கில் உதித்த மஹாபாரதம் ஒரு புனித காவியம். பாபம் தொலைக்கும் இதிகாசம். அதைக் கேட்பது ஆயிரம் கங்கையில் ஸ்னானம் செய்த பலனைத் தருமே.

jayati parAsharasUnuH satyavatIhR^idayanandano vyAsaH |
yasyAsyakamalagalitaM vA~NmayamamR^itaM jagatpibati ||3

ஆஹா அந்த புண்யவதி சத்யவதி, பராசரர் தம்பதியருக்கு பிறந்த வியாசன் அவர்களுக்கு மட்டுமா பரம சந்தோஷம் கொடுத்தார். நமக்கும் அவர் ஒரு வரப்பிரசாதம் அல்லவா. அவர் திருவாக்கில் பிறந்த அமிர்தமாகிய மஹாபாரதம் நமக்கு ஒரு ஈடிணையற்ற பரிசல்லவா. அவர்களுக்கும் மஹாபாரதத்துக்கும் நமஸ்காரம்.

yo goshataM kanakashR^i~NgamayaM dadAti
viprAya vedaviduShe bahuvishrutAya |
puNyAM ca bhAratakathAM shR^iNuyAcCha tadvat
tulyaM phalaM bhavati tasya ca tasya caiva ||4

ஒரு உதாரணம். வியாசரின் மஹா பாரதம் கேட்பதால் வரும் லாபம் வைதிக பிராமணர்களுக்கு நூறு பசுக்களை தானமாக அளித்த பயனை விட அதிகம்..

shatAshvamedhasya yadatra puNyaM
catuHsahasrasya shatakratoshca |
bhavedanantaM harivaMshadAnAt
prakIrtitaM vyAsamaharShiNA ca || 5

yadvAjapeyena tu rAjasUyAd
dR^iShTaM phalaM hastirathena cAnyat |
tallabhyate vyAsavacaH pramANaM
gItaM ca vAlmIkimaharShiNA ca ||6

இந்த வியாசரின் ஹரிவம்ச நூலை ஓர் கற்றறிந்த பிராமணருக்கு நகலெடுத்து கொடுத்தால் அதால் கிடைக்கும் புண்யம் என்ன என்பதை சொல்லப்போகிறேன். கீழே விழுந்து விடாமல் எதையாவது கெட்டியாக பிடித்துக்கொண்டு செவி மறுக்கவும்.

''நூறு அஸ்வமேத யாகம், நாலு லக்ஷ வேத பாராயணம், ராஜ சூய யாகம், வாஜபேய யாகம் எல்லாம் ஸ்ரத்தையாக செய்த பலன், நிறைய யானைகள், தேர்கள் தானம் செய்த பலன். இது ஏதோ நான் உங்களை படிக்க செய்வதற்காக சொல்வதில்லை சார். வால்மீகியும் வியாசரும் சேர்ந்து ஒன்றாக மேலே சொன்ன ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.


yo harivaMshaM lekhayati yathAvidhinA mahAtapAH sapadi |
sa jayati haripadakamalaM madhupo hi yathA rasena lubdhaH ||7

எவன் இந்த ஹரிவம்சத்தை அப்படியே நகல் எடுக்கிறானோ, அவனுக்கு, தெவிட்டாத தேன் சொட்டும் மலரின் உள்ளே தன்னை மறக்கும் பூ வண்டாக, ஸ்ரீ ஹரியின் திருவடி நிழலில் இடம் ரிஸர்வாகி விட்டது.

pitAmahAdyaM pravadanti ShaShThaM
maharShimakShayyavibhUtiyuktam |
nArAyaNasyAMshajamekaputraM
dvaipAyanaM veda mahAnidhAnam || 8



ஸ்ரீமன் நாராயணன் முதலாக தோன்றிய பாரம்பரியத்தில் ஆறாவதாக அவதரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணத்வைபாயனரே உங்களுக்கு நமஸ்காரம். உங்களால் தானே எண்ணற்கரிய அற்புத வேத ஸ்லோகங்கள், புராணங்கள், இதிகாசம் இன்னும் எத்தனையோ உலகத்துக்கு கிட்டியது. நாராயணனின் அம்சமே அல்லவா நீங்கள். பராசரரின் ஒரே புத்ரரான உம்மைசாஷ்டாங்கமாக நமஸ்கரித்து இனி புனித நூலான ''ஸ்ரீ ஹரி வம்சம் '' துவங்குகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...