Monday, March 12, 2018

churchil





ஒருவேளை இது சரியான தீர்க்க தரிசனமோ?
J.K. SIVAN

இந்தியாவில் சுதந்திர தாகம் வலுத்து விட்டது. என்ன காரணம் என்று பாவம் அந்த கிழவருக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் இத்தனை ஜன சமுத்திரம் சுதந்திரமான இந்திய தேசம் வேண்டும் என்ற தேசப்பற்று கொண்டு இருக்கிறார்களே என்று வியந்தார். கிழவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்.

ஆனால் இந்தியாவைத் தனது பிடிக்குள் வைத்திருந்த அந்த வெள்ளை உருளைக்கிழங்கு முக கெட்டிக்காரருக்கு வெகு நன்றாக நமது நாட்டைப் பற்றி, நமது தேச தியாகம், உரிமை, நாடாளும் திறமை, நமது எண்ணங்கள் அத்தனையும் தலைகீழாக அத்துப்படி.

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிடுவோமா, வேண்டாமா, தள்ளிப்போடுவோமா கொஞ்சகாலம் என்றெல்லாம் அலசுகிறார்கள்.

சரி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று வெள்ளை உருளைக்கிழங்கிடம் கேட்கிறார்கள். அவர் என்ன சொல்கிறார் நினைக்கிறார் என்பதற்கு முன் ஒரு கனமான சுருட்டை பற்ற வைக்கிறார். அது இல்லாமல் அவர் மூளை வேலை செய்யாதே. புகைச்சலான விஷயம் பேசும் முன் கொஞ்சம் புகை வேண்டாமா?

எல்லோரையும் ஆழமாக நீல கண்களால் பார்த்துவிட்டு தொண்டையை கணைத்துக் கொண்டு வெ .உ. பேசினார்.

''நான் நநன்றாக யோசித்து பார்த்தாயிற்று. இப்போதைக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க தேவையில்லை. ஒரு தேசம் சுதந்திரம் அடைய நான் குறுக்கே நிற்கவில்லை. அதிகாரத்தை யார் கையில் கொடுப்பது என்று பார்த்தால் சரியான ஆட்களே கண்ணில் தென்படவில்லையே.

இவ்வளவு நாள் இந்த பெரிய தேசத்தை இந்த பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்டது. ஏதோ ஒரு நெறி முறை வைத்து அதன் படி ஆட்சி நடந்தது. எனக்குள் ஒரு அச்சம்.

அதிகாரம் ஒருவேளை அயோக்கியர்களிடம், போக்கிரிகளிடம்,பொறுப்பற்றவர்களிடம் போய்விட்டார்கள். சரியான தகுந்த எதிர்கால சிந்தனை அற்ற, குறிகிய எண்ணம் கொண்ட, வைக்கோல் போன்ற தகாத ஆசாமிகளிடம் போய்விடுமோ? என்ற பயம். ஆளுக்கு ஆள் சுயநலத்தில் இந்த தேசத்தை கூறு போட்டுவிடுவார்களோ? ஒருவரை ஒருவர் தூஷித்து சண்டை சச்சரவுகளில் காலம் தள்ளினால் நாட்டின் நலம் என்னாவது ? இந்த அரசியல் சூதாட்டத்தில் இந்தியா என்கிற மாபெரும் தேசம் சூறையாடப் படுமோ? சிதைந்து சின்னாபின்னமாகிவிடுமோ? இப்படியே போனால் சுதந்திரமான தேசத்தில் சுதந்திரமான காற்றுக்கும் சுத்தமான நீருக்கும் கூட காசு, வரி போட்டுவிடுவார்களோ"' ..... ஐயோ என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே ----

''Sir Winston Churchill' s .argument against granting india / Pakistan Independence. .
. .
"Power will go to rascals, rogues, freebooters. . . .
All leaders will be of low caliber & men of straw. . .
They'll have sweet tongues & silly hearts. . .
They will fight amongst themselves for power & the two countries will be lost in political squabbles. . . .
A day would come when even air & water will be taxed."




வெ .உ. 64 வருஷங்களுக்கு முன் சொன்னதை தான் நான் எழுதியிருக்கிறேன். கூட்டியோ குறைத்தோ சொல்லவில்லை. ஒருவேளை இது சரியான தீர்க்க தரிசனமோ, அப்படித்தான் நடந்ததோ, நடக்கிறதோ, நடக்குமோ? இல்லை அது தப்பாகவே கனக்குப் போட்டிருக்கிறது. நாம் அப்படியெல்லாம் இல்லை. மிகச் சிறந்த திறமையாளர்கள் என்று நிரூபிப்போமா. சுபிக்ஷமாக வாழ்வோம். உலகத்துக்கு ஒரு வழிகாட்டியாக இந்தியா கொடிக்கட்டி பறக்கட்டும். இது ஒரு நம்பிக்கை. கனவு அல்ல.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...