Sunday, March 18, 2018

GOSSIP

  கூட்டத்தில் கேட்ட குரல்கள் -  J.K SIVAN

அதோ ஒரு ஆள் மரத்தடியில் பெரிய தாடியோடு உட்கார்ந்து இருக்கிறானே யார் தெரிகிறதா?
தாடியில் முகமே தெரியவில்லையே  எப்படி தெரிந்து  கொள்வது?
பேர் சொன்னால் புரியுமா?
அப்படி என்ன பிரபல பேர். குப்புசாமியா? கோபாலசாமியா?
இல்லை மிடாஸ்
குடிகாரனா?
இல்லை எதை தொட்டாலும் தங்கமாக்கியவன். அவன் சாப்பிடும் ரொட்டியை தொட்டான். பொன்னாகியது. பெண்ணை தொட்டான் பொன்னாச்சியானாள் .
பிடித்து உள்ளே போட்டுவிடுவார்களே
பரவாயிலேயே. கைகளை வெட்டிக்கொண்டான்.  இனிமேல் எதுவும் தங்கமாகாதே. யாராவது வருவோர் போவோர் வாயில் ஏதாவது போட்டால் அன்றைய பசிக்கு, இப்படியே காலம் ஓடுமே.


கையா?  யார் காலையோ வெட்டி  ரகசிய  அறை திறந்து காசு எடுத்துக்கொண்டு போனதாக அல்லவோ எவனெவனோ பஸ்ஸில் பேசிக்கொண்டு போனான்?

என்ன எழவோ? எனக்கு வேண்டாம் இந்த கதை.  

அங்கே என்ன கூட்டம்.  யாரோ ரெண்டு பேர்களை சுற்றி?

அய்யயோ  ஊரே உலகமே அவர்களை பற்றி தான் பேச்சு.  தூங்கு மூஞ்சி பேங்க் என்று ஒன்றாம். ஆறு ஏழு வருஷம் தூக்கத்திலேயே செயல்பட்டதால். அதன் அத்தனை பணத்தையும் ஏதோ ஒரு பெருச்சாளி சுரண்டி எடுத்துக்கொண்டு போய்விட்டதாம். இப்போது தானே எழுந்து என் பணத்தை காணோம். கூட இருந்த கோபால் தூக்கிக்கொடுத்து விட்டான் என்று கத்துகிறது.  கெட்டிக்கார ரெண்டு பெருச்சாளிகளும் சொந்தம். மாமன் மருமான் அதை எங்கெங்கெல்லாமோ கொண்டு வைத்திருக்கிறதை தேடி என்ன  பயன் என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.  எனக்கு என்னவோ அந்த ரெண்டு பெருச்சாளிகள் மேல் பரிதாபம்.

ஏன் ?

பணம் ஒருவனை மேலே ஏற்றி கீழே பாதாளத்தில் தள்ளி விடுமே. இப்போது அவனை சுற்றி வக்கீல்கள், கணக்காசாமிகள், பொய் சொல்லிக்கொடுப்பவர்கள்.  நண்பர்கள் கிடையாது. எவனும் இவனைத் தெரியுமே என்று காட்டிக்கொள்ளாத தனிமை. எங்கும் காரி உமிழும் கூட்டம். பணம் இதையெல்லாம் மீட்டுக்கொடுக்குமா.  சொந்தஊரில்  காலை வைக்க முடியாது. வைத்தாலும் நிம்மதி பல வருஷங்கள் கிடையாது.

இதெல்லாம் சும்மா.

எத்தனையோ ஜாம்பவான்கள் இதெல்லாம் ஜுஜுபி என்று சந்தோஷமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி  பட்டிமன்றம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.  எனக்கு தெரிந்த ஒரு கிழவர்  செய்யாத அக்கிரமம் இல்லை. அவரைப் போல் தியாகி,  பரிசுத்த கையழகர் கிடையாது என்று பேர் வாங்கி  நூறு நோக்கி போகிறார் என்று என் நண்பன்  சொல்வான்.

யார் அது என்று கேட்டபோது  போ போ தெரியாதது மாதிரி நடிக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...